Truth Never Fails

Tuesday, August 27, 2024

சங்கத்தில் அங்கம்

 கூட்டுறவு சங்கங்களில் இருப்பதை போல

100 கோடிகளுக்கு அதிக ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்களில்


 2 நபர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவை சேர்ந்த ஒருவர் கண்டிப்பாக நிறுவனங்களில் Board of Directors ஆக இருக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும்.


இது காலத்தின் கட்டாயம்.


அதிகார பரவல் தனியார் துறைகளிலும் தேவை


#Governonce

அதிகார பரவலுக்கு தடையாக அரசவை அதி பெருசுகள்

 ஒருத்தவன் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் வாய்ப்பு கொடுங்க , 

நான் அதிகார பரவல் குறித்து சொல்லுறேன்.


நான் பெருசா சொல்வதை

ரஜினிகாந்த் சிறுசா பெருசுகளை பார்த்து சொல்லிவிட்டு சென்றார் 


ரஜினிகாந்த் அரிதாக தான் அரசியல் பேசுவார்

ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறுகள் உண்டு.


நாம உருண்டு புரண்டு சொன்ன தகவல்கள் மக்களிடம் சென்று சேராது

ஆனால் ரஜினி போன்றவர்கள் சொல்வது பட்டிதொட்டி வரை பேசு பொருளாக மாறும்.


86 வயதிலும் மாணவர் அணி என்று 

Old Students நினைப்பது 

பிழை


Advisors நிலை அடைந்து ஒதுங்கி விட வேண்டும்.


அரசியலில் 

அரைத்த மாவாக அரைத்த கதையை அரைத்து கொண்டே இருக்கிறார்கள்.


வாங்க டீ கடைக்கு பேசுவோம்

இல்லை சீட்டுகட்டு ஆடிகிட்டே கதைபோம்

சட்டமன்ற நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்.


அரசியல்

Monday, August 26, 2024

X chances

 10 வது முடித்துவிட்டு சும்மா சுற்றிக்கொண்டு இருந்த நண்பர் 20 வயதில்  ஏதோ ஒரு வேலைக்கு சென்றார் உடனே திருமணமும் செய்தார் தற்பொழுது அவர் பிள்ளை கல்லூரி படிக்கிறது.

அவர் வாழ்வில் கஷ்டபட்டு நான் பார்க்கவில்லை.


இன்னும் என் நண்பர்களில் சிலர் பொறியியல் முடித்துவிட்டு வேலை இல்லாமல் திருமணமும் செய்யாமல் உள்ளார்கள்.


என் case வேற.


கூட்டி கழித்து பார்த்தால் திருமணத்திற்கும் கல்விக்கும் வேலைக்கும் தொடர்பில்லை.


இதை நான் சொன்னால் புரிந்துகொள்ள மாட்டார்கள் 

அனுபவித்தால் தான் புரிந்துகொள்வார்கள்.


It's a game of chances don't miss your chance



Sunday, August 25, 2024

Assets operators tricks to hold the investments that's their main job

 Mutual fund with short term 20% tax if market falls 20% total loss would be 40% at that time people will be forced to hold for long term now money will be locked be careful while investing in mutual funds.

 If you don't know diversification in investing learn it.

Or 

just go for FD & RD

It's easy and safe


+++++++


Assets management companies

Will play an important role in holding investors money in their systematic plans

Instead they won't invest in good companies

When time comes

They will do scams 


If they find 50% of investors moving out with huge lump amount

They will intimate fake companies in their group to make a huge fall

So that their value will fall

Therefore investors value will fall


So they will keep their amount

Without withdrawing


At that time they will introduce new

NFO to their investors


So that

Within few months

People will withdraw from down falling mutual fund plan 

and they will invest 

To new NFO .


it's a tricks and unfair play

Made by asset management company or fund house




++++++++++++

I got this ranking using AI

2024

Top returns mutual fund in India

The top-performing mutual funds in India often change based on market conditions. However, here are some funds that have historically delivered strong returns:

Large-Cap Equity Funds:

 * SBI Bluechip Fund

 * HDFC Sensex Index Fund

 * Kotak Sensex Index Fund

Mid-Cap Equity Funds:

 * Axis Midcap Fund

 * ICICI Prudential Midcap Fund

 * HDFC Mid-Cap Opportunities Fund

Small-Cap Equity Funds:

 * Axis Small Cap Fund

 * ICICI Prudential Small Cap Fund

 * HDFC Small Cap Fund

Multi-Cap Equity Funds:

 * ICICI Prudential Multicap Fund

 * HDFC Multicap Fund

 * Axis Multicap Fund

Please note that past performance does not guarantee future results. It's essential to consider other factors like fund manager expertise, investment strategy, and risk tolerance before making any investment decisions.


