சவுக்கு சங்கர் & பாஜக தலைவர் அண்ணாமலை :
இந்த இருவரிடமும் ஒரு சில ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன்.
அதாவது இவர்கள் இருவரும் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று நான் சொல்லவில்லை..
இவர்களின் அரசியல் செயல்பாடுகளில் ஒருசில ஒற்றுமைகள் உள்ளதை நான் பார்க்கிறேன்.
++++++++
No doubt
இருவருமே முன்னாள் போலீஸ்காரர்கள்
முதல் ஒற்றுமை.
இருவருமே ஆர்வகொலாருகள் .
உளவு தகவல்களை வைத்து அரசியல் செய்யலாம் என எண்ணுபவர்கள்..
>>>>>>>>>=<<<<<<<<<<
Exclusive பதிவு என்பதால் காத்திருங்கள்
அல்லது கட்டணம் கட்டி முழு பதிவை வாட்ஸ் ஆப்பில் வாங்கிக்கொள்ளலாம்..
😁😂😂😂🤣😁
>>>>>>>=====<<<<<
சரி சொல்கிறேன்
Ground level politics
இருவருக்கும் தெரியவில்லை
இருவருமே வீடுவீடாக பூத் slip கொடுத்து
பூத்தில் அமர்ந்து வாக்கு பதிவை கண்காணித்து இருக்கமாட்டார்கள்.
தெரு தெருவாக போஸ்டர் ஒட்டி இருக்கமாட்டார்கள்.
ஒரு உள்ளாட்சி தேர்தலில்
வார்டு மெம்பர்
செய்யும் அரசியல் இவர்களுக்கு தெரியாது.
++++++
ஏதாவது அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டு இருப்பார்கள்.
அரசியல்வாதிக்கு பாதுகாப்பு கொடுத்து இருப்பார்கள்.
இருவருக்கும் அரசியல்வாதிகள் என்றாலே ஒரு கேவலமான பிம்பம் முன்பு இருந்திருக்கும்.
++++++++
Popularity யை வைத்து தேர்தலில் வென்று விடலாம் என நினைக்கிறார்கள்.
ஏதாவது சிறு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து பெரிய அரசியல் செய்யலாம் என நினைக்கிறார்கள்.
குறிப்பாக எதை வைத்து அரசியல் செய்யகூடாது என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
++++++++
இருவரையுமே பின்னால் இருந்து வேறு யாரோ இயக்குகிறார்கள்.
கையில் சர்ச்சைக்குரிய ஒரு பெரிய தகவல் கிடைத்தால்../சிக்கல் நேர்ந்தால்..
என்ன செய்வது என தெரியாமல் மேலே உள்ள X நபரிடம் ஆலோசனை பெற அல்லது order பெற காத்து இருக்கிறார்கள்.
இது போலீஸ் நடைமுறையில் உள்ள செயல்.
சுய புத்தி இருவருக்குமில்லை.
.........
இருவரும் MP ஆகலாம்
வாய்ப்புகள் இருக்கிறது..
அதன்பின் இருவரும் இருக்குமிடம் தெரியாமல் போவார்கள்.
++++++++
இருவருக்கும் கிடைக்கும் உளவு தகவல்கள் நிறுத்தப்பட்டாலே
இருவரும் ZERO தான்.
இருவரிடமும்
PRODUCTIVITY இருக்காது
Positivity யும் இருக்காது.
Creativity யும் இருக்காது
பொய் இருக்கும்
பிரிவினையை தூண்டுதல் இருக்கும்
உளவு தகவலில் உள்ள உண்மையை
அவர்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள்.
+++++++++
தற்பொழுது பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் உளவு தகவல்களை முன்னாள் ஊழியர்களிடம், batchmates,நண்பர்களிடம்,குடும்ப உறுப்பினர்களிடம்,காதலிகளிடம் பகிர கூடாது.
இந்த ஒரு நூலை பிடித்து அரசு செயல்பட்டால் ..
இவர்கள் நெருக்கடிகளை சந்திப்பார்கள்.
++++++++
அரசியல் என்பது மிக விரிவானது..
இவர்கள் இருவரும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பதாக நான் பார்க்கிறேன்.
🧐
No comments:
Post a Comment