Truth Never Fails
Showing posts with label மொழிகலன்கள். Show all posts
Showing posts with label மொழிகலன்கள். Show all posts

Saturday, August 20, 2016

மொழிகலன்கள் - தமிழ் மொழி யாருக்கு சொந்தம்

தமிழ்  மொழி யாருக்கு சொந்தம் ?
உண்மையில் தமிழ் மொழி யாருக்கும் சொநதமில்லை.

தமிழ் மொழி காலம் கடந்தது
யுகங்கள் கடந்தது
கண்டங்கள் கடந்தது

இந்த இடத்தில்தான் தோன்றியது
இவர்கள்தான் முதன் முதலில் பேசினார்கள் ஆகையால் இவர்கள்தான் சொந்தக்காரர்கள் என்று கணிக்க முடியாத மொழி..

இன்று நாம் பேசுகிற தமிழ் மொழிக்கும்
ஆதியில் பேசிய தமிழ் மொழிக்கும் மிக பெரிய வேறுபாடு இருக்கிறது..

காலத்துக்கு ஏற்றாற்போல் தன்னை உறுமற்றிகொண்டிருக்கிறது....
ஆனாலும் அது தன் சாரத்தை இழக்கவில்லை. அது இன்னும் தன் பயணத்தை தொடர்கிறது..

நான் தமிழன் , ஏன் ஆதி தமிழன் என்று சொன்னால் கூட இந்த தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்களாக இருக்க முடியாது...

சாதி அடிப்படையில் கூட இந்த மொழியை சொந்தம் கொண்டாட முடியாது...

ஏன்னெனில் இந்த மொழியில் சாதி இல்லை ,மதமில்லை,
இந்த மொழியை ஏற்றுகொண்டவர்களிடம் தான் இது இருக்கிறது..

இந்த மொழி தன்னிகரற்ற தனித்தன்மை யுடையதாய் இருக்கிறது.

இதுவரை தமிழ்  மொழியில் படைக்கபெற்ற இலக்கியங்களை தாண்டி இன்னும் படைக்கபெறாத  இலக்கியங்கள் பல இதன்னுள் முழ்கி கிடக்கிறது.

இந்த மொழியை கற்றுக்கொண்டு அல்லது  பழகிக்கொண்டு ஏற்று கொண்டவர்கள் தான் இந்த மொழிக்கு சொந்தகாரர்களாக மாறுகிறார்கள்..
இந்த மொழியின் உறவை தன் சந்ததிக்கு செலுத்துகிறார்கள்..

இப்படியாகவே இது தொடர்ந்து பயணித்திருக்கிறது...

என்னை ஆதி தமிழன் என்கிறார்கள் தற்போதைய தமிழ் பேசும் மக்கள்
இது என்  சாதியின்  அடிப்படையில் இதை இவர்கள் கணிக்கிறார்கள், இது  அவர்களுக்கு  எட்டிய  தகவல் (அறிவு) அவ்வளவே, இந்த  மொழி  சாதிகள் உருவாகா முன்பே காலம் கடந்தது என்பதுதான் உண்மை, நம்  அறிவுக்கு  எட்டியவரை  இவர்கள்  அவர்கள்  இந்த  மொழியை  பேசி  இருக்கலாம்  என்று  தான்  இதுவரை  கணித்துள்ளார்கள்.இது  அவர்கள்  கணிப்புகளுக்கெல்லாம்  அப்பாற்பட்ட  மொழி.

என் மொழி தமிழ்  மொழி

Krishna Kumar G