Top rank mutual fund in India with assets


The top mutual funds in India with the highest assets under management (AUM) as of August 2024 are:

 * SBI Mutual Fund: With a massive AUM of ₹919,519.99 crore, SBI Mutual Fund is the largest mutual fund in India.

 * ICICI Prudential Mutual Fund: Following closely behind, ICICI Prudential Mutual Fund has an AUM of ₹716,867.52 crore.

 * HDFC Mutual Fund: HDFC Mutual Fund holds the third position with an AUM of ₹614,665.43 crore.

 * Nippon India Mutual Fund: With an AUM of ₹438,276.85 crore, Nippon India Mutual Fund ranks fourth.

 * Kotak Mahindra Mutual Fund: Kotak Mahindra Mutual Fund has an AUM of ₹381,239.57 crore.

Please note that these rankings can change over time due to market fluctuations and fund performance. It's always recommended to consult with a financial advisor before making any investment decisions.

Here are some resources where you can find more information and updated rankings:

 * ClearTax: https://cleartax.in/web-stories/best-mutual-funds-for-2023/

 * ET Money: https://www.etmoney.com/mutual-funds/featured/best-mutual-funds/29

 * BankBazaar: https://www.etmoney.com/mutual-funds/featured/best-mutual-funds/29

 * Groww: https://groww.in/mutual-funds/amc

 * Value Research: https://www.valueresearc

honline.com/


தங்கம்

 தங்க பத்திரம் குறித்து..

ஏப்ரல் மாதமே கணித்தது..


தங்க பத்திரத்தை அரசு இன்னும் வெளியிடவில்லை.


என் பதிவுக்கு பிறகு

இங்கிலாந்தில் இருந்து ரிசர்வ் தங்கத்தை இந்தியா கப்பலில் கொண்டு வந்தது.


தங்க பத்திரம் மக்களுக்கு வெற்றி அரசுக்கு நஷ்டம்.


ஆகவே நான் சொன்னபடி

அரசு மக்களிடம் உள்ள தங்கத்தில் கை வைக்கும்.

100% 

இது நடக்கும்.


நான் இப்படி நடக்கும் என்பதை அமெரிக்காவின் பொருளாதார முறையை வைத்து கணித்தேன்.


100 ஆண்டுகளுக்கு முன்பு இதே சிக்கல் அமெரிக்காவிலும் நிகழ்ந்துள்ளது.


மக்களிடம் உள்ள தங்கத்தை பிடுங்கி தான் அவர்கள் கஜானாவை நிரப்பினார்கள்


டாலர் இல்லாமல் தங்கம் வைத்து வணிகம் செய்ய முடியும் என்பதால் அவர்களின் தங்க கையிருப்பு உலகில் முதல் இடத்தில் உள்ளது.


தற்பொழுது உக்ரைன் தங்கத்தை கொடுத்து தான் ஆயுதம் வாங்கி இருக்கும்.


சீனா அதிக அளவில் தங்கத்தை சேர்ப்பதால்

தங்க தட்டுபாடு வர உள்ளது


அப்பொழுது தங்கம் இரு மடங்காக விலை உயரும்


அப்பொழுது தங்க பத்திரம் வெறும் காகிதம் என்பதால்

காகிதத்தை வாங்கிகொண்டு இரு மடங்கு பணத்தை அரசு 2.5% வட்டியுடன் திரும்ப தர நேரிடும்.


இடைப்பட்ட காலகட்டத்தில் அரசு பத்திரம் விற்று வாங்கிய பணத்தை இரு மடங்காக பெருக்கி இருக்காது.


