Truth Never Fails

Monday, April 16, 2018

உயர்கல்வியில் இடை நிற்றல் வன்மம்

உயர்கல்வியில் இடைநிற்றலை 100% தடுக்க வேண்டும்.
எந்த பேராசியரும் துறை தலைவரும் அல்லது பல்கலைக்கழக துணை வேந்தர் நினைத்தாலும் எந்த மாணவ மாணவியின் கல்வி ஆண்டின் காலகட்டத்தில் அவர்களை இடைநிற்றல் (சூழ்நிலையை உருவாக்குதல்-தூண்டுதல்) or Terminate செய்ய அதிகாரம் வழங்க கூடாது..

(இடைநீக்கம் வேறு இடைநிற்றல் வேறு..)
பொதுவாக அரசு கல்லூரிகளில் இதை செய்யமாட்டார்கள்
தனியார் சுய உதவி கல்லூரிகளில் இது மாணவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது..

(இதில் சாதிய காரணங்களும் இருக்கிறது)

4 ஆண்டு படிப்பு என்றால் சரியாக நான்கு ஆண்டில் CC கொடுத்துவிடுங்கள்.. Arrears இருந்தால் மாணவர்கள் எழுத்திக்கொள்ளட்டும்..

நிர்மலா தேவி போன்றோர் உருவாக இது பெரு ஆயுதமாக உள்ளது.. Internal Practical என்று மிரட்டுவது எல்லாம் நடக்கவே கூடாது..

அடுத்து ஆராய்ச்சி படிப்புகளில் இதுப்போல் கொடுமைகள் பல நடக்கிறது.. இதனால் பல ஊழல்கள் அதில் நிலவுகிறது..

(இடைநிற்றலால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்)

கல்வியை கற்பித்தலை சுலபமாகவும் user friendlyயாகவும் இருக்கும்படி மாற்றி அமைப்பது அவசியம்..

பல நாடுகளில் அப்படிதான் வைத்து இருக்கீறார்கள்..

வாரத்தில் 1 அல்லது 2 நாள் தான் கல்லூரி இருக்கும்.. அதுவும் மாணவர்கள் விருப்ப பாட வகுப்புக்கு செல்வார்கள் மீதி நாட்களில் வேலைக்கு செல்வார்கள்.. பாடத்தில் சந்தேகமென்றால் பேராசிரியரிடம் இணையம் வழியாக தொடர்புகொள்வார்கள்... (Regular course )

பேராசிரியர் நினைத்தாலும் அவர்கள் படிப்பில் கை வைக்க முடியாது.. என்ன கல்வி கட்டணம்  தான் அதிகமாக இருக்கும்..

மருத்துவ படிப்புகளை இந்த வரிசையில் நான் சேர்க்கவில்ல.. இது பொறியியல் கலை அறிவியல் படிப்புகளுக்கு இது பொருந்தும்..

Krishna Kumar G

No comments:

Post a Comment