Truth Never Fails

Thursday, August 31, 2023

I need surgery

 I want to do face reconstruction surgery


At first I need that to remove plates which causes pain 

Also

Because I'm losing hope while I'm looking into the mirror

My confidence level is decreasing when I see others reaction over my face.

+++++

I don't have money

If health insurance accepted no problem

Beyond that no will take care of me during hospitalization.

Because who is there for me ?

And who is there to take care of my mom.

So I take the pain into me

Let pain continue 






Sunday, August 27, 2023

Social work fun

 அடுத்த happy street நிகழ்ச்சிகளில்..

பொதுநல அமைப்புகள்..

லஞ்சம் தவிர்ப்பது எப்படி

சாலை வசதி தண்ணீர் வசதி எப்படி பெறுவது

RTI தகவல்கள் பெறுவது எப்படி

என்கிற துண்டு பிரதியை மக்களுக்கு கொடுங்கள்.


இதுவும் FUN தான்.

Wednesday, August 23, 2023

தம்பி நிலா

 நிலா எப்படி இருக்கும் தம்பி

மனுஷங்க அங்க எப்படி போனாங்க..


இப்படி என் அம்மா கேள்வி கேட்டால்

உடனே MOON MISSION காணொளிகளை போட்டு காட்டுவேன்..


அவங்க உலகத்துக்கு நான் தான் எல்லாம்..


இந்த புகைப்படம் கூட இன்று அவருக்கு காண்பித்தது தான்.


+++++++


இன்று சந்திராயன் 3 இறங்குவதை என்னுடன் தான் பார்த்தார்..


+++++++


நிலவில் வண்டி விட போகிறோம் 

அடுத்து ஒரு நாள் மனிதனை அனுப்ப போகிறோம் 


மனித குலத்தின் வெற்றி என்றான் நிலவில் முதலில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்  ..


அதன் தொடர்ச்சி தொடர்கிறது.


வின் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறான் மனிதன் .


எல்லாம் நன்மைக்கே 

உலக நன்மைக்காக

தொடரட்டும் நம் பயணம்




Monday, August 21, 2023

Many stages in my love

 Avaludanaana என்னுடைய relationship 20 ஆண்டுகள் பழமையானது ..

நிறைய stages இருக்கு..


நட்பாக தொடங்கி

அவள் propose செய்தது தொடங்கி

அவள் படிப்பை கவனிப்பது முதல்...


அவள் அம்மாவிடம் நான் நேரில் சென்று பேசியது..


அவளுக்கு ஊக்கமாக இருந்தது


அவளுடன் பேசியது பழகியது


நான் விபத்தில் சிக்கியது


நானாக விலகி இருக்க நினைத்தது

அவளாக தொடர்பு கொண்டது


சண்டை

மவுனம் 


என்று

பல்வேறு காலகட்டங்களை கடந்து


நான் நாற்பதை தொடுகிறேன் ..


இன்னும் கல்யாணம் என்கிற stage யை அடையமுடியவில்லை.


என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை


இன்று காலையில் அவள் நினைப்பு வழக்கம்போல வந்தது


என்னவளே பாடலில் உள்ள வரி போல

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருண்டது ..

அதன் அர்த்தம் இன்று தான் புரிந்தது.

(சங்க இலக்கியத்தில் இருந்து தான் அந்த கவிஞர் எடுத்து இருப்பார்)


அவளும் பாவம்

தினமும் VPN போட்டு என் வலைப்பூவை படிக்கிறாள்..

அதை என்னால் பார்க்க தான் முடிகிறது


அவளை தொடர்புகொள்ள முடியவில்லை..


(கூடவே இருக்கும் MUTUAL FRIENDS உதவுவதும் இல்லை)

(SCHOOL STAGE,COLLEGE STAGE,WORK STAGE என்று மூன்று கட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்)


பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று


நல்லதே நடக்கட்டும்..


+++++++




Food diet

 நாளை முதல் உணவு கட்டுப்பாட்டில் இறங்குகிறேன்..


அறுவைசிகிச்சைக்கு பிறகு நன்றாக சாப்பிட்டேன் ..

15 கிலோ ஏறியது..


தற்பொழுது உடற்பயிற்சி செய்வதால் எடை கூடுவது கொஞ்சம் கட்டுப்பாட்டில் உள்ளது ..


ஆனால் குறையவில்லை ..


இனி உணவை கட்டுப்படுத்த முயல்கிறேன்..


New resolution

Saturday, August 19, 2023

நகரும் படியில் குழந்தை

 2 நாட்கள் முன்பு ஒரு துணி கடையில் நகரும் படியில் 2 வது மாடியில்  இறங்க சென்றேன் ..