கூட்டி கழித்து பார்த்தால் அரசுக்கு 

125% இழப்பு


இதுவே தங்கம் சேமிப்பு கிடங்கில் இருந்தால்

அன்றைய சந்தை மத்திபில் விற்று பணமாக மாற்றலாம் அல்லது மக்களிடம் தங்கமாகவே தந்துவிடலாம்..


ஆனால் அரசிடம் மீந்து இருப்பதோ காகிதம் மட்டும் தான்.


அடுத்த ஆண்டு தங்க பத்திரத்திற்கு 2.5% வரி கூடுதலாக போட்டால் தான்

அரசால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.





IT காலம் முடிகிறது

 என் இளம் வயதில் IT நிறுவனத்திற்கு சென்ற பலர் தங்களது 45 வயதில் முழுமையாக வேலையை இழந்து விடுவார்கள் என்பது பல தரவுகள் அடிப்படையிலான கணிப்பு.


AI வளர்ச்சியும் ஒரு காரணம்.


WHAT'S NEXT 


அடுத்து என்ன என்பதனை 

முடிவு செய்துகொள்ளுங்கள்

5 வருடம் முன்பே சொல்கிறேன்.



Im the Power House

 

I can create 

I can destroy 


ஓரு வரவு இரு செலவு

 எங்க அம்மா காலையில் வஞ்சிர மீன் வாங்கி வச்சிருக்காங்க..


நான் வந்து சமைப்பேன் என்று..


நான் ஒரு பையன் வேலை தேடி என்னை நம்பி வந்துவிட்டான் என்று ..

அலைந்து திரிந்து


ஒரு 15000 சம்பளம் + 15000 வரை incentives கிடைக்கும் வேலையில் சேர்த்துவிட்டுவிட்டு..

வீட்டுக்கு வரும்போது மதியம் 2 மணி..


காலையில் சாப்பிடவில்லை

எனக்கு தலை வலி வேறு வந்து தூங்கிவிட்டேன்..


இரவு உணவு வீட்டில் செய்யலாம் என பாத்திரத்தை எடுத்தால் வஞ்சிர மீன்..

கெட்டு போய்விட்டது..


தூக்கி போட்டுவிட்டு..


இரவு உணவு செய்தேன்..


எனக்கு கோபம் எல்லாம் மீன் விற்கும் பெண் மீது தான்.


விலையுயர்ந்த மீனை என் வீட்டில் தர கூடாதுன்னு பல முறை சொல்லியுள்ளேன்..


ஆனால் அவர் என் அம்மாவிடம் தந்திரமாக தந்துவிட்டு சென்றுள்ளார்.


இப்படி miscommunication நடந்து பலமுறை மீன்களை தூக்கி போட்டுள்ளேன்..


ஒருவேளை மீன் விலை குறைவாக இருந்தால் இழப்பு குறைவு

என்பது என் எண்ணம்.


Because loss is unavoidable according to my situations. 

I just want to minimize the amount of loss..




ஆன்மீக மகுடம்

 பலர் தங்களை ஆன்மீகத்தில் ஒரு புலி போல பேசுவார்கள் செயல்படுவார்கள் (பட்டை கொட்டை  காவி போட்டு காட்டுவார்கள் ) அவர்கள் வெறும் காலி குடம் தான் 

ஆன்மீகம் என்பது நிறை குடம் சத்தம் வராது.

அது காட்டாது பேசாது




தோழன் தொழில்

 நான் இருக்கும்போது என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதை தான் அடிக்கடி சுட்டரத்தாரிடம் சொல்வதுண்டு.


நான் சொல்லும் பயன்பாடு வேறு

அவர்கள் பயன்படுத்துவது வேறு


நான் தோள் கொடுக்க தயார் என்கிறேன்

என் தோல் பைக்கு ஆசை படுகிறார்கள்




முயற்சியில் உண்மை வேண்டும்

 நீங்கள் எடுக்கும் முயற்சியில் நடிக்க தொடங்கினால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்வீர்கள்.  


உதாரணம் : வேலை தேடுவது போல நடிக்காதீர்கள் வேலை கிடைக்காது .


படிப்பது போல .......


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.


முயற்சி என்பது தூய்மையாகவும் முழு மனதுடனும் இருக்க வேண்டும்.


அதில் வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம் தான்.


++++++


மற்றவர்களிடமும் உண்மையாக இருந்தால் double benefit தான்.


