சென்றாயன் போல நானும் தலை முழுவதும் கலர் அடிச்சி இருக்கேன்.. இது எதேர்ச்சையாக நடந்தது..
சலூன் சென்று
சும்மா 4 முடிக்கு மட்டும் ஓரமாக brown கலர் அடிக்க சொன்னேன்..
அதுக்கு முன்னாடி 2 முறை அப்படித்தான் அடிச்சேன் நல்லா இருந்தது..
(புது பையன் வேலைக்கு இருந்தான்)
சொல்லிட்டு அமர்ந்தேன்..
இது natural போடட்டுமா என்றான்..
போடுங்க என்றேன்..
நான் நினைத்தேன் இது natural conditioner போல என்று.. கலர் போடும் முன்பு தலையை கழுவுவார்கள்.
அது பார்க்க பச்சை நிற ஷாம்பு போல இருந்தது
தலை முழுவதும் போட்டான்.
போட்ட பிறகு தான் முடிகள் இறுகவும் இது கலர் என்று தெரிந்தது..
உடனே கழுவினேன்..
ஆனால் அதற்குள் கலர் ஏறிவிட்டது..(brown)
என்ன செய்வதெனவும்
எப்படி வெளியே போவது என்றும் தெரியவில்லை..
(சென்னை என்றால் கூட சமாளித்து விடலாம்)
அந்த பையனுக்கு கலர் brush கொண்டு நுணுக்கமாக அடிக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை..
தலை விதி என்று..
விடுதிக்கு
போய் குளித்துவிட்டு படுத்து தூங்கிவிட்டேன்..
எழுந்து பார்த்தால் நெற்றியெல்லாம் பொறி தட்டி அலர்ஜி வந்துவிட்டது..
திரும்பவும் சலூனுக்கு போய் நடந்ததை சொல்லப்போனால் வேறு ஒருவர் இருந்தார் அவர் தான் முதலாளி.. அவரிடம் நடந்ததை சொன்னேன்..
அவர் அந்த பையன் புதுசு..
என்று என்னிடம் சொல்லிவிட்டு..
மொட்டை அடித்துக்கொள்ள சொன்னார்..
எனக்கு விருப்பமில்லை..
பிறகு ஒரு வாரம் அப்படியே கடந்தது..
பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை..
பலர் கிண்டல் அடித்தார்கள்..
(அந்த கோலத்தில் நாபகமாக ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை)
பிறகு ஓய்வு எடுக்கும்போது ஒரு ஐடியா வந்தது..
உடனே அதே சலூனுக்கு சென்று கருப்பு டை அடிக்க சொன்னேன்.. Too late idea..
மீண்டும் முடி கருப்பானது.. ஆனால் அதீத கருப்பானது..
பிறகு காலப்போக்கில் அதுவும் காணாமல் போனது..
ஆனால் அந்த அலர்ஜி சரியாக 4 வருடங்கள் எடுத்துக்கொண்டது..
அதன் வடுக்கள் இன்றும் உள்ளது..
பேர்கண்டி பிறகு கலர் அடிப்பதையே விட்டுவிட்டேன்..
14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை..
இன்றும் கலர் தலைகளை பார்க்கும்போது எனக்கு அந்த நாபகம் வரும்..
இது என்ன கலரு நான் அடிக்காத காலரா என்கிற கர்வமும் வரும் 😂🤣😎
இப்போது நவீன வண்ணங்கள் non toxic கலவைகள்
உள்ளது.. விரைவில் அடிக்க நேரிடலாம் 🤔👍🤣😂😎
#blog
Krishna Kumar G
No comments:
Post a Comment