Truth Never Fails

Wednesday, July 31, 2024

Waste Time

 I've special talent to identify the people who wastes time .


I've gained this talent by wasting huge time. 




வட்டிகாரன் வெட்டுகாரன்

 கந்து வட்டி மீட்டர் வட்டி ராக்கெட் வட்டி இப்படி வட்டிக்கு விடும் நபர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கவும். இவர்களுக்கு யார் வட்டிக்கு விட அதிகாரம் கொடுத்தது. இவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசியலில் தஞ்சம் அடைகிறார்கள்.


அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் கருப்பு பணத்தை புழக்கத்தில் விட இவர்கள் உதவியாக இருக்கிறார்கள்.


விளிம்பு மக்களின் பண தேவைகள் வங்கிகள் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும்

அதற்கான எளிமையான கடன் மற்றும் வட்டி திட்டங்களை நிதி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.


#Governance

Friday, July 26, 2024

Very less minimum wage in India

 இன்று காலை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசை கேள்வி எழுப்பியது :


பள்ளிக்கல்வி துறையில் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பளம் தரப்படுவது அநீதி 

இந்த காலத்தில் 200 ரூபாய் சம்பளத்தை வைத்து என்ன செய்ய முடியும் என்று நீதிபதி கேட்டு இருந்தார்.


அதை பார்த்ததும் என் தலையில் ஓடியது


Minimum wages act 


இந்தியாவில் கேரளா தான் அதிக சம்பளம் தருகிற மாநிலம் என்பதை விட


தொழிலாளர் நலனை பாதுகாக்கிறது.


குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ய ஒரு commision உருவாக்க வேண்டும்.


அதில் பணவீக்கம் மற்றும் கடன் வட்டி விகிதம் விலைவாசி எல்லாம் கணக்கு போட்டு 

குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.


எனக்கு தெரிந்து கேரளாவே 10000 குறைவாக தான் சம்பளம் தருகிறது.


+++++





In private sector

But giant

Hinduja groups gave very less wage

Swiss court took action on them

News follows 




Thursday, July 25, 2024

திருமண சத்தியப்பிரமாணம்

(சபை வணக்கம்)


பெயர். வாகிய/ராகிய நான்

என் சுய விருப்பத்தின்படி

துணை பெயர் வாகிய/ராகிய உன்னை திருமணம் செய்ய

என் முழு மனதாக ஒப்புக்கொள்கிறேன்  


எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு பிரியாமல் 

நான் உன்னுடன் உண்மையாக கடைசி வரை இருப்பேன் என சத்தியம் செய்கிறேன் 


எனக்கு உன்னை திருமணம் செய்வதில் முழு சம்மதம்


இப்படிக்கு 

(பெயர்)

(கையொப்பம்)


(சபை நன்றி)




சிறுவர் சிந்தனை மாறாமல் பாதுகாக்க

 சூதாட்ட விடுதிகளில் பார்களில் 100% சிறுவர்களுக்கு அனுமதியளிக்க கூடாது. கோவா கேசினோகளில் சிறுவர்களை காண முடிகிறது.


சின்ன பசங்களுக்கு Night Life பழக்கபடுத்தி விடாதீங்க, Night show ,Night out,mid night food என்று எதையும் காட்டதீங்க, This is excemption from travelling

வெள்ளை வேண்டாம் நாட்டு பொருள் போதும்

 தமிழ்நாடு : குடும்பத்திற்கு ஒரு கிலோ மட்டுமே வெள்ளை சக்கரை தரவும் கூடுதலாக

ஒரு கிலோ நாட்டு சக்கரை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கவும்.


ஒரு உறுப்பினருக்கு அறை கிலோ சக்கரை என்கிற கொள்கையை கைவிடவும்.


வெள்ளை சக்கரை பயன்பாட்டை இந்தியாவில் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.


(அமைச்சர்கள்,பினாமிகள் சக்கரை ஆலை நடத்துகிறார்கள் என்பதற்காக அரசு வெள்ளை சக்கரையை கொள்முதல் செய்வது தவறு )


இது மக்கள் உடல்நலன் தொடர்புடையது.



இசை எப்படி கொற்க்கபடுகிறது

 இளையராஜா biopic வருகிறது என கேள்வி படுவதற்கு முன்பே.. நான் இளையராஜா அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புவது.


அவர் எப்படி சில நிமிடங்களில் அனைத்து இசை கருவிகளுக்கும் tune எழுதுகிறார் ..


Tune மொழியை அவர் படித்து இருக்கலாம்

கருவிகள் அனைத்தையும் வாசிக்க கற்று இருக்கலாம்


இது ஒரு இசை கலைஞருக்கு இயல்பான விசியம் தான்.


ஆனால் அதை எப்படி சில நிமிடங்களில் அவர் மூளையில் process செய்கிறார் ?


அதுவும் அழகான மெட்டுகளில் எப்படி கொண்டு வருகிறார்.