தன் முயற்சியிலும் மற்றவர்களிடமும் நேர்மையாக இல்லை என்றால் 

வெற்றி கூட படுதோல்வி தான்.



சுருக்கமாக : உன்னிடத்திலும் மற்றவர்களிடமும் உண்மையாக இரு

One STEM

 Science, Maths மட்டும்  உலகிலேயே சிறந்த பாட முறை ஒன்றை தேர்வு செய்து இந்தியா முழுவதும் ஒரே பாடமாக அமைத்தால் நல்லது. CBSE ,MATRIC, STATE BOARD என்பது வரலாறு,புவியியல், மொழி பாடங்களில் மட்டுமே வேறுபடும்.


#GOVERNANCE

Friday, August 23, 2024

Commission market pre determined share market

 Share market : IPO NFO பயங்கரமான unfair practices scam நடக்கிறது ? எனக்கு இதில் பணம் ஈட்டும் வழி தெரியும் இருந்தாலும் மற்றவர்கள் குறிப்பாக இளைஞர்கள் ஈடுபட வேண்டாம்.


பழைய தெரிந்த நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவும்.


SEBI தலைவர் மீது HINDEENBURG 2 முறை குற்றசாட்டு சொல்லியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபபடவில்லை.


ஆகையால் பங்குசந்தை நம்பிக்கை இழந்து பயணிக்கிறது.


++++++


SEBI தலைவர் மீது பல புகார்கள் உள்ளதால்

அதை JUSTIFY செய்ய

இன்று 24 முறைகேடு நிறுவனங்களை நீக்கி உள்ளார்.

RELIANCE உட்பட நீக்கியுள்ளார்.


நாம SEBI தலைவரை நீக்க சொல்றோம்..


அவர் ஆவணங்களை திருத்தி பாதுகாப்பாக வெளியேற ஆளும் அரசு அவர் பதவியை தக்க வைக்கிறது


அவரும் முன் வந்து ராஜினாமா செய்யவில்லை..


ஊழல் செய்துள்ளார் என்று தெரிந்தும் பதவியில் நீடிக்க வைப்பது

கேலி கூத்து


நாடு எப்படி உருபுடும்


அவருக்கு அடுத்தது பிரதமரின் பாதுகாப்பு செயலாளர் பதவி கொடுக்கபட்டலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


நாடு வர வர இப்படி தான் நகர்கிறது.


பாதம் முதல் உச்சி வரை எரிகிறது


நான் ஜனநாயகத்தை ஒருபோதும் நம்பவே மாட்டேன்

Thursday, August 22, 2024

நீயே தலைவர்

 ஒரு நாட்டில் ஊழல் அதிகமாகவும் அல்லது முறையான நெறிமுறைகள் இல்லை என்றால் அந்த நாட்டில் அதுவரை ஒரு நல்ல தலைவர் கூட ஆட்சி செய்யவில்லை என்று பொருள்.

Wednesday, August 21, 2024

Economy plan is not easy for everyone

 அரசு வேலை,தனியார் வேலை, சுயதொழில், இந்த மூன்று நபர்களும் ஒரே மாதிரியான சேமிப்பு முறையில் உள்ளார்கள். இது தவறு.


சேமிப்பு திட்டங்கள், இன்சூரன்ஸ் எல்லாமே அரசு ஊழியர்களுக்கு சாதகமாகவே உள்ளது.


தனியார் மறறும் சுயதொழிலில் இருப்பவர்களுக்கு வேறு மாதிரியான சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்கள் இல்லை.


இது RBI மற்றும் நிதித்துறையின் தோல்வி..


LONG TERM & SHORT TERM போன்ற முறைகளை GSEC போன்ற அரசு முதலீடுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.


தனியார் நிதி நிறுவனங்களுக்கு தேவையில்லை.


FINANCIAL FLEXIBILITY இந்தியாவில் தேவை.


ஏதோ எனக்கு தோன்றியது.

Financial reform




#Governance


+++++++++


4 OCT 2024


 கடந்த 2 மாதத்தில் 2 SIP களை மூடுவிட்டேன் எனக்கு என்னமோ அது எனக்கு ஏத்த முதலீடாக தெரியவில்லை அது அரசு ஊழியருக்கான முதலீடு மாசம் மாசம் STEADY INCOME அவங்களுக்கு தான் வரும் எனக்கு fluctuate ஆகுது ஆகையால் SIP எனக்கு LONG TERMமில் இழப்பை ஏற்படுத்தும் .




