ஒரு தனியார் நிறுவனத்திற்கு சேவை குறைபாடு காரணமாக புகார் அளிக்க வந்தேன்.. Regional Manager ரை பார்க்க சொன்னார்கள்..
உள்ளே சென்றால் இரண்டு பெண்கள் மத்தியில் அமர்ந்து மொபைல் பார்த்துகொண்டு இருந்தார்.
ஒரு பெண் அவர் தொடையிலும் ஒரு பெண் தலை முடியை கோதி கொண்டும் இருந்தார்கள்..
என்னை பார்த்தும் அவர்கள் கையை எடுக்கவில்லை.
என் புகாரை சொன்னேன்
தேதி தெரியாமல் பார்க்க முடியாது என்றார்..
சரி என்று திரும்பினேன்..
அதில் ஒரு பெண்..
உங்கள் மொபைலில் ஏதாவது message photo இருக்கான்னு பாருங்க என்றார்.
நல்ல யோசனை என்று பார்த்தேன் இருந்தது..
தேதியை சொன்னேன்..
அவர் இரண்டு பக்கம் உள்ள கையை எடுத்துவிட்டு அலுத்து கொண்டு எழுந்தார் ..
என்னை ஒரு 10 நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு அறைக்கு சென்றார் அவர் பின்னே அதில் ஒரு பெண் சென்றார்.
..
அவர் 10 நிமிடம் கழித்து வந்து பில்லை கொடுத்துவிட்டார்..
இடைப்பட்ட நேரத்தில் இந்த இரண்டு பெண்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டு இருந்தேன்.
ஒரு வேலையும் செய்யாமல் மொபைல் பார்பதும்.
மற்றவர் வேலை செய்வதை கண்காணிப்பதுமாக இருந்தார்கள்..
அந்த நிறுவனத்தில் மற்ற பெண் ஊழியர்கள் எல்லாம் இதை கவனித்தும் இதை கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.
இதைப்பற்றி கேட்டால் அவர்களுக்கு வேலை போய்விடலாம்..
ஆனால் இந்த பெண்கள் உயர் அதிகாரியை கையில் போட்டுகொண்டு அவன் இச்சைக்கு ஒத்து போய்..
இவர்கள் சுகமாக வாழ்வது ஒரு ரகமாக எனக்கு தெரிந்தது..
...
இப்படி ஒவ்வொரு நிறுவனதுக்குள்ளும் ஒரு கதை இருக்கும்..
என்கிற நினைப்பில் வெளியேறினேன்..
(நான் போய் அவர்களை கேள்வி கேட்க முடியாது முன்பு அதுபோல கேட்டு நான் அவமான பட்ட கதைகள் உண்டு.. உன் வேலையை பார்த்திட்டு போடா என்பார்கள்.
அல்லது உனக்கு கிடைக்கவில்லை என்று பொறாமையில் வயிது எரிச்சலில் பேசுகிறாய் என்பார்கள்)
No comments:
Post a Comment