Unformal இசைகளில் தன் வாழ்க்கையை தொடங்கியவர்..

Formal இசையை கற்கும் போது அவர் இசையமைப்பாளர் இடத்துக்கு வருகிறார்..


Western இசைக்கு செல்கிறார்


ஒரு கட்டத்தில் fusion இசைக்கு வருகிறார்.


மீண்டும் இந்திய இசைக்கு வருகிறார்.


Instruments மாறுகிறது tune மாறுகிறது

ஆனால் notes எழுதும் process மாறவில்லை ..


அவரது அடிப்படை ஆதாரமே notes தான்.


நான் தெரிந்துகொள்ள விரும்புவது


அவர் சுற்றுப்புற சூழல்

எப்படி அவரை அழகான notes எழுத வைத்தது.


Dedication எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்..


அவர் மூளையில் எப்படி notes களை ஒருங்கிணைக்கிறார் 

என்று தெரிந்துகொள் விரும்புகிறேன்..


சமீபத்தில் ஒரு மேடையில் அவரும் அதைத்தான் சொல்லியுள்ளார்..


நடிகர் தனுஷிடம் 


தான் எப்படி அன்னக்கிளி படத்திற்கு tune யோசித்தேன் என்று சொல்லியுள்ளார்..


அதை அவர்கள் படத்தில் வைக்க வேண்டும் என்று

ஆனால் அதை அவர்கள் வைக்கமாட்டார்கள் என்று அவரே சொல்லியுள்ளார்.


எனக்கும் அதே சிந்தனை தான் இளையராஜா வாழ்க்கை வரலாறை விட எனக்கு அந்த tune அமைக்க அவர் எப்படி யோசித்தார் என்பதை

அவர் இருக்கும் காலத்திலேயே அவரிடம் முழுமையாக கேட்டுவிட வேண்டும் என்பதே..


எனக்கு இதை சரியாக சொல்ல தெரியவில்லை.


இது ஒரு 5 வருடத்திற்கு முன்பே பதிய வேண்டிய பதிவு..


என் மூளையில் நான் யோசிப்பதை எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை.


++++++


ஒரு பூவின் வாசம் உங்கள் நினைவில் இருக்கும்..


ஆனால் பூவின் பெயர் தெரியாது..


தற்பொழுது அந்த பூவை பற்றி விளக்கி சொல்ல தெரியாது 


என்பதை போல..


காது கேட்காமல் போன. Bethovan 

Notes களை கண்களால் பார்த்து

தன் மூளையில் இசைத்து இருப்பார்..


மூளையில் இசைத்து அதை நோட்டீஸ் சாக எழுதி இருப்பார்.


அதுபோல


நான் தெரிந்துகொள்ள வேண்டியது அவர் யோசனையை சிந்தனையை.



Wednesday, July 24, 2024

போலீஸ் உரிமை

 முன்பு இருந்த போலீஸ்க்கும் தற்பொழுது உள்ள போலீஸ்க்கும் வித்தியாசம் இருக்கு.


4 போலீஸ் தான் இருப்பாங்க 20000 மக்கள் வாழும் ஊரை கட்டுக்குள் வைத்து இருப்பார்கள்..


பொழுது சாய்ந்த நேரத்தில் சும்மா நின்றால் கூட 3 அடி கொடுத்து தான்  அனுப்புவார்கள் ..


இதில் சிறியவர் பெரியவர் என்கிற வித்தியாசம் இருக்காது..


ஆனால் அது மெல்ல மாறி 30 ஆண்டுகளில்

போலீஸ் என்பது மென்மையாகிவிட்டது.


++++++


அப்படியே அந்த பக்கம்


முன்பு ரவுடி என்கிற நபர் குடித்து கொண்டு 

பெண்களை கிண்டல் அடித்து கொண்டு..

அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தியோ மிரட்டியோ வாழ்ந்து வந்தார்கள்..


அது அடுத்து கஞ்சா அடிக்கும் நிலைக்கு சென்றது..


அடுத்து பழிக்கு பழி கொலை நிலைக்கு சென்றது..


அதிகபட்சம் ஒரு இருசக்கர வாகனம் வைத்து இருந்தார்கள்..


ஆனால் தற்பொழுது

Fortuner கார் வைத்துள்ளார்கள்

100 கோடி அளவுக்கு பணம் வைத்துள்ளார்கள்

பல கொலைகள் செய்கிறார்கள்.


அரசியலையே தீர்மானிக்கிறார்கள்..


+++++++


இங்கே நேர்மையானவர்கள் நல்லவர்கள் ஏழ்மை நிலைக்கு செல்கிறார்கள்.


இதுபோல ஒரு இடத்தில் இருப்பது ஆபத்து.


குற்றவாளிகள் பலம் பெறுவது அனைவருக்கும் ஆபத்து.


++++++++


காவல்துறை மக்கள் தொடர்பில் இருந்து விலகி இருப்பதாக நான் பார்க்கிறேன்..