வருடம் 2 லட்சம் கோடி புழங்கும் இடம்.


அதில் 50% SHORT TERM.




சும்மா பேச்சுக்கு 2 SIP மட்டும் வைத்துள்ளேன் 


அதிலும் ஒன்றை இந்த வருட இறுதியில் நிருத்திவிடுவேன் .




நான் ஏற்கனவே சொன்னதுதான் 


அரசின் பொருளாதார சேமிப்பு திட்டங்கள் எல்லாம் 


அரசு ஊழியர் நலன் சார்ந்து மட்டுமே உள்ளது .


(கொச்சையாக சொன்னால் : அவனுங்க தான பொருளாதார சட்டம் எழுதுறானுங்க தங்களுக்கு சாதகமாக எழுதிகொள்கிறார்கள்)


(மக்களுக்கு சாதகமாக பொருளாதார சட்டமில்லை)




இதில் corporate ஊழியர்கள் unofficially getting benefits..




+++++++


5 OCT 2024




அரசு ஊழியர்கள் Futures and Options, Commodity trading செய்ய தடை விதிக்க வேண்டும்.


எப்படி ஒரு அரசு ஊழியர் தான் வேலை செய்யும் நேரத்தில் Trade செய்ய முடியும்.


(9 am -5 pm )




ஒரு அரசு ஊழியர் தன் பணி காலத்தில் இன்னொரு தொழில் செய்வதற்கு இது சமம்.




இதை ஏன் இந்திய அரசு அனுமதிக்கிறது.




Finance ministry ஊழியர்கள் தங்கள்

தேவைக்கு சட்டம் ஏற்றாமல் உள்ளார்களா ?





#Governance


Thursday, August 15, 2024

Economic war on run

 From international situations I guess economic war has been already began

I will continue later

Life goes up and down

 மேல போனால் ஒரு நாள் கீழ வந்துதானாகனும் கீழே இருந்தால் ஒரு நாள் மேலே வந்து தானாகனும் Share market முதல் வாழ்க்கை வரை ஏற்ற தாழ்வு என்பது சகஜம் don't quit just continue


Wednesday, August 14, 2024

என்ன இல்லை இந்த திருநாட்டில்

பல ஆப்ரிக்கா மற்றும் சில தீவு நாட்டிடம் என்ன பணம் உள்ளது இருந்தாலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்கள்.

140 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் என்ன வசதி இல்லை ?


பிறகு ஏன் தங்மில்லை


காரணம் 


சார் நாங்க சாதி பாக்குறோம் 


வர்க பாகுபாடு பாக்குறோம்


இன்னார் தான் வரணும் 

இன்னார் வர கூடாதுன்னு

பள்ளிக்கூட அளவிலேயே கழித்து கட்டிவிடுறோம் 


எங்களுக்கு தங்கம் முக்கியமில்லை


தலைக்கனம்  தான் முக்கியம்

Top gear fails Reverse gear works

 Investors insecurity follows

Top head honesty is important

People believe SEBI is neutral

So they invest


If it's not neutral then they will take away investments


They will jump to foreign investments


Im also going out

Because Indian investments fail



காதலட்ட

 மனைவி என்பவள் கணவனை


அன்பால் வெல்ல வேண்டும்


ஆணவத்தால் வெல்ல கூடாது




கணவனிடம் ஆணவத்தை காட்டினால் 


உறவு செழிக்காது 


தோல்வியே கிடைக்கும்




அன்பற்று போவாய்.












Tuesday, August 13, 2024

தூக்கி போட்டு மிதிங்க நாடு முன்னேறும்

 இதே சீனாவாக இருந்தால் இந்நேரம் அதானி கதி எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.


இந்தியாவில் அப்படி நடக்க வாய்ப்பில்லை


அதானிக்காக இந்திய மக்கள் நஷ்டமடைகிறார்கள். 

இந்திய அரசு தொடர்ந்து அதானியை monopoly செய்வது ஏன். 

ஊர் குடியை கெடுத்து ஒருவனை வாழ வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.


