இன்று இரவு ஒரு ஹொட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்..
ஒருவர் குடும்பத்துடன் புரோட்டா வாங்க வந்தார்..
எனக்கு அவரை பார்த்ததும்
இவரை வைத்து ஹோட்டல் தொடங்கலாமா என்று தோன்றியது..
காரணத்தை அவரிடமே வெளிபடையாக சத்தமாக சொன்னேன்
யோ 10 வருஷத்துக்கு முன்னாடி
உன்கிட்ட சாப்பிட்ட கறி வறுவல் மாதிரி
கடலூரில் எங்கேயுமே கிடையாது
நான் எங்க சாப்பிட்டாலும் உன்னை தான் நினைப்பேன் என்றேன்..
அவர் ஒரு பொட்டு அளவு கூட
நான் சொன்னதை பொருட்படுத்தவில்லை
புரோட்டா வாங்க வந்தவர்
கல்லில் வெந்துகொண்டு இருந்த என் டபுள் ஆம்லெட்டை திருப்பி போட்டு என் தட்டில் வைத்தார்..
ச்ச அவர் நன்றியை செயலில் காட்டினார்
தரமான சமையல் கலைஞர்
போட்டி பொறாமையில் பலமுறை அவருக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
சில நபர்களிடம் திறமை இருந்தும் வெற்றிபெற முடியாமல் போகிறது
No comments:
Post a Comment