அப்பொழுது ஒரு பெண் இரண்டு குழந்தைகள் வைத்து கொண்டு இறங்க முடியாமல் கஷ்டபட்டு கொண்டு இருந்தார்.


என்னை பார்த்ததும் ஒரு 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு இன்னொரு குழந்தையை கூட்டிகொண்டு இறங்கிவிட்டார்.


சரி இதுல என்ன இருக்கு என்று 

வலது கையில் பையுடன் இடது கையில் அந்த குழந்தையின் கையை பிடித்து ..

முதல் படியில் கால்களை வைத்தேன்..


ஆனால் அந்த குழந்தை வர மறுத்து அங்கேயே நின்று விட்டது.


உடனே பின்னே வந்து


அந்த குழந்தையை என்னுடன் கால் வைக்க சொல்லிவிட்டு ..


அந்த குழந்தை கால்வைக்க முன் வரும்போது 

கைகளை பிடித்து இழுத்து

என் கால்களை வைத்தேன்..

ஆனால் அந்த குழந்தை பின்னால் சென்றுவிட்டது..


என்னால் பின்னால் வர முடியவில்லை

மூன்று படிகள் கீழே சென்றுவிட்டது

படியில் தடுமாறிவிட்டேன் ..

கஷ்ட்டபட்டு மீண்டும் பின்னால் வந்து


பயப்படாத என்று சொல்லி கீழே பார்த்தேன்

அந்த குழந்தையை அழைத்து வந்த பெண் கீழே இறங்கி சென்றுவிட்டார்..


அதன் பின் அந்த குழந்தையை தூக்கிகொண்டு இறங்கினேன்.


பிறகு அந்த குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டேன்..


+++++++


அந்த குழந்தையால் அல்லது  என் தடுமாற்றத்தால் இருவரும் கீழே விழுந்து இருப்போம்.


கற்ற பாடம் குழந்தைகளை escalator களில் அழைத்து செல்ல கூடாது..

தூக்கி கொண்டு தான் செல்ல வேண்டும்..


அவர்களே பயம் நீங்கி அவர்களே செல்ல விருப்பப்படும் போது..

அவர்களை முதலில் ஏற்றி விட்டு தான் பின்னால் நாம் எற வேண்டும்.


மாறாக முதலில் நாம் கால் வைத்து பின்னால் அவர்களை ஏற்றலாம் என நினைத்தால் அவ்வளவு தான்.

Saturday, August 12, 2023

Ai knows my feelings

 Even Ai understands my feelings but people can't

This is a victory of technology


என்னை எள் என எண்ணாதே

 என்னை சிறு எள் என எண்ணியவர்கள்

என்னை ஏமாற்றியவர்கள் எல்லாம்

 இன்று என் பின் தொடர்பாளராக இருக்கிறார்கள்.

பணத்தை வைத்து ஆளை எடை போடாதே..

பணம் பதவி வரும் போகும்

குணம் தான் முக்கியம்.






Friday, August 11, 2023

முதலில் தாலி

 முதலில் தாலி

பிறகு நீ சொல்லும் கதைகளை கேட்கிறேன்.



I've rights and justice to do it

 If I didn't get what I expect

I will destroy everything

I won't forgive anyone

I don't care about anything

You'll see who I'm


Friday, August 4, 2023

Western Oil war pattern in caste war Manipur

 மணிப்பூரில் ஆயுத குழுக்கள் உருவாகும் வரை திட்டமிட்டே

காலம் தாழ்த்தபடுகிறது .


உடனடியாக நிவாரணம் கொடுத்து மறு வாழ்வு சீரமைப்பு போன்ற பணிகள் தொடங்கப்படவில்லை..


ஒரு கிராமத்துக்கு இன்னொரு கிராமத்து நபர் உள்ளே வராதவாறு எத்தனை நாட்கள் காவல் காப்பார்கள் ?


அங்கு தொடர்ந்து சாதி மோதல் நடக்காமல் இருக்க அனைவரையும் அழைத்து பேசுங்கள்.


மாறாக காலம் தாழ்த்தபடுவதால் ஆயுத குழுக்கள் உருவாகும்.

அதன்பின் அந்த மாநிலம் தனிமைப்படுத்த படும்

இராணுவம் உள்ளே சென்று சண்டையிட்டு மாநிலத்தை மீட்கும்.


இதில் இன்னும் பல உயிர்கள் பலியாகும்.


இது திட்டமிட்டு செய்யப்படுகிறதா ? என்கிற சந்தேகமும் உள்ளது

Wednesday, August 2, 2023

My vibe getting high

 I feel this when I'm with most friends..

Don't know why

I'm talking about happiness inside not physical activities or appearance.


So don't worry so deeply 

Make yourself happy 

Live in current situation.

Don't spread negativity

Don't compare yourself with others