நான் உங்களுக்கு சொன்னென்னா இல்லையான்னு தெரியல.
2013ல் வீடு கட்டி முடித்து குடி வந்த நிலையில்..
எங்க அம்மா கோவிலுக்கு வேண்டிக்கிட்டு காசு சேர்த்து வச்சிருக்கேன்னு ஒரு துணி முடியை காட்டினார்..
நான் எந்த கோவில் என்றேன்..
திருப்பாபுலியூர் கோவில் என்றார்..
அந்த கோவிலுக்கு நமக்கு சம்பந்தமே கிடையாது நீ எதுக்கு வேண்டிக்கிற என்று திட்டிவிட்டு கூட்டி சென்றேன்..
மாலை 3:30க்கே அங்கு சென்றுவிட்டோம்.. கோவில் நடை மூடி இருந்தது..
கோபத்தில் இருந்த எனக்கு இன்னும் கோபவம் வரவழைத்தது..
4 மணிக்கு தான் திறப்பார்கள்.. பிறகு ஒரு கால் மணிநேரம் பூஜை செய்வார்கள் அரை மணி நேரத்துக்கு மேல் வீணாகிவிடும் என்கிற கோபம்..
அர்ச்சகர் வந்தார் கருவறையை திறந்தார்..
குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று திரை சேலையை மூடினார்..
மீண்டும் வெளியே வந்து எங்களை அழைத்தார்..
கருவறைக்குள் நாங்கள் சென்றோம்..
உள்ளே இடதுபுறம் 4 நபர்கள் நிற்கும் அளவுக்கு ஒரு இடமிருந்து.
எங்க அம்மாவுக்கு சந்தோசம் தாங்கல கருவறைக்குள் நாங்க நிற்கிறோம்..
எங்க அம்மாவின் காதில் நாம SCன்னு தெரிஞ்சா .. என்று சொல்லி சிரித்தேன்..
அந்த அர்ச்சகர் என்னை லிங்கத்திடம் அழைத்தார்..
நகைகளை கிழட்டி ஒரு ஓரமாக வைத்தார்..
நகைகளை கிழட்டியதும் அதன் அழகே போய் ஒரு ஆண் குறி தெளிவாக தெரிந்தது..
பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
(ஆண் குறி சிலையா? என்கிற அருவருப்பு ஆபரணங்களுடன் பார்த்தால் அடையாளமே தெரியாது முற்றிலும் வித்தியாசமாக ஜோடிக்கப்பட்டது போல் இருக்கும்)
குடத்தில் உள்ள நீரை ஊற்ற சொன்னார்.. ஊற்றினேன்..
பிறகு பாலை ஊற்றினார்
பிறகு சந்தனம்
பிறகு பழ வகைகள் பஞ்சாமிரதம்
என ஊற்ற என்னை
தேய்த்து கழுவ சொன்னார்..
கை வைக்கவே எனக்கு அருவருப்பாக இருந்தது..
அப்போது சிலையில் பல இடங்களில் சிதைவு இருந்தது சிறு சிறு போக்கை பள்ளங்கள் ஒரு கற்பாறைபோல் .. வழுவழுப்பாக இல்லை சில இடங்கள் சொரசோரப்பாக இருந்தது..
இறுதியாக நீர் ஊற்றி கழுவிய பிறகு..
அணிகலன்களை அணிவித்தார்..
மூன்று பட்டை நகை ஆண் குறி வடிவத்தை மறைத்தது..
லிங்கம் வேறு வடிவம் பெற்றது..
கற்பூர தீபம் காட்டினார்..
கருவறைக்குள் ஒரு புறம் நின்றுகொண்டு இருந்த என் அம்மாவிடம் ஆரத்தி தட்டை எடுத்து சென்றார் நான் அவருக்கு பின்னால் நின்றுகொண்டு இருந்தேன்..
என் அம்மா பக்தி மயக்கத்தில் கையில் உள்ள மோதிரத்தை கிழட்டி தட்டில் போட்டார்..
அவர் வேண்டாம் எடுங்க என்றார் நான் பின்னால் இருந்து எடுத்துக்கொண்டேன்.
அவர் திரும்பியதும் எங்கம்மாவுக்கு லேசாக ஒரு கொட்டு வைத்து
தங்கம் விக்குற விலைக்கு..
மனசுக்குள்ள மகராணின்னு நினைப்பா ..
இப்படி பண்ண உனக்கு எதுமே வாங்கி தரமாட்டேன் என்று மெதுவாக காதில் திட்டினேன்..
அர்ச்சகர் பெரிய 5 அடுக்கு தீப விளக்கை ஏற்றி தீபாராதனை செய்தார்..
