Truth Never Fails

Tuesday, November 5, 2019

Cheating corporates custom is casted

 ஒரு நாள் swiggyல  சாப்பாடு வாங்கிட்டு காத்திருந்தேன்.. 


கடையில் சாப்பாட்டை எடுத்த அதன் பணியாளர் என்னை அழைத்து  அவனது தனிப்பட்ட எண்ணிற்கு ஒரு missed கால் கொடுங்க கிட்ட வந்ததும் அழைக்கிறேன் என்றான்..

நான் முன்னெச்சரிக்கையாக ஒரு Screenshot எடுத்துவிட்டு missed கால் கொடுத்தேன்..


அடுத்த நொடியே food delivered என்று வந்து order closeசாகி விட்டது..


பிறகு நிறுவனத்திடம் நடந்ததை சொல்லி முறையிட்டேன்..

பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள்..


அடுத்த 30 நிமிடத்தில் அதே உணவை வீட்டுக்கு வர வைத்துவிட்டார்கள்..

அந்த பையனை வேலையை விட்டு அனுப்பி இருக்க கூடும்..


ஆனால் அந்த பையன் என்ன தில்லுமுல்லு பண்ணாண்ணு தெரியல..

ஆனா ஏதோ பண்ண போறான் என்று தான் முன்னெச்சரிக்கையாக screenshot எடுத்தேன்..


நிறுவனத்தையும் ஏமாற்றி இருக்கான் மக்களையும் ஏமாற்றி இருக்கான்..


இந்த மாதுரி நிறுவனம் நடத்துறது சாதாரண விஷயமல்ல..


தினமும் 100 பணியாளர் ஏமாற்றுவார்கள் 100 வாடிக்கையாளர்களும் ஏமாற்றுவார்கள்..  

இதில் சில patternகளை அவர்கள் study செய்திருப்பார்கள்..


இதுபோன்ற கர்பொரேட் நிறுவனங்களில் பணிக்கு சேர்ப்பார்கள் நம்மை பற்றி நிறுவனத்திற்கு எதுவும் தெரியாது என்று எண்ணாதீர்கள்..


உங்களை போல பலரை பார்த்தவர்கள் எந்த ஆடு எப்படி மேய்யும் எப்படி தண்ணி காட்டனும் என்று நன்கு அறிந்திருப்பார்கள்.. Analytics by AI


உண்மையாக வேலை செய்தால் நல்ல பலனையும் கொடுப்பார்கள்..


ஆனால் ஆடு என்றுமே பலியாடு தான்..


அதற்கு எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் layoff 


#Infosys #cognizant

No comments:

Post a Comment