ஒரு நாட்டை கைப்பற்றியதும் அந்த நாட்டின் பூர்வ குடிகளை அடிமைகளாக்குவது வழக்கம்.
அவர்களுக்கு எந்த உரிமையும் தராமல் முன்னேற விடாமல் ஒதுக்கி வைப்பதும் உலகில் நடப்பதே..
பூர்வ குடிகள் தான் இந்தியா முழுவதும் அடிமைகளாக உள்ளனர்..
வந்தவன் எல்லாம்
அவனை ஆள்கிறான்..
நில உரிமை கொடுத்தால் முன்னேறிவிடுவான்
கல்வி உரிமை கொடுத்தால் முன்னேறிவிடுவான்
வேலைவாய்ப்பில் உரிமை கொடுத்தால் முன்னேறிவிடுவான்.
என்கிற பயம் அவர்கள் மத்தியில் இன்றும் இருக்கிறது..
இந்திய குடியரசு உருவான பிறகு :
நிலம் கொடுத்தால் அதை ஏமாற்றி விலை கொடுத்து வாங்கி பிடுங்கி கொள்கிறான்..
(பஞ்சமி நிலங்கள் 90% இப்போது உரியவர்களிடம் இல்லை)
கல்வி கொடுத்தால் அதை பல முட்டுக்கட்டைகள் போட்டு தடுக்கிறான்..
ஆசிரியர்,பேராசிரியர்,கல்வி நிர்வாகம்,வடிவில்..
(இட ஒதுக்கீடு இருந்தும் லாபமில்லை)
வேலை கொடுத்தால் பல தொல்லைகள் கொடுத்து அங்கும் இழிவாக நடத்துவான்..
(வேலை வாய்ப்பில் முன்னுரிமை இல்லை )
இந்த அடிமைகளிலும் சிலர் தப்பி பிழைக்கிறார்கள்..
அவர்களை தூக்கி விட்டவர்களை பின்னோக்கி கூட அவர்கள் பார்ப்பதில்லை
இந்தியா ஒரு 3ம் உலகம் .
இங்கு சமத்துவம் ஜனநாயகம் என்பது பொய்யே
சாதி ஒழிப்பு இல்லாமல் உண்மையன சமத்துவம் ஜனநாயகம் என்பதில்லை
#blog #caste
Krishna Kumar G
No comments:
Post a Comment