Truth Never Fails

Friday, April 29, 2022

சாமர்த்தியம் என சிக்கும் சிறுவர்கள்

 இந்த பையன் லோகேஷ் 5ம் வகுப்பு க்ளோரி பள்ளி.. கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து

Lift கேட்டான் எங்கடா போற என்றேன்..

பாதிரிக்குப்பம் என்றான்..


அழைத்துக்கொண்டு வருகையில் பல கேள்விகள் கேட்டேன்..


வீடு எங்கே என ..

துக்குகினான் சாவடி என்றான்.

அது எங்கடா இருக்கு என்றேன்.


பேருந்து நிலையம் அருகே இருக்கு என்றான்..


அப்பறம் ஏன்டா பாதிரிக்குப்பம் போற என்றேன்..


அங்கே நண்பன் வீட்டில்  game விளையாட போறேன் என்றான்.

அப்பறம் எப்போ எப்படி வீட்டுக்கு வருவ என்றேன்..


9 மணிக்கு வருவேன்.

அப்படியே லிப்ட் கேட்டே வந்துடுவேன் என்றான்.


டேய் யாராவது உண்ண தூக்கிட்டு போய் வித்துட்டா என்னடா பண்ணுவ என்றேன்..


அஹ் ஆஹ் என்றான்..


வீட்டுல சொல்லிட்டியா என்றேன்

எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் என்றான்..


நான் சாப்பிடும் கடை வந்ததால் இறக்கிவிட்டு


புகைப்படம் எடுத்துக்கொண்டேன்..


இங்கு பதிகிறேன்..


துணிச்சல் தான் என்றாலும்..

சிறுவன் என்று பாவப்பட்டு லிப்ட் கொடுத்தேன்..

அவன் சாமர்த்தியமாக மக்களை ஏமாற்றுவதாக எண்ணி தன்னை பணயம் வைக்கிறான்.


பெட்ரோல் பிரச்சனை

 கடலூர் A2B அருகே உள்ள பெட்ரோல் பங்கில் TVS xl வண்டிக்கு 200ரூ பெட்ரோல் போட்டேன்.


160ரூ போட்டார் .. தள்ளி வந்து

100ml oil 30 ரூ தானே 40ரூ எடுக்குறீங்க என்றேன்.


சார் 120ml oil போட்டேன் என்றான்..

யாரை கேட்டு 120ml போட்டீங்க 100ml தானே போடனும் என்றேன்..


போட்டுட்டேன் விடுங்க சார் என்றார்..


100ml 30ரூ னா 

20ml எவ்வளோ என்றேன்..


15 ரூ காசை கொடுத்து 

கிளம்புங்க சார் என்றான்.


இப்ப எதுக்கு காசு தறீங்க என்றேன்..


சார் கிளம்புங்க சார் என்றான்.


இப்ப எப்படி மீதி பணம் வந்தது என்றேன்..


அமைதியாக நின்றான்..


நான் கிளம்பிவிட்டேன்.


மிக சாதாரணமாக

ஒரே ஒரு கேள்வி மட்டும்தான் கேட்டேன்

காசை கொடுத்து அனுப்புகிறான்..


அப்போ அந்த பங்கில் இனி பெட்ரோல் போடவே கூடாது.

Wednesday, April 13, 2022

பெட்ரோல் போடுரா

 இன்று காலை பெட்ரோல் பங்கில் : பெட்ரோல் போடும்போதும்.. 

சார் சில்லறை இல்லையா சார் என்றான் ..

சார் பெட்ரோல் நாபை மூடுங்கள் என்றான்.


அவன் கேட்கும் ஒவ்வொரு திசை மாற்றும் கேள்விக்கும் பதில் அளித்துக்கொண்டே..


பெட்ரோல் மீட்டரை பார்த்தேன் ..


அது ஓடவே இல்லை ..


அப்படியே பெட்ரோல் gunனை எடுத்து  அதன் இடத்தில் வைத்துவிட்டான்.


நான்.. மீண்டும்..

தம்பி இப்ப நீ பெட்ரோல் போட்ட என்று கேள்வி கேட்டேன்..

அவன் பேசாமல் பணத்தை எண்ண தொடங்கினான்.


ஹலோ பெட்ரோல் போடுரா என்றேன்..


சுதாரித்துக்கொண்டு பயத்தில்..

மீண்டும் gunன்னை எடுத்து

ஒழுங்காக பெட்ரோல் போட்டான்..


தம்பி வேற யாராவது இருந்திருந்தால் அடிச்சி இருப்பாங்க

இப்படி பண்ணாத என்றேன்..


இல்லனா நான் சரியா கவனிக்கல என்றான்..


நீ பெட்ரோல் போட்டதா நான் நம்பி போய் எங்காவது நடு வழியில வண்டியை தள்ளனுமா என்றேன்..


பேசாமல் நின்றான்..


÷÷÷÷÷÷÷÷÷


நம்ம ஊர்ல தான் எது எவனுக்கு நடந்தாலும் கண்டுக்க மாட்டோமே..


அதுபோல பின்னால் நின்றவன்

சார் வண்டியை முன்னாடி தள்ளுங்க என்றான்.

Tuesday, April 12, 2022

Language power

 Tamil have to speak a Hindi

Telugu have to speak a Hindi

Kannada have to speak a Hindi

Bengali have to speak a Hindi

Marathi have to speak a Hindi

Malayali have to speak a Hindi

Punjabi have to speak a Hindi

Gujarati have to speak a Hindi

Bihari have to speak a Hindi

Kashmiri have to speak a Hindi

Oriya have to speak a Hindi

But 

Hindi will speak Hindi to everyone !

They won't learn other Indian language

Easy isn't it ?


Because they claim english is from British 

Hindi is Indian made ...

What about other Indian languages?


Also they claim hindi is spoken by many .


Yes government is spending Thousand crores each year to promote hindi ..


This is their cunning imposition, selfishness and easy moving stance using rule.


Other languages are culturally, ethnically more stronger than hindi .


Father and Mother of Hindi 

Urdu and Sanskrit 

interracial pair born product

Even it has step father & step mother from Chinese to Roman and English.


Language which mixed up with even further beyond our imagination.


Which is a business man language .


Where businessman likes this language very much to promote his product and ideology .


Gandhi used this language to promote his ideology all over India.

It really helped him so he widely established Hindi preaching institute all over India.


After 70 years it is now helping many politicians to rule over India by a language.


Just a language nothing else


We are losing diversification by promoting and imposing this language .


We've to break this link bridge

Which destroys the individuality of other classic languages .


I've an idea

But I don't have power now 


I'm waiting

When I acquire it


I will show it ...

What my idea is...!