Truth Never Fails

Saturday, July 14, 2018

சொந்தமில்லா விருந்து

 சென்றாயன் சொல்லுற கதை எனக்கும் நடந்து இருக்கு..


தினமும் இரவு கையேந்தி பவனில் சாப்பிட தொடங்கிய காலம் 2ரூ 1 பரோட்டா,

ஒரு நாள்

2 நண்பர்கள் ஏன் கிருஷ்ணா காசை வீணாக்குற..


(பக்கத்தில் பெரிய கல்யாண மண்டபம் இருக்கும்..)

அங்க தான் நாங்க போர் அடிக்கும்போது போய் சாப்பிடுவோம் நீயும் வா என்றார்கள்..


நான் பயந்துகொண்டு வர மறுத்துவிட்டேன்..


பிறகு அவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவிட்டு வருவதை கவனித்தேன்..


சில நாட்கள் கழித்து அவர்களுடன் ஒரு நாள் சென்றேன்.. நேரா சாப்பிட போய்டனும் யார்கிட்டயும் பேச கூடாது என்று அறிவுரை கூறி அழைத்து சென்றார்கள்..


பயங்கர பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது.. தலையை குனிந்துகொண்டே சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்..


அவ்வளவு தான் இதுக்கு ஏன் பயப்படுற.. என்று என்னை உற்சாக படுத்தினார்கள்..


பிறகு இன்னொரு நாளும் அப்படியே சென்றது..


சில நாட்கள் கழித்து 3ம் முறை ஒரு பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி போடுவாங்க போலாம் வா.. என்றார்கள் எனக்கு பயமாக இருந்தது.. 

ஏன்னா அங்கு குறைவாக தான் ஆட்கள் வருவார்கள்..

எல்லாருமே அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள்..

நாம தானியா தெரிவோம்

நாம மாட்டிப்போம் என்றேன்..


ஏன் இப்படி பயப்புடுற.. நாங்க எத்தின பாய் வீட்டு விசேஷத்துல சாப்பிட்டு இருக்கோம்


 என்று எனக்கு ஆறுதல் சொல்லி அழைத்து சென்றார்கள்..


வழக்கம் போல உள்ளே நுழைந்து நேராக சாப்பிட சென்றோம்..


பாதி சாப்பிட்டு இருப்போம்..


ஒரு நபர் எங்களையே பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்து அவர்களிடம் சொன்னேன்.. 


ஒரு ஆள் நம்மள கண்டுபிடிச்சிட்டான் அப்படியே எழுந்து போய்டுவோம் என்று சொல்லி எழுந்தோம்..


அனால் அதற்குள் அந்த ஆள் வேகமாக எங்களிடம் வந்தார்..

நீங்க பெண் வீடா மாப்பிளை வீடா என்றார்..


இதை நாங்க எதிர் பார்க்கவே இல்லை..

3பேரும் முழிப்பதை பார்த்த அவர்..


எங்களை உட்கார சொன்னார்..

பிரியாணியை இலையில் வைத்தார்..

சாப்பிடுங்க என்றார்.. 


எப்படி சாப்பிடுவது ஒரே அசிங்கமாக இருந்தது..


சாரி சார் என்றோம்..


சாப்பிடாம 3 பேரும் வெளியே போக கூடாது என்று முறைத்து பார்த்துக்கொண்டே நின்றார்..


உணவு தொண்டை குழிக்குள் இறங்கவே இல்லை..

4 பீஸ் கறி வேறு வைத்துவிட்டார்..


மன கஷ்ட்டதுடன் சாப்பிட்டு முடித்தவுடன் அவர் மீண்டும் வந்து திருப்தியா சாப்பிட்டிங்களா என்றார்..

வேறு ஏதாவது வேண்டுமா என்றார்..

வேண்டாம் என்று

வெளியே வந்த பிறகு..

நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது..


மீண்டும் ஏன் கிருஷ்ணா பயப்படுற இதுலாம் சாதாரண விசியம் என்றார்கள்..


பிறகு நான் இதுபோல் செல்லவே இல்லை..


எவ்வளவு ஆனாலும் காசு கொடுத்து தான் சாப்பிடணும்.. இதுபோல் செய்ய கூடாது என்பது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது..


இன்று பரோட்டா 10ரூபாய்..


#blog


(அந்த பாய் மீது தவறு இல்லை, அவர் சாப்பிட தான் வைத்தார்.. தவறு எங்கள் மீது தான் இருந்தது)


அழைக்கப்படாத விருந்து நமக்கு சொந்தமானதில்லை

சில நேரங்களில் அழைக்கப்பட்ட விருந்து கூட நமக்கு சொந்தமில்லை.


@krish

No comments:

Post a Comment