 ஏகபோக முறை என்பது இந்தியா போன்ற நாட்டுக்கு ஒத்து வராத ஒன்று என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Hindenburg மீது அமெரிக்க நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் இந்திய நீதிமன்றத்தில் வழக்கு பதிவது படகை கடலில் தொலைத்துவிட்டு குட்டையில் தேடுவதற்கு சமம்.



Saturday, August 10, 2024

Character richness shows your stability

 Financial independent doesn't mean you must hurt relationship. 

If so

You are not true in your relationship.


Character and Behaviour should not change

Even though you earn a lot


Financial independent mean you are not dependent

Also you are bringing richness from you

Thats all


When you become financially rich don't become poor in character and Behaviour


Just Keep the promise you gave 



Money richness is a gateway to comfortnes

Not the gateway for rudeness 



{Financial independent doesn't mean you must hurt relationships

If so

You are not true in your relationship}






Family' First

 Family unity first and above all

எல்லாவற்றையும் விட குடும்ப ஒற்றுமை முதன்மையானது

பொறம்போக்கு நிலத்தை விற்ற புறம்போக்கு

 கடந்த 30 ஆண்டுகளில் பொறம்போக்கு நிலங்களில் போலியாக பஞ்சாயத்து அனுமதி கொடுத்து வீட்டு மனை விற்றுள்ளார்கள். 


அதில் வீடு கட்டியவர்கள் தற்பொழுது வருகிற G.O அல்லது நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில்.


எப்பொழுது தங்கள் வீடுகள் இடிக்கப்படும் என்கிற ஒருவகை அச்சத்திலேயே உள்ளார்கள்.


அவர்கள் எங்கும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனைவதில்லை..


ஒரு மாதிரி அமைதியாகவே வாழ்கிறார்கள்.


தண்ணீர் வசதியோ சாலை வசதியோ கேட்பதில்லை..


இப்படி ஏமாந்த மக்கள் பாவம் என்ன செய்வார்கள்


பொறம்போக்கு நிலத்தை பிளாட் போட்டு விற்றவன்

மாநில மத்திய அமைச்சராக கூட உருவாகி இருப்பான்..


கடைசியில் சிக்கியது மக்கள் தான்.


வாய்ப்பு கிடைத்தால் 

கண்டிப்பாக

பழைய குற்றங்கள் கூட மறு ஆய்வு செய்யப்பட்டு மக்களுக்கு நீதி வழங்கப்படும்.

Tuesday, August 6, 2024

Coup under and sides with unstable gov and economy

 Scope Coupe Coup 


Already I've said

India has been surrounded by Tax free umbrella

Now

We see on the other sides of India has been surrounded by Coup nations


India has been cupped under and sides with unstable governments and economy


Maldives, Srilanka, Bangaladesh 

Pakistan about to happen


These nations fall economic loss 

They chase their top leaders away

They capture the capital by people revolutions 


Wait we will talk briefly

Until that have a debate with your brain about my concept of thinking


So we are floating in a economic loss cup with a tax free umbrella 

And we are ordering pizza with high tax .





Saturday, August 3, 2024

Super வண்டி நம்ம ஊர் வண்டி

 நேற்று என் xl super வண்டி ஆற்று பாலத்தில் வரும்போது ரிசர்வ் விழுந்து நின்றுவிட்டது..

கடும் போக்குவரத்து நெரிசல் வேறு

வண்டியை ஓரம் கட்டி ஸ்டார்ட் செய்ய தொடங்கினேன்.. ஒரு அடியில் கிளம்பாது என்பதால் 

ஏற்கனவே உள்ள கால் வலியில் 4 உதை உதைத்தேன்..


திடீர் என 

யாரோ


ப்ரோ ப்ரோ என அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினேன்.


ஒரு பையன் சூப்பர் பைக்கில் நின்றுகொண்டு அழைத்தான்..


என்ன என்றேன்..


பெட்ரோல் பங்க் வரை தள்ளி விடவா என்றான்..


வேண்டாம் என்றேன்..


இங்க பக்கத்துல Mechanical கடை எங்க இருக்கு..

அதுவரை தள்ளி விடுறேன் என்றான்..


வேண்டாம் பா


வண்டி ஸ்டார்ட் ஆகிடும்..


நான் பார