Truth Never Fails

Tuesday, August 27, 2019

வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுகள்

 என் வாழ்வில் நடந்த 2 சம்பவத்தை பற்றி சொல்கிறேன்.. அதற்கு இடையே உள்ள தொடர்பு என்னை அடிக்கடி சிந்திக்க  வைக்கிறது..


11ம் வகுப்பு படிக்கும்போது என்  பைக்கில் நான்  செல்லும்போது என் தெரு முனையில் ஒரு சின்ன பயன் கத்திக்கொண்டே என் பின்னால் ஓடி வருவான்.. என்னிடம் நன்றாக பேசுவான்..


என் பள்ளியில் 2ம்,3ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான் என நினைக்கிறேன்..


ஒரு நாள் +2 பள்ளி முடிந்து (special class) வெளியே வரும்போது அவன் பள்ளிக்கூட வாசலில் நின்றுக்கொண்டு இருந்தான்..


என்னடா வீட்டுக்கு போகலையா என்றேன்..

இல்லைனா ஆட்டோ வரல என்றான்..


சரி என் தெரு பையன் என்பதால் என் சைக்கிளில் ஏற்றுக்கொண்டேன்..


பின் கேரியரில் உட்கார பிடிக்கவில்லை நான் முன்னே பாரில் அமர வேண்டும் என்றான் ..


சரி  என்று அமர வைத்து 1 கிமீ சென்று இருப்பேன்..


திடீரென்று சைக்கிளின் முன் சக்கரத்தில் காலை விட்டுவிட்டான்..


பின் சக்கரம் மேலே தூக்கி என்னையும் சேர்த்து வீசியது..


இருவரும் சாலையில் விழுந்தோம்..


பின்னால் ஒரு பேருந்து வேகமாக வந்ததை பார்த்து. அவனையும் சைக்கிளுடன் இழுத்து ஓரமாக போட்டேன்..


அவன் கால் வெட்டி ரத்தம் வர தொடங்கியது..


உதவிக்கு அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டேன்..


யாரும் முன்வரவில்லை..எதிரில் சைக்கிளில் வேறு பள்ளியில் படிக்கும் என் நண்பன் ரத்தினக்குமார் வந்தான்..(இவனைப்பற்றி புறகு சொல்கிறேன்)


அவன் அவனிடம் இருந்த கைக்குட்டையை வைத்து கட்டு கட்டினான்..


அருகில் இருந்த ஒரு கடைக்கு அந்த பையனை தூக்கி சென்றேன்..

அந்த கடைக்காரரை அந்த பையனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னேன்..

அவர் உதாசீன படுத்தினார்..


நான் என் நண்பனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு..

அருகில் 1 கிமீல் என் வீட்டுக்கு சென்று வண்டி எடுத்து வருவதாக சொன்னேன்..


சரி என்று..

வீட்டுக்கு சைக்கிளில் வேகமாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு வரும் வழியில்..


அந்த பையனின் தாயார் அந்த பையன் வீட்டுக்கு வராமல் இருப்பதால் தெரு முனையில் காத்துக்கொண்டு இருந்தார்..


அவரிடம் விஷயத்தை சொன்னேன்..

நான் மருத்துவமனைக்கு அழைத்து செலப்போவதாக சொன்னேன்..


அவர் நீ பயப்படாத ..


நீ போய் அவனை முதல இங்க கூட்டிட்டு வா என்றார்..


அவர் சொன்னப்படியே வேகமாக சென்று அவனை கொண்டு வந்து சேர்த்தேன்..


பிறகு அந்த பையனை மருத்துவமனையில் சேர்த்தார்கள்..


காலில் எலும்பு முறிவு ஏற்றப்பட்டு அந்த பையன் கட்டுட்டுடன் இருப்பதை பார்க்கும்போதெல்லாம் மிக கஷ்டமாக இருக்கும்..


