Truth Never Fails

Sunday, March 11, 2018

திராவிட இயக்க வரலாறு

 திராவிட இயக்கங்களுக்கான வரலாறு மிக பெரியது..

அதில் பெரியாரே சிறு பகுதி தான்.. 


1800

ஆரம்பகாலத்திலே பிராமணர்களுக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் உருவாக தொடங்கிவிட்டன


பிராமணர்கள் ஆதிக்க கொடுமையை சகிக்க முடியாமல்..

பிராமணர் அல்லாத இயக்கங்கள் உருவாக தொடங்கிவிட்டன.


1891

தமிழன் பத்திரிகை

திராவிடம் என்கிற சொல் பிராமணர் அல்லாதவர்கள் என்பதை குறிக்க பயன்படுத்தியது ..


திராவிட மாக சபை முதல் மாநாடு நீலகிரி (அயோத்திதாசர்)


1892


ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி, பதிவும் செய்தார் அயோத்திதாசர்


1916 

தென் இந்திய நல உரிமை சங்கம்

(இதுவும் பிராமணர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட சங்கம்)

(பின்பு நீதிக்கட்சி ஆனது)


1920

திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டது..

(ஆதி திராவிட மக்கள் பூர்வ குடிகளாக அறியப்பட்டனர்)

(அப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்..)


1925

சுயமரியாதை இயக்கத்தை பெரியார் முன்னெடுக்கிறார்..


1928

ஆதி திராவிடர் முதல் மாநாடு

(இரட்டை மலை சீனிவாசன் தலைமை ஏற்கிறார்)

பச்சையப்பன் கல்லூரியில் முதன் முதலில் ஆதி திராவிட மாணவர்கள் கல்வி கற்க உரிமையை பெற்று தருகிறார்.


1930-1932


லண்டன் வட்டமேஜை மாநாடு

ஆதி திராவிடருக்கு இரட்டை தொகுதி கேட்கிறார்..

அம்பேத்கருடன் இணைந்து கோரிக்கை வைக்கப்படுகிறது..


காந்தி எதிர்த்ததால்

காந்திக்கு எதிரான நிலை உருவாகுகிறது


1935

அம்பேத்கர் 1935இல் தான் மதம் மாற வேண்டு என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்


திருவிக திராவிட மணி எனும் பட்டம் வழங்கினார்..


1938

தமிழ்நாடு தமிழருக்கே

(இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக குரல் எழுப்புகிறார் பெரியார்)

1939

பெரியார் நீதி கட்சி தலைவராக பணியாற்றுகிறார்..


1944

திராவிட கழகம் என நீதிக்கட்சி பெயர் மாற்றப்படுகிறது..


1947

இந்தியா சுதந்திரம் அடைந்தது


1949


திராவிட கழகம்

மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அரசியலில் வேகம் பெற்றது


அதே காலகட்டத்தில் அண்ணா பிரிந்து 

திமுக வை தொடங்கினார்..


பிறகு உங்களுக்கே தெரியுமே.. 


எனக்கு தெரிந்தவற்றை தொகுத்துள்ளேன்..


நீ முதலில் தமிழ்நாட்டு அரசியலை கற்றுக்கொள் 


Krishna Kumar G

No comments:

Post a Comment