ஒரு அறைக்குள் இருந்து தேர்தல் கருத்துக்கணிப்பு எழுதுவது போல


தற்பொழுது காவல்துறை குற்ற நிகழ்வுகளை ஒரு அறைக்குள் இருந்து கண்காணிக்க தொடங்கிவிட்டார்கள்.


இதில் மக்களின் நேரடி தொடர்பை இழந்து வருகிறார்கள்.


SP முதல் DGP வரை ஏதோ தங்களை ஒரு VIP CELEBRITY போல கருத தொடங்கிவிட்டதின் விளைவே இது.


நான் அனைவரையும் சொல்லவில்லை பெரும்பாலும் இப்படி தான் நான் பார்க்கிறேன்.


முன்பு இருந்த காவலர்களுக்கு டீ கடையில் பேசுகிற விசியம் தெரியும்


தற்பொழுது உள்ளவர்களுக்கு தெரியாது என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


கண்காணிப்பின் எல்லை அளவு குறைந்துவிட்டது.


மக்கள் புழங்கும் இடத்தில் கண்காணிப்பு அதிகம் இருந்தால் தான்..


எங்கு என்ன குற்றம் நடக்கிறது நடக்க போகிறது என்பது தெரியும்.

+++++++


ஒரு பிறந்தநாள் தட்டிகளில் உள்ள புகைப்படத்தில் உள்ளவர்களை கூட கண்காணிக்க தொடங்க வேண்டும்.


ஒருவன் பொது வெளியில் தட்டிகள் வைக்க ஆசை படுகிறான் என்றால்.


அவன் தன்னை அடையாளப்படுத்துகிறான் என்கிற பொருளில் பார்க்க வேண்டும்.


அவன் சகாக்கள் யார் என்று பார்த்து அவர்கள் இணைப்பை துண்டிக்க வேண்டும்.


முளையிலேயே கிள்ளி விட்டால் அது பெரிதாகாது.


++++++


To be continued..

Monday, July 22, 2024

கள் மது கள்ள மதுவா?

 அரசு கள் (பணை,தென்னை) கொள்முதல் செய்தால் விவசாயிக்கு மாதம் 25000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது,அரசு அதை மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபமும் வரும் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.


என்ன டாஸ்மாக் கொள்முதல் நம்பி சாராய நிறுவனம் நடத்தும் அமைச்சர்களுக்கு வருமானம் வராது .


முந்திரி,திராட்சை,மக்காச்சோளம் போன்ற விவசாய பொருட்களில் இருந்தும் பிற நாடுகளில் மது வகைகள் தயாரிக்கிறார்கள்..


அரசு டாஸ்மாக் வழியாக ஒரு அரசு மது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவது விற்கலாம்.


அந்த நிறுவனத்தின் 50% பங்குகளை தமிழ்நாட்டு மக்களிடம் கொடுத்தால் மக்கள் கையில் பாதி நிறுவனம் இயங்கும்.

Wednesday, July 17, 2024

காவாலி பையன் வரி

 காவாலா vs காவாலி 


காவாலா பாடல் உங்களுக்கு தெரியும்


காவாலி தெரியுமா ?


காவாலி பையன் என்பார்கள் 

அது ஏன் பையன் என்கிறார்கள்?


(மைனர் பையன் ?

என்கிற சொல்லும் அடங்கும் )


விஜயநகர பேரரசு காலத்தில்

திருமணமாகாமல் இருந்தால் வரி வாங்கியுள்ளர்கள்


அந்த வரி பெயர் தான்

காவாலி வரி


(திருமணம் செய்தாலும் வரி உண்டு

ஏர் வரி, கொடுவாள் வரி என விவசாய பொருட்களுக்கும் வரி உண்டு.)


காலப்போக்கில் காவாலி பையன் மட்டும் மொழிக்குள் நிற்கிறது.


இந்த பதிவுக்கு தமன்னா புகைப்படம் பதிவேற்றி இருக்கலாம்..

Views கிடைக்குமிலலையா ?


காவாலி காவாலா



Tuesday, July 16, 2024

Life time validity for OTP

 Budget 2024: ஒருவருக்கு ஒரு மொபைல் எண் வாழ்நாள் கால அளவு lifetime validity வழங்க வேண்டும், இது காலத்தின் கட்டாயம்.

ஒருவர் ஒரு எண்ணுக்கு ஆதார், வங்கி கணக்கு, ரயில்,விமான டிக்கெட் இதர அரசு சேவைகள் வாங்க பயன்படுத்துகிறார் .


இப்படி இருக்க அவரால் அந்த மொபைல் எண்ணை recharge செய்ய முடியாமல் இழந்தால் பெரும் சிக்கல் ஏற்படும்.


அதேபோல அந்த எண்ணை முறைப்படி மாற்றும் உரிமையும் வழங்க வேண்டும்.


