Truth Never Fails

Sunday, November 29, 2026

நயவஞ்சகத்தால் நடுங்கும் நாட்டை நடுநிலை நன்மதியுடன் நாடாளும் நாயகன்

 இப்ப நான் சைக்கிள் கையை விட்டுக்கொண்டு ஓட்டும்போது தூங்கிவிட்டால் என்னவாகும்... ?


அதேபோல தான் அரசை நடத்துபவன் வீட்டுக்குள் புகுந்துகொண்டு போதையில்  தூங்கிவிட்டால் அதே தான் நடக்கும்


வெளியில் என்ன நடக்கிறது

மக்கள் என்ன செய்கிறார்கள்

என்பதை அறிந்து

அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்

ஆட்சி செய்ய வேண்டும்


கலை இலக்கியம் பண்பாடு வரலாறு அறிவியல் அரசியல் ஆன்மீகம் கல்வி காவல் நீதி நிதி

என கணக்கு போட தெரிய வேண்டும்

எதிரிகளை வீழ்த்த வேண்டும்


இல்லையென்றால் அரசு பணியாளர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள்


நரிகளுக்கு நடுவே எலியை தேடும் பூனையாக அல்ல புலியாக இருக்க வேண்டும்


முகத்தில் என்ன இருக்கிறது மூளையில் தான் இருக்கிறது பேரறிவு

என்பதை மக்களும் உணர வேண்டும்


க.கிருஷ்ணகுமார்




No comments:

Post a Comment