அந்த பையன் பெரு ஹரி.. ஹரிஹரன்


(பிறகு நான் அங்கிருந்து வீடு மாறிவிட்டேன்)

++++++

பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஒரு பெட்ரோல் பங்கில் 

ஒரு பையன் வந்து அண்ணா எப்படி இருக்கீங்க என்றான்..


எனக்கு அந்த பையன் யாருன்னே தெரியல..


பிறகு அவன் தான் ஹரி உங்க தெருவுல இருந்தேன் என்று சொல்ல..


நான் வேறு எதுவும் பேசவில்லை வண்டியை நிறுத்திவிட்டு அவன் காலை பிடித்து பார்த்தேன்..


அவன் என்ன பண்றீங்க..என்ன பண்றீங்க

என்று 

அதுலாம் அப்பவே சரியாகிடுச்சி என்றான்..


இருதாலும் அவன் காலில் சிறு தழும்புகள் இருந்தை பார்த்தேன்..


அவனிடம் sorry டா என்றேன்..

அவன் என்னனா இப்படி பண்றீங்க என்றான்..


(பிறகு ஒரு திருமனத்தில் அவன் என் நண்பனின் உறவினர் என்பது தெரிந்தது (அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்) )


(என்னடா பிறகு சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்,இந்த கதைக்குள் தொடர்பு நிறையவே உள்ளது அதுமட்டுமல்ல அவைகளை சொன்னால் இது பெரிய பதிவாக சென்றுவிடும் என்பதால்..)

++++++

தற்போது 2019 மே எனக்கு நடந்த விபத்தில்


என்னை இடித்த நபரின் பெயர் ஹரி,.. ஹரிஹரன்..


அவனுக்கும் காலில் மட்டும் தான் அடி..

அதேப்போல்..


÷÷÷÷÷÷


இது ஜோசியம் அல்ல..


+2 படிக்கும்போது கைக்குட்டையை வைத்து கட்டுகட்டிய என் நண்பன் ..

ரத்தினக்குமார்

தற்போது ஒரு ஆண் செவிலியர்..


என் தந்தை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அவன் தான் அவ்வப்போது பார்த்துக்கொண்டான்..

(அப்போது அப்போலோவில் செவிலியராக வேலை செய்துக்கொண்டு இருந்தான்)


 10 ஆண்டுக்கு முன்பு ஒரு கட்டத்தில் என் அப்பாவும் அம்மாவும் வெவ்வேறு மருத்துவமனையில் இருந்தார்கள்..(NLC GH to CMC வேலூர்)

நான் வேலூருக்கும் நெய்வேலிக்கும் தினமும் சென்றுக்கொண்டு இருந்தேன்..

8 மணி நேர பயணம் அது..


அப்போது அவன் வீட்டில் இருந்து தான் எனக்கும் மருத்துவமனையில் இருந்த என் அப்பாவுக்கு ஒரு 10 நாட்களுக்கு உணவு கொடுத்தார்கள்..


இதை நான் அவர்களிடம் கேட்டு பெறவில்லை..

அவர்களாகவே கட்டாயப்படுத்தி செய்தார்கள்..

(மிக நல்ல குடும்பம்)


அவன் தற்போது என் முகநூலில் இல்லை தொடர்பிலும் இல்லை..


ஆனால் எனக்கு விபத்து நடந்து நான் மருத்துவமனையில் இருந்தபோது என் தம்பிக்கு கால் செய்து இருந்ததாக சொன்னான்..

(என்னை மேல் சிகிச்சைக்கு பெங்களூர் அழைத்து வர சொன்னதாக சொன்னான்)


தற்போது வரை இப்படி பல விஷயங்களில் உதவிய நண்பர்கள்க்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்..


ஏதோ தொடர்பு நம்மை தொடர செய்கிறது

அன்பை பகிர்தலில்..


நான் இந்த பதிவை தொடங்கியதுக்கும் முடித்ததுக்கும் தொடர்பு இல்லை..


ஒருவேளை இருக்கலாம்..


Krishna Kumar G