இப்படியாக அவர் பல எண்கள் வைத்து இருந்தாலும் அந்த ஒரு எண் வாழ்நாள் கால அளவு கொண்ட எண்ணாக இருக்க வேண்டும்.


Recharge செய்யாமல் விட்டாலும் OTP செய்தி பெற பயன்படும்.

Sunday, July 14, 2024

கயவர் காவி கூட்டம்

 இணையத்தில் German carnival பார்த்தேன்..

இந்தியா வந்தது..

காவி கொடியை ஆட்டிக்கொண்டு..


மற்ற நாடுகள் எல்லாம் அவர்களின் கலைகளை ஆடி காட்டினார்கள்..

இவர்கள் கொடியை ஆட்டி காட்டி சென்று விட்டார்கள்.


இந்தியாவில் எவ்வளவோ நடனம் உள்ளது ஆனால் இந்த காவி கும்பல் அனைத்து நாடுகளிலும் நுழைந்து இந்தியர்கள் மானத்தை வாங்குகிறது.


ஒரு மயிலாட்டம் ஆடி இருந்தால் ஒட்டுமொத்த மக்களும் கைதட்டி இருப்பார்கள்..


உலகில் உள்ள மக்களுக்கு நம் நாட்டின் கலைகளை காட்ட வேண்டிய இடங்களில் கூட இவர்கள் நுழைந்து கெடுப்பது நம் நாட்டின் 7 கலை பிரிவுகளுக்கு கிடைத்த தோல்வி.


ஐரோப்பா இங்கிலாந்து அமெரிக்கா என்று இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் அதிகம்.


கலைகளை களவாடும்

கயவர் காவி கூட்டம்



மற்ற நாடுகள் எல்லாம் கைதட்டல் வாங்கியது

இந்தியா colourfulலாக வந்து அதிக கைதட்டல் வாங்கும் என எண்ணினேன்..


ஆனால் ஒரு பையன் கண்டுகொள்ளவில்லை.





Saturday, July 13, 2024

சின்ன வீடு வரை சீரி பாயும் சினிமா செய்திகள்

 ஏய் அந்த நடிகருடைய 3ம் மனைவி பெயர் என்ன ?

அந்த நடிகையுடைய 2ம் கணவர் பெயர் என்ன ? 

அவங்களுடைய மாமாவின் மனைவியின் தம்பியின் மனைவியின் தங்கை பெயர் என்ன ?


என்று எப்படி சுத்தி வளைச்சி கேட்டாலும் சரியாக சொல்கிறார்கள்..


ஆனால் ஒரு நிலத்திற்கு பட்டா வாங்க தெரியுமா என்றால் 


தெரியாது என்கிறார்கள் 


இப்படி எந்த ஒரு அடிப்படை விசியங்களும் தெரியாமல் பலர் இருக்க காரணம் சினிமா குறித்து பல தகவல்களை சேகரித்து வைத்துகொள்வது ..


குறைந்தபட்சம் நடித்தவர்கள் பெயர் தெரிந்து இருந்தால் போதும்..


ஆனால் அதை தாண்டி..


அவர்கள் குடும்ப பின்னணி சொத்து மதிப்பு என பல விசியங்களை தேவையில்லாமல் சேகரித்து வைத்துள்ளார்கள்.


இப்ப அந்த நடிகர் எங்க இருக்கார் என்று கேட்டால்..

சுவிஸ்சர்லாந்து நாட்டில் இந்த ஹோட்டலில் இந்த அறையில் உள்ளார்

இன்று காலை 2 இட்டிலி சாப்பிட்டார் என்பது முதற்கொண்டு சொல்கிறார்கள்.


எனக்கு இப்படி பேசுபவர்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.


சினிமாவில் ஐட்டம் டான்ஸ் பார்த்தியா போனியான்னு இருக்கணும் அந்த நடிகை யாரை வச்சி இருக்கான்னு எண்ண கூடாது..

அவ யாரை வச்சி இருந்தால் நமக்கு என்ன ?

அதிகார பலமும் அடங்காத பையனும்

 அம்பானி தன் மகனுக்கு திருமண செலவு செய்த தொகை அவரது சொத்தில் 0.5% .


உங்களால் அதே சதவிகிதத்தில் ஒரு திருமணம் செய்யமுடியுமா ? 


1 கோடி உங்கள் சொத்து என்றால் 50000 ரூபாய்க்கு திருமணம் செய்ய வேண்டும்.


அவரு 5000 கோடிக்கு செய்கிறார் ஆனால் சதவிகிதம் அடிப்படையில் பார்த்தால்.அது மிக சிறு தொகை.


ஆனால் அவர் செலவு செய்யும்  தொகையில் ஒரு சிறு மாநில budget போடலாம்.


நடக்கட்டும் நடக்கட்டும்

இப்படியாவது முடங்கிய பணம் வெளியே வருகிறதே


அந்த தம்பியை பார்த்தால் மிகவும் அப்பாவியாக உள்ளான்..


சொத்தை யாராவது ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது.