உடுக்கை ஒலி ஒலிபெருக்கியில் இசைத்து..அது அந்த சுவற்றில் எதிரொலித்தது
பிறகு எங்களை திரை சீலையை திறந்து வெளியே போக சொன்னார்..
நான் திரை சீலையை திறந்தேன்..
நூற்றுக்கணக்கான மக்கள் என் எதிர்புரத்தில் கைகூப்பிய நிலையில் பக்தி பரவசத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள்..
அங்கிருந்து பார்த்தால் கோவிலின் முழுவதும் bi symmetrical வடிவில் காட்சியளித்தது.. நடுவே கொடிமரம்.. என்ன ஒரு கட்டிட கலை என வியந்தேன்..
வெளியே இருக்கும் மக்கள் எங்களை ஆச்சரியமாக பார்த்தார்கள்..
...
எங்க அம்மாவிடம் ஐயரை கூட உள்ளே விடமாட்டாங்க
நம்மல விட்டுருக்கார்..
யாரோ ஒரு புரட்சி அர்ச்சகர் போல..
என்று சொல்லிக்கொண்டே வந்தேன்..
கடலூர் திருப்பாபுலியூர் கோவில் லிங்கத்தை நான் தொட்டு தேய்த்து கழுவியுள்ளேன்..
சொன்னா நம்ப மாட்டிங்க..
ஆனால் இது தான் உண்மை..
அன்று கேமரா மொபைல் எடுத்து செல்லவில்லை இல்லையென்றால் வீடியோ எடுத்து இருப்பேன்..
இதேபோல் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே உள்ள ரங்கநாதர் சிலைக்கு பின்னால் 2-3 முறை சென்றுள்ளேன்.. பின்னால் paint இல்லாமல் இருக்கும்..
அதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலில் இரவு நடை சாத்தும் நேரத்தில் சென்றேன்.. வெளியேறிக்கொண்டு இருந்த ஒரு மடிசார் கட்டிய மாமி சீக்கிரம் போங்க மூடபோரங்க என்றார்.. எனக்கு எந்தப்பக்கம் சொல்வதென்றே தெரியாமல் தடுமாறினேன்..
உடனே அவர் என்னை அழைத்துக்கொண்டு சென்றார்
இது அது என்று ஒவ்வொரு சிலையாக காட்டிக்கொண்டு சென்றார்..
நல்லா மாட்டுனோம்டா என்று எனக்குள்ளே எண்ணிக்கொண்டே சென்றேன்..
சன்னதிக்குள் ஒரு அர்ச்சகரிடம் என்னை காட்டி இப்பதான் உள்ளே வந்தேன் என்று என்னை காட்டினார்..
அவரும் இந்த சிலை அது இது என்று சொல்ல தொடங்கி
ஒரு சிலையை தொட்டுப்பார்க்க அந்த அர்ச்சகர் சொன்னார் ..
நான் தொட்டு பார்த்தேன்..
அது சிறிய சிலை தான்
ரங்கநாதர் சிலைக்கு முன்பாக இருந்தது..
அப்போது அந்த மாமி முகமே ஒரு பாவத்திற்கு மாறியது..
நானே தொட்டதில்லைடா என்பதைப்போல..
பிறகு அவர் என்னை விடவில்லை ..
கோவில் முழுவதும் சுற்றிக்காட்டிக்கொண்ட வெளியே வந்தார்..
இப்படி எதற்செயலாக இந்த மூன்று கோவில் சிலைகளை தொட்டுள்ளேன்..
இதை புண்ணியம்பாக்கியம் என்று சொல்லவில்லை..
சில டுபாக்கூர் கோவில்களில் தலித்துகளை உள்ளே விடாமலும்.. உள்ளே வந்தால் கங்கை நீரை கொண்டு கழுவுவதும் எனக்கு வேடிக்கை..
இன்னும் நிறைய விசயங்களை சொல்லுறேன்..
#blog
Krishna Kumar G
27 dec 2019
இந்த பதிவை பார்க்க நேர்ந்தது
கொஞ்சம் எழுத்து பிழை இருந்தது, அர்த்தம் மாறுமளவுக்கு சொல் பிழை இருந்தது முடிந்தவரை அவைகளை நீக்கி மீண்டும் பதிகிறேன்..
நான் நின்று புகைப்படம் எடுத்த இடத்தை கருவறையில் இருந்து பார்க்க முடியும்..
அப்படி ஒரு கட்டிட கலை..
அந்த காலத்து கட்டிட கலைகள் எல்லாம் இந்த காலத்து நம்ம ஊர் என்ஜினீயர்களுக்கு எடுபடாமல் போனதென்ன ?.

No comments:
Post a Comment