அரசியல் :
2009 ஆம் ஆண்டு சென்னை AVM திரையரங்கில் கந்தக்கோட்டை என்கிற படம் பார்க்க சென்றபோது
வெளியில் ஒரு கட்அவுட் அருகே ஒரு பேனரில்
நகுல் ரசிகர் மன்ற மாநில தலைவர் என்று ஒருவர் புகைப்படம் இருந்தது
அப்பொழுது ரஜினி கமல் அஜித் விஜய் சிம்பு தனுஷ் போன்றோர் வரிசையில்
நகுல் இணைந்துவிட்டார் என்பதைப்போல ஒரு தோற்றம் உருவாகுவதை உணர்ந்தேன்
(விஜயகாந்த அப்பொழுது அரசியல்வாதி)
நெய்வேலி வந்தேன் அங்கும் அதே படம் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்தது அந்த போஸ்டரில் எனக்கு தெரிந்தவர் புகைப்படம்
அதில் நகுல் ரசிகர் மன்றம் நகர தலைவர் என்று இருந்தது
சில நாட்கள் கழித்து அவரை பார்த்தேன்
சிரிப்புடன் நீங்க ஏன் நகுல் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தீங்க என்று கேட்டேன்
அவர் இது ஒரு வாய்ப்பு
பிற ரசிகர் மன்றங்களில் தனக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காது என்றும்
இதில் முன்பே சேர்ந்தால் பிற்காலத்தில்
நகுல் அரசியல் கட்சி தொடங்கினால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்..
+++++++++
2026 நகுல் சினிமாவில் இல்லை
உதயநிதி முன்னாள் துணை முதல்வர்
அவர் ரசிகர்மன்ற தலைவர் முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
தனுஷ் இருக்கிறார் (அரசியல் கட்சி தொடங்குகிறார்)
விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதலமைச்சர்
++++++++
மக்கள் விழிப்புடன் தான் இருந்திருக்காங்க போல
நான் எல்லாம்
சினிமா நடிகர் ரசிகன் இல்லை
ஆகவே எனக்கு எதார்த்தம் தெரியல போல
நான் பாட்டுக்கு கிடைக்கிற மக்கள் பணி செய்துகொண்டே இருந்துவிட்டேன்
என் பெயரோ புகைப்படமோ
பேனர்களில் வருவதை விரும்பியதில்லை
திரையரங்கு பேனர்களில் இருப்பவர்களை எதற்கும் உதவாதவர்கள் என்று தான் பார்த்து இருக்கிறேன்
ஆனால் அவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள்
ஒருவேளை நான் பார்த்த அரசியல் கோணம் தவறா
என்கிற சந்தேகத்தை எழுப்புகிற நிலையில்
இல்லை நான் செல்கிற பாதை 100% சரியான பாதை தான்
மக்கள் சிறு மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள்
அது நிலையானதில்லை என்பது எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்
வேறென்ன
சிவகார்த்திகேயனை விட்டுடேன்னா ?
அவரும் நாளைய முதல்வர் தான்
வச்சுக்கோங்க
காசா பணமா
No comments:
Post a Comment