அவனோட விருந்தினர் யார் என்றால் அவன் சிறு வயது முதல் பார்த்த TV பிரபலம் , சினிமா மற்றும் இதர தொழிலதிபர் பிரபலங்கள்.


WWF ஜான் சீனா எல்லாம் திருமணத்திற்கு வந்துள்ளார்கள்.


பயங்கரமாக வீட்டில் அடம்பிடித்து இருப்பான் போல..


அம்மா அவன் பக்கம் இருப்பதால் அப்பாவால் என்ன செய்ய முடியும்..


இந்த திருமணத்தால் அம்பானிக்கு அரசியல் ரீதியாக மிக பெரிய தொழில் அழுத்தம் வர வாய்ப்புகள் உள்ளது.


1996 ல் மைக்கில் ஜாக்சன் மும்பை வந்தபோது அது மிக பெரிதாக அப்பொழுது பேசப்பட்டது..


ஆனால் தற்பொழுது டவுன் பஸ்ஸில் ஊர் திருவிழாவிற்கு வருவது போல ஹாலிவுட் பாப் பாடகர்கள் வரிசையாக வந்து செல்கிறார்கள்.


அதுவும் ஜஸ்டின் பைபர் பாடிய பாடல் சரியில்லை என்பதால் ஆனந்த் அம்பானி இறுதியில் அவன் தோளை தட்டி அழைத்து 

அங்கு தூரத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்காவது கை காட்டிவிட்டு போ என்பதை போல செய்தது வேடிக்கையாக இருந்தது


(How many of you noted this sarcasm)


பணம் விளையாடுகிறது..


அந்த பையனுக்கு திருமணம் இரண்டாம் பட்சம் தான்

இதன் மூலம்

தான் யார் என்று காட்டுவது தான் அவனது முதல் கருப்பொருள்

செய்த செலவை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்

 இந்திய நாடு வாங்குகிற வரிக்கு கண்ணாடி போல சாலை போட முடியும்.


USSR சோவியத் யூனியன் காலத்தில் போடப்பட்ட சாலைகளில் தான் இன்னமும் அதன் உறுப்பு நாடுகளில் வாகனங்கள் செல்கிறது.

சாலைகள் இன்னமும் தரமாக உள்ளது..


அப்படி என்றால் அந்த சாலைகளின் தரம் எப்படி இருக்கும் பாருங்கள்.


நாம் வருடத்திற்கு இரண்டு முறை மாநில சாலைகளை போடுகிறோம்..


சாலை ஓரம் இருந்த வீடுகள் கடந்த 30 ஆண்டுகளில் 5 அடி கீழே சென்றுவிட்டது..


அவ்வளவு சல்லி வாங்கி கொட்டி ஒட்டி இருக்கிறார்கள்


காசை வீண் செய்கிரார்கள்


இதனால் மக்களுக்கு தான் இழப்பு


திரும்ப திரும்ப சாலை அமைக்கிறார்கள்.


பணம் மீண்டும் மீண்டும் ஒரே விசியத்திற்கு செலவு செய்யபடுகிறது.

Friday, July 12, 2024

தைக்கா தையல் தைக்கும் தையா

 உன் சாயலில் பல கதாபாத்திரங்களை உருவாக்கிவிடுவேன்

அல்லது

பல கதாபாத்திரங்களில் உன் சாயலை பொருத்தி விடுவேன் 

எனக்கு துரோகம் செய்யாதே

எனக்கு கதைகள் கவிதைகள் எழுத தெரியும்.

Call girl service interrupted kanoli

 காலையில் பதிவு செய்த காணொளி தொடக்கத்திலேயே தடை வந்தது...

பாதியில் காணொளி தடைபட்டது

இறுதியில் நானே பாதியில் நிறுத்திவிட்டேன்..


நான் இருக்கும் சூழ்நிலை சரியில்லை என்று தோன்றியது.


அந்த காணொளி முடியும்போது ஒரு நபர் பைக்கில் வந்து காரில் பின் இருக்கையில் ஏறுவார் பாருங்கள்..


அப்பொழுது தான் நான் பார்த்தேன் பின் இருக்கையில் ஒரு பெண் இருந்தார்.


இவர் ஏறியதும் இருவரும் நெருங்கிவிட்டார்கள்


Call girl service பா அது..


சரி இடமும் நேரமும் சரியில்லை என்று கிளம்பிவிட்டேன்.


தனியாக நேரம் கழிக்கவே முடியவில்லை.


வீட்டிலும் விடியோ பதிவு செய்ய இடையூறாக உள்ளது.


😂 


நான் வழக்கமாக காணொளி எடுக்கும் குளம் அருகே ஒரு கோவில் திருவிழா நடக்கிறது அங்கு சத்தம் காதை பிளக்கிறது..


பல தொந்தரவுகளுக்கு இடையே தான் காணொளிகள் பதியபடுகிறது .


எழுத்து பதிவும் சுலபமல்ல.


