கண்டால் காதல்
காணாத தூரம் சென்றால்
காணும் வரை
கதைகளாக நினைவுகளாக
மனதில் மட்டுமே தங்கியது காதல்
முன்பு புறாக்களில் தூது
அது போய் சேருமா சேராதோ
உறுதி இல்லா செய்திகளில்
காதல்
அதன்பின் கடிதம்
தபால்காரரை நம்பி
காத்துகிடந்தது
காதல்
தொலைவில் இருந்தாலும் தொலைபேசியில் தொடர்ந்தது காதல்
தேகம் தொட முடியாவிட்டாலும்
செவிகளில் சொற்களில்
காதல் வாழ்ந்தது
இணையம் எல்லை தாண்டிய காதலை
பார்த்தது கணினிகளில்
கடல் கடந்தும் கைகள் சேர்ந்தது
கைபேசியுடன் கலந்து
கால் நூற்றாண்டை கடக்கிறது காதல்
ஆனால் காதலின் காலம் சுருங்கிவிட்டது
எதற்கு எடுத்தாலும் தொடர்புகொள்ள முடியாத தடை விதிக்க வழி செய்துவிட்டது
தொடர்பு இல்லாத காதல்கள் தொடர முடியாத நிலைக்கு சென்றுவிட்டது
அன்று ஒருவரின் கடிதம் கிடைக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டும்
ஒருவரை ஒருவர் காதலை நிரூபிக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது
ஆனால் இன்று
நிமிடத்திற்கு நிமிடம் காதலை நிரூபிக்க வேண்டியுள்ளது
திறன்பேசி செயலிகளில் உள்ள காதல்
ஒரு நிமிடம் நிரூபிக்க தவறினாலும்
மறு நொடி தொடர்பு தடை விதிக்க வழி வகுத்துள்ளது
இது காதலா இல்லை நோதலா
காதல் நெருக்கடியை செயலிகள் செயற்கையாக ஏற்படுத்திவிட்டது
நெருக்கடியில் காதல்
+++++++

No comments:
Post a Comment