Truth Never Fails

Wednesday, November 25, 2026

எக்காலமும் ஓயாத கால்கள், எண்ணங்களை கண்ட கணினி அறிவியல்

 இன்று காலை பாத்திரம் தேய்க்கும்போது ஜாக்கிசான் பற்றி தான் நினைத்துகொண்டு இருந்தேன்


80 கள் இறுதியில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள்  VCR CASSETTE ல் கண்டிப்பாக ஜாக்கிசான் திரைப்படம் எடுத்து வருவார்கள்

ஜாக்கிசான் ஜப்பானியர் என்பார்கள்


ஆனால் ஜாக்கிசான்90 களில் ஹாலிவுட் படங்களுக்கு வரும்போது வீட்டில் HBO இருந்தது..


அப்பொழுது யோசித்தது சீனாவில் இருந்து ஆங்கிலம் தெரியாமல் ஜாக்கிசான் ஹாலிவுட் வரை வந்துள்ளார்


இதற்கு காரணம் அவரது உழைப்பு என்று


உழைப்பையும் தாண்டி அவர் செய்யும் தொழிலில் ஒரு அர்ப்பணிப்பு உண்மை அதுதான் அவரை ஹாலிவுட் வரை கொண்டு வந்துள்ளது என்று நினைப்பேன்


தசாவதாரம் பட விழாவுக்கு சென்னை வந்தவர் அங்குள்ள குப்பையை அவர் அகற்றிய போது தமிழ்நாட்டில் பலரது உள்ளங்களில் அவர் இடம் பிடித்தார்


ஜாக்கிசான்


அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது..


சிறு வயதில் அவர் செய்வதை பார்த்து அவரைப்போல நாம் செய்து பழகி இருந்தாலும்

அவரது பழக்க வழக்கங்களையும் நாம் பின்பற்ற வேண்டும்..


இதை 20 ஆண்டுகளுக்கு முன்பு யோசித்தது..


அதை இன்று மீண்டும் காலையில்  யோசித்து பார்த்தேன் 


ஏன் என்று தெரியவில்லை


ஆனால் AI ALGORITHMS 

2 மனி நேரத்தில்

அவரது காணொளியை காட்டுகிறது 


நான் தேடவே இல்லை




No comments:

Post a Comment