மேல் சாதி பெண்ணை கல்யாணம் பண்ண தான் திட்டம்போட்டு சாதியை ஒழிக்க சொல்லுறானுங்க.. என்று சொல்லும்போது..
டேய் பையன் பையனை கல்யாணம் பண்ணுற காலம்டா இது.. (சட்டம் வந்துடுச்சு)
எங்கடா வாழ்றீங்க..
சரி உங்க பெண்ணை உங்க சாதி பையனுக்கே கல்யாணம் பண்ணி வைங்க..
ஆனால் பிறகு அவர்களுக்குள் கருத்து வேற்பாடாகி விவாகரத்து ஆன பிறகு..
Matrimonyயில் இரண்டாவது திருமணத்துக்கு caste no bar என்று ஏன்டா கொடுக்குறீங்க ?
ஒரு வாட்டி செஞ்சிட்டா சாதி போய்டுமா ?
ஆண் பெண் திருமணத்தில் மட்டுமா சாதி பார்க்குறீங்க..
செத்த பிணத்தை அடக்கம் செய்ய கூட சாதி தான் பார்க்குறீங்க..
இது எங்க சுடுகாடு அது உங்க சுடுகாடு என்று..
இங்க சாதியை காப்பாத்துறேன்னு மாயையான விசயத்துக்காக உங்க நிம்மதியை தான் நீங்க கெடுத்துக்குறீங்க ..
இந்த சாதியில் பிறந்ததால்
நாங்கள் அறிவு திறமை உள்ளவர்கள் என்றும்..
அந்த சாதியில் பிறந்ததால் அறிவும் திறமையும் இல்லாதவர்கள் என்றும்..
ஒன்றுக்கும் பொருந்தாத கருத்தை வேறு பேசுகிறீர்கள்..
அறிவுன்னா எதுன்னு முதல்ல சரியா புரிஞ்சிக்குங்க..
பிறகு அறிவுக்கும் திறமைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிஞ்சிக்குங்க.
இயல்பான வாழ்க்கையை கஷ்ட்டப்படுத்திக்காதீங்க
இதோ புயல் வந்தது..
சாதி பார்த்தா அடித்தது..
எல்லோருக்கும் பெய்யும் மழை (வள்ளுவர்)
தீ எனக்கும் சுடும் உனக்கும் சுடும்..
எதிலும் வேறுபாடு இல்லை..
பிறப்பால் வர்ணத்தால் மட்டும் எப்படி வேறுபாடு வரும் ?
#blog #caste
Krishna Kumar G
No comments:
Post a Comment