ஆனால் பல இடையூறுகளுக்கு இடையே புல்லும் ஆயுதமாக பயன்படுத்தபடுகிறது ..





Thursday, July 11, 2024

Mutual Tax

India is benefited by taxes but Indians are not benefited, know the difference . Move for a mutually beneficial methods.


My words may be simple but understanding it is very hard


Outcome of tax is continuously non beneficial


Particularly failing in infrastructures

(Money has been wasted on poor condition infrastructures) 

Failing in hygiene

Failing in transports

Like this there are many failing fields 


Where Tax money has been wasted





சேவையடியாள் நிறம் நிறுவனங்களில்

 ஒரு தனியார் நிறுவனத்திற்கு சேவை குறைபாடு காரணமாக புகார் அளிக்க வந்தேன்.. Regional Manager ரை பார்க்க சொன்னார்கள்..

உள்ளே சென்றால் இரண்டு பெண்கள் மத்தியில் அமர்ந்து மொபைல் பார்த்துகொண்டு இருந்தார்.


ஒரு பெண் அவர் தொடையிலும் ஒரு பெண் தலை முடியை கோதி கொண்டும் இருந்தார்கள்..


என்னை பார்த்தும் அவர்கள் கையை எடுக்கவில்லை.


என் புகாரை சொன்னேன்

தேதி தெரியாமல் பார்க்க முடியாது என்றார்..


சரி என்று திரும்பினேன்..

அதில் ஒரு பெண்..

உங்கள் மொபைலில் ஏதாவது message photo இருக்கான்னு பாருங்க என்றார்.


நல்ல யோசனை என்று பார்த்தேன் இருந்தது..


தேதியை சொன்னேன்..


அவர் இரண்டு பக்கம் உள்ள கையை எடுத்துவிட்டு அலுத்து  கொண்டு எழுந்தார் ..


என்னை ஒரு 10 நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு அறைக்கு சென்றார் அவர் பின்னே அதில் ஒரு பெண் சென்றார்.


..


அவர் 10 நிமிடம் கழித்து வந்து பில்லை கொடுத்துவிட்டார்..


இடைப்பட்ட நேரத்தில் இந்த இரண்டு பெண்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டு இருந்தேன்.


ஒரு வேலையும் செய்யாமல் மொபைல் பார்பதும்.


மற்றவர் வேலை செய்வதை கண்காணிப்பதுமாக இருந்தார்கள்..


அந்த நிறுவனத்தில் மற்ற பெண் ஊழியர்கள் எல்லாம் இதை கவனித்தும் இதை கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.


இதைப்பற்றி கேட்டால் அவர்களுக்கு வேலை போய்விடலாம்..


ஆனால் இந்த பெண்கள் உயர் அதிகாரியை கையில் போட்டுகொண்டு அவன் இச்சைக்கு ஒத்து போய்..

இவர்கள் சுகமாக வாழ்வது ஒரு ரகமாக எனக்கு தெரிந்தது..


...


இப்படி ஒவ்வொரு நிறுவனதுக்குள்ளும் ஒரு கதை இருக்கும்..


என்கிற நினைப்பில் வெளியேறினேன்..


(நான் போய் அவர்களை கேள்வி கேட்க முடியாது முன்பு அதுபோல கேட்டு நான்  அவமான பட்ட கதைகள் உண்டு.. உன் வேலையை பார்த்திட்டு போடா என்பார்கள்.

அல்லது உனக்கு கிடைக்கவில்லை என்று பொறாமையில் வயிது எரிச்சலில் பேசுகிறாய் என்பார்கள்)


Wednesday, July 10, 2024

Port to BSNL

 Budget2024 BSNL needs 5G network service

,As other TELECOM sectors raised the price govt has to give 5G license to BSNL


Govt policies intentionally stopping the BSNL development

On the other hand it helps the private sector in gain.


Otherwise sell the BSNL completely

Because govt sector investment and development has been used by private sectors through BSNL infrastructures.



அமைப்புசாரா பணியாளர் உரிமை

 கடைகளில் வேலை செய்யும் நபர்கள் அமர்வதற்கு இருக்கையும்,போதுமான கழிப்பறை வசதிகளும் உரிமையாளர்கள் செய்து தர வேண்டும் என பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது.


இந்த ஒவ்வொரு தீர்புகளுக்கு பின்னால் பல போராட்டங்கள் உள்ளது.


அரசு அவ்வப்பொழுது இவைகளை ஆய்வு செய்ய வேண்டும்.


குறிப்பாக இவர்களை PF முறைகுள்ளும் கொண்டு வர வேண்டும்.


தொழிலாளர் ஆணையம் மாதம் அல்லது வருடம் ஒருமுறை பெரிய கடை உரிமையாளர்களை அழைத்து தொழிலாளர் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும்.


..


குறிப்பாக பெண்களை இரவு 10 மணிக்கு வீட்டுக்கு அனுப்பும் செயலும் உள்ளது..


