யாளி (ஆளி) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டு எழுதியுள்ளோம்ம்.ம்
புது கோணத்தில்
ஆளி என்கிற சிங்கம் சைவ மதத்தை குறிக்கிறது..
யானை புத்த மதத்தை குறிப்பதாக..
பிரிட்டிஷ் ஆவணத்தில் உள்ளது..
ஆளி இனம்.. சிங்கம்
மீளி இனம்.. யானை
(அகநானூறு 381)
அப்போது ஹிந்து என்கிற வார்த்தை இல்லாததால்.. சைவர்கள்
ஆளி இனம் என்கிற வார்த்தையை பெருமையாக சொல்ல பயன்படுத்தி இருக்கலாம்..
இருந்தாலும் எனக்கு சரியாக தெரியவில்லை..
எனக்குமட்டுமல்ல பலருக்கும் சரியாக தெரியாது என்பதே உண்மை..
ஆனால் யாளி எப்போதும் யானையை அழிப்பது போலவே உள்ளது..
யானையின் தந்தத்தை சாப்பிடும் யாளி முதல் படத்தில்..
யானையை விழுங்கும் யாளி என பல கோணத்தில் சிற்பங்கள் உள்ளது..
யாளி என்கிற விலங்கே உலகத்தில் கிடையாது..
அது வாழ்ந்ததுமில்லை..
(டைனோசரஸ் படிமங்களை கண்டுபிடித்தவர்கள் யாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை..25000 ஆண்டுக்கு முன் யாளி வாழ்ந்தது என்பது பொய்)
(சீனாவில் உள்ள டிராகன் விலங்கு சிற்பமும் ஏதோ ஒரு அடையாளத்தை குறிக்கிறது.. அது அரசாக இருக்கலாம் அல்லது மதமாக இருக்கலாம்)
அது ஒரு அடையாளம்..
ஒரு மதம் இன்னொரு மதத்தை மேற்கொண்டதின் அடையாள சிற்பம்...
ஓடிசாவில் இருந்து தமிழகம் வரை உள்ள கோவில்களில் மட்டுமே இந்த யாளி உள்ளது..
கற்கோவில்களில் மட்டுமே உள்ளது..
கற்கோவில்கள் 800 AD க்கு பிறகே இங்கு உள்ளது..
யாளி சிற்பம் 3 விலங்குகளை கலந்து செய்துள்ளார்கள்..
இன்னும் இறங்கி பார்த்தால் சைவ சமய கோவில்களில் மட்டுமே யாளி உள்ளது..(not verified)
அதுவே யாளியை கொல்லும் குதிரை சிற்பம் வைணவ கோவில்களில் உள்ளது..
அதுவும் யாளி குதிரையை கொல்ல எத்தனிக்கும்போது ஒரு வைணவ வீரர் குதிரைக்கு கீழ் ஒளிந்து இருந்து தந்திரமாக அதன் உறுப்பில் குத்தி கொல்வது போலவும் அவருக்குப்பின் ஒருவர் குதிரையை தாங்கிப்பிடித்தப்படி உள்ளார்..
சைவத்தை வேட்டையாடும் தந்திரத்தை சிற்பத்தில் வைணவர்கள் வடித்துள்ளதைப்போல் தெரிகிறது.
குதிரை வைணவ மதத்தை குறிக்கலாம்..
(Not verified)
ஏதோ ஒரு மனிதனை கொல்லும் யானை
யானையை கொல்லும் யாளி
யாளியை கொல்லும் குதிரை
மாற்றம் மதத்திலும் உண்டு
என்பதற்கு இதுவே சிறந்த உதாரண சிற்பங்கள்..
இந்தளவுக்கு எவனும் ஆராச்சி செய்து இருக்கமாட்டான்..
For photos https://m.facebook.com/story.php?story_fbid=1726763520763497&id=100002895981728
#blog #religion #india #China #dragon #Saiva #yali #Vainava #Horse # #buddha #Elephant
Krishna Kumar G
××××××××
3 Oct 2021
ஆளி (யாளி) பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவு போட்டு இருந்தேன்..
அப்பொழுது எனக்கு தோன்றியது இது ஒரு குறியீடு ..
அது மதமாக இருக்கலாம் என்பது
ஆனால் உண்மைக்கு அருகில் நெருங்கிவிட்டேன்..
அது மதமும் அதை சார்ந்த அரசனின் குறியீடு..
3ம் சோழனை சிறையிட்ட விழுப்புரம் மாவட்ட மலை ஒன்றில் இதே சிற்பம் உள்ளது.
பல்லவன் சிங்கமாகவும் (யாளி)
சோழன் யானையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது ..
யாளி என்பது ஒரு குறியீடு என்பது உறுதியாகிறது.
பல இடங்களில் உள்ள யாளி யானையை விழுங்கும் சிற்பமும் இதை தான் குறிக்கலாம் ..
https://youtu.be/QmzXwsnEO7A
Tamil navigation என்கிற காணொளி பக்கத்தில் இந்த சிற்பத்தை காணலாம்..
(ஆனால் அது யாளி குறித்த பதிவல்ல)
இது சோழன் வீழ்ந்தை குறிக்கிறது
குறிப்பாக சொன்னால் யாளி/ஆளி சோழர்கள் வடித்த சிற்பத்திலும் கோவில்களிலும் காணப்பட வாய்ப்பில்லை.
யாளி/ஆளி Decoded
++++++++
6 March 2023
யானையை கொல்லும் யாளி
யாளியை வேட்டையாடும் குதிரை
குதிரையை கொல்லும் மனிதன்
மனிதனை கொல்லும் தெய்வம்
இது ஞானத்தை தூண்டி
மெய்யியல் கோட்பாட்டை குறிக்கிறது .
இது கோவில் சிற்பங்கள் வழியாக உவமையாக சொல்லப்பட்டுள்ளது .
ஒரு அரசனை கொல்ல இன்னொரு அரசன் வருவான் .