Truth Never Fails

Wednesday, July 24, 2024

போலீஸ் உரிமை

 முன்பு இருந்த போலீஸ்க்கும் தற்பொழுது உள்ள போலீஸ்க்கும் வித்தியாசம் இருக்கு.


4 போலீஸ் தான் இருப்பாங்க 20000 மக்கள் வாழும் ஊரை கட்டுக்குள் வைத்து இருப்பார்கள்..


பொழுது சாய்ந்த நேரத்தில் சும்மா நின்றால் கூட 3 அடி கொடுத்து தான்  அனுப்புவார்கள் ..


இதில் சிறியவர் பெரியவர் என்கிற வித்தியாசம் இருக்காது..


ஆனால் அது மெல்ல மாறி 30 ஆண்டுகளில்

போலீஸ் என்பது மென்மையாகிவிட்டது.


++++++


அப்படியே அந்த பக்கம்


முன்பு ரவுடி என்கிற நபர் குடித்து கொண்டு 

பெண்களை கிண்டல் அடித்து கொண்டு..

அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தியோ மிரட்டியோ வாழ்ந்து வந்தார்கள்..


அது அடுத்து கஞ்சா அடிக்கும் நிலைக்கு சென்றது..


அடுத்து பழிக்கு பழி கொலை நிலைக்கு சென்றது..


அதிகபட்சம் ஒரு இருசக்கர வாகனம் வைத்து இருந்தார்கள்..


ஆனால் தற்பொழுது

Fortuner கார் வைத்துள்ளார்கள்

100 கோடி அளவுக்கு பணம் வைத்துள்ளார்கள்

பல கொலைகள் செய்கிறார்கள்.


அரசியலையே தீர்மானிக்கிறார்கள்..


+++++++


இங்கே நேர்மையானவர்கள் நல்லவர்கள் ஏழ்மை நிலைக்கு செல்கிறார்கள்.


இதுபோல ஒரு இடத்தில் இருப்பது ஆபத்து.


குற்றவாளிகள் பலம் பெறுவது அனைவருக்கும் ஆபத்து.


++++++++


காவல்துறை மக்கள் தொடர்பில் இருந்து விலகி இருப்பதாக நான் பார்க்கிறேன்..


ஒரு அறைக்குள் இருந்து தேர்தல் கருத்துக்கணிப்பு எழுதுவது போல


தற்பொழுது காவல்துறை குற்ற நிகழ்வுகளை ஒரு அறைக்குள் இருந்து கண்காணிக்க தொடங்கிவிட்டார்கள்.


இதில் மக்களின் நேரடி தொடர்பை இழந்து வருகிறார்கள்.


SP முதல் DGP வரை ஏதோ தங்களை ஒரு VIP CELEBRITY போல கருத தொடங்கிவிட்டதின் விளைவே இது.


நான் அனைவரையும் சொல்லவில்லை பெரும்பாலும் இப்படி தான் நான் பார்க்கிறேன்.


முன்பு இருந்த காவலர்களுக்கு டீ கடையில் பேசுகிற விசியம் தெரியும்


தற்பொழுது உள்ளவர்களுக்கு தெரியாது என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


கண்காணிப்பின் எல்லை அளவு குறைந்துவிட்டது.


மக்கள் புழங்கும் இடத்தில் கண்காணிப்பு அதிகம் இருந்தால் தான்..


எங்கு என்ன குற்றம் நடக்கிறது நடக்க போகிறது என்பது தெரியும்.

+++++++


ஒரு பிறந்தநாள் தட்டிகளில் உள்ள புகைப்படத்தில் உள்ளவர்களை கூட கண்காணிக்க தொடங்க வேண்டும்.


ஒருவன் பொது வெளியில் தட்டிகள் வைக்க ஆசை படுகிறான் என்றால்.


அவன் தன்னை அடையாளப்படுத்துகிறான் என்கிற பொருளில் பார்க்க வேண்டும்.


அவன் சகாக்கள் யார் என்று பார்த்து அவர்கள் இணைப்பை துண்டிக்க வேண்டும்.


முளையிலேயே கிள்ளி விட்டால் அது பெரிதாகாது.


++++++


To be continued..

No comments:

Post a Comment