அவர்களை முன்கூட்டியே அனுப்ப காவல்துறை அறிவுறுத்த வேண்டும்.


#Governance

Tuesday, July 9, 2024

High Interest rate on education loan

 Budget 2024 : 

மாணவர் கல்வி கடனுக்கு 8.10% முதல் 15% வட்டி வசூலிக்கிறது இந்திய வங்கிகள் அதை 4% என குறைத்து celing limit வைக்க வேண்டும்.


பலருக்கு படித்து முடித்த பிறகு வேலை வாய்ப்பு இல்லாததால்

வேலை கிடைத்ததும் போதுமான சம்பளம் இல்லாததால்

அவர்களால் அதிக வட்டி காரணமாக வாங்கிய கடன் தொகையை செலுத்த முடியாமல் போகிறது.


அரசு மாணவர் கடன் தகவலை தனியாரிடம் வழங்கி உள்ளது.


தனியார் நினைத்தால் இந்த மாணவர்களை தவறான வழிக்கு இட்டு செல்ல முடியும்

அவர்களால் கடன் தொகை செலுத்த முடியாத பட்சத்தில்.


இவைகளை கண்காணிக்க வேண்டும்

அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட கூடாது..


ஆகமொத்தில் யாருக்கும் பாதகம் இல்லாமல் கடனுக்கான வட்டி தொகையை குறைக்க வேண்டும்.

Monday, July 8, 2024

Budget boy tax buoy

 Indian youngsters were ready to take economical risks, so they blindfoldly invest in risky sectors. To protect them and also to protect their future the government has to regulate many things #budget2024 


Like BHIM APP create new govt app

or use the BHIM app as also a brokerage for investing in stock markets



++++++


இந்தியாவில் பல்வேறு துறைகளில் வரி விகிதம் அதிகமாக உள்ளது. 


இங்கு ஒருவன் குறுகிய காலத்தில் பணக்காரனாக உருவெடுக்க முடியாது அப்படி உருவெடுத்தால் அந்த நபர் முறையாக அனைத்து வரியும் செலுத்தி இருக்க மாட்டார்.


இங்குள்ள வரிபமைப்பு யாரையும் எளிதில் பணக்காரராக உருவெடுக்கும் வகையில் இல்லை.


நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்தால்

உங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பாதியை வரிகளில் இழந்து விடுவீர்கள்.


உங்களுக்கு லாபம் கிடைத்தாலும் அதை நீங்கள் அடுத்த கட்டத்துக்கு எடுததுச் செல்ல முடியாத நிலை இருக்கும்.


ஆனால் இங்கு இதுவரை வரி துறையை ஏமாற்றி தான் பெரும் பணக்காரர்கள் உருவெடுக்கிறார்கள்.


முறையாக வரி கட்டினால் 

ஒரு பிரியாணி கடையை வைத்து உங்களால் ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவ முடியாது


ஆனால் கருப்பு பணத்தை வைத்து உருவாக்க முடியும்.


அதற்கான வழிகள் மிக எளிதில் உள்ளது.


ஒரு பக்கம் வரி அதிகமாக உள்ளது

மறுபக்கம்

கருப்பு பணத்தை வைத்து வரி கட்டாமல் தப்பிக்கும் வழியும் உள்ளது.


இந்திய வரி விதிப்பும் அதன் சட்டமும் நாட்டின் வளர்ச்சிக்கு முழுவதும் முரணாக உள்ளது.


ஒரு சில தனி நபர் வளர்ச்சிக்கு மட்டுமே அது சாதகமாக உள்ளது.


+++++(

Change National stock exchange from Mumbai to Nagpur 


Let it won't fall on Mumbai weather


#Budget2024

Sunday, July 7, 2024

Ai idea to remove caste system

When I questioned Chatgpt :


Ai answers


How to remove caste system from india?


Removing the caste system from India is a complex and multifaceted challenge that requires sustained efforts on multiple fronts, including social, educational, economic, legal, and political domains. Here are several approaches that could contribute to addressing this issue:


1. **Education**: Promoting inclusive and equitable education is crucial. This involves:

   - Raising awareness about the negative impacts of the caste system.

   - Incorporating lessons on equality, human rights, and social justice in school curricula.

   - Encouraging critical thinking and empathy in students from a young age.


2. **Economic Empowerment**: Providing economic opportunities for marginalized communities can help reduce caste-based disparities. This can be done through:

   - Affirmative action policies like reservations in education and employment.

   - Skill development programs and vocational training.

   - Access to credit and financial services for disadvantaged groups.


3. **Legal Reforms**: Strengthening and enforcing laws against caste-based discrimination is essential. This includes:

   - Implementing existing anti-discrimination laws effectively.

   - Ensuring swift and fair justice in cases of caste-based violence and discrimination.

   - Increasing legal literacy among marginalized communities.


4. **Political Will and Leadership**: Political leaders and parties should commit to:

   - Promoting policies that foster social integration and equality.

   - Encouraging diverse representation in political institutions.

   - Leading by example and condemning caste-based practices and rhetoric.


5. **Social Movements and Grassroots Activism**: Civil society organizations and grassroots movements play a crucial role in:

   - Mobilizing communities to demand their rights and fight discrimination.

   - Building solidarity across caste lines.

   - Highlighting and challenging instances of caste-based injustice.


6. **Media and Culture**: Media and cultural initiatives can help change public perceptions and attitudes. This involves:

   - Promoting positive stories and role models from marginalized communities.

   - Creating content that challenges stereotypes and highlights the value of diversity.

   - Using social media and other platforms to raise awareness and build support for equality.


7. **Religious and Community Leaders**: Engaging religious and community leaders to:

   - Advocate for social reforms and condemn caste-based discrimination.

   - Promote inclusive practices within religious and community settings.

   - Foster dialogue and understanding among different caste groups.


8. **Inter-caste Marriages**: Encouraging and supporting inter-caste marriages can help break down caste barriers and promote social integration.


9. **Monitoring and Accountability**: Establishing mechanisms to monitor progress and hold institutions accountable for implementing anti-caste discrimination policies.


Addressing the caste system is a long-term process that requires collective efforts from all segments of society. Collaboration between government, civil society, and individuals is essential to create a more just and equitable society.


+++++


When I questioned Gemini :


The caste system is a complex and entrenched social hierarchy in India, but there are ongoing efforts to dismantle it. Here are some approaches:

* Legal Measures: The Indian constitution prohibits caste discrimination and reservations are provided in education and jobs for disadvantaged castes. Strengthening legal frameworks and ensuring faster judgement for caste crimes is crucial.

* Education and Awareness: Spreading awareness about the negative impacts of caste and promoting education for all can challenge its legitimacy. Educational institutions can introduce courses that promote social equality.

* Economic Empowerment: Creating a society with equal access to opportunities, especially for underprivileged castes, can weaken the hold of the caste system. Skill development programs and affirmative action policies can help achieve this.

* Social Change: Long-term social change is necessary. Inter-caste marriages, encouraging people from different castes to socialize, and promoting a meritocratic society can bring about this change.

* Alternatives to Caste-based Security: The caste system sometimes fills a social security gap. Strengthening social security systems and safety nets can reduce dependence on caste for support.

These efforts need collaboration between the government, civil society organizations, and individuals. It's a long road, but progress is being made.



Friday, July 5, 2024

நலமா

 5:03 am

Hi how are you


5:27 am

😘


6:03 am

I started to feel you as my wife 


6:21 am

We have to exchange our energy

😘❤️💕

Coperate 


9:37 am

Slept till 8:30 good sleep


10:39 am



11:48 am


கர்ப்பப்பை டெஸ்ட் பண்ணு..

உனக்கு வராது but better test and prevent .


Vaccine போடு



12:19 pm


இங்க பாரு டி

நான் நிறைய think பண்ண வேண்டி இருக்கும்..

 அப்பொழுது தான் opposite ideology யை defend பண்ண முடியும்.


அப்போ கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கும்.


So should not distrub at that time


1:50 pm

Became dehydrate

Till one orange juice

Today so hot



6:57 pm

வெறுப்பு எத்தாத




8:00 pm

இங்க 4 நான் படுற கஷ்டம் எனக்கு தான் தெரியும்


8:18 pm

Im happy too


11:01 pm

கொஞ்சம் rain here


On the whole

உனக்கு ஆரம்பத்தில் இருந்தே caste தான் பிரச்சனையா இருக்கு இல்லையா ?


அந்த point ல இருந்து தான் நீ track மாறுன..

அதுக்கு அப்பறம் தான் எல்லாம் நடந்தது..


So caste தான் உன்ன தயங்க வைக்குது


அப்படி நான் எடுதுகிட்டுமா ?


But இதை நான் break பண்ண தான் ஒரு பிளான் உனக்கு கொடுத்து இருக்கேன்..


அது உனக்கு இன்னும் புரியல..


அந்த assignment உனக்கு கொடுத்து 10 years ஆகுது..

Even though you sleep it will automatically work. 

It will happen..


That's a calculation


அது உனக்கு இப்ப சொன்னால் புரியாது..


11:07 pm


I've other personal plans

Other than our plans

I've to complete that. 


That's on other side. 


11:09 pm

Accident and loosing eye sight is out of my plan..

It's natural plan. 


That's the most strongest plan. 


Even though I take it easy..

There may be reason for everything


I learnt who are true people and who not


11:15 pm

Whatever you are reading in this blog

Is my indirect plan

Redirecting you people to my direct plan

Which is in my mind

You can read it. 


Which is the master plan 

Even that plan has a plan b


People cannot read it but they will see it after I gone from this world. 


3:46 am


From your breath I will read your mind notes

Don't think you are ஏமாத்தி fying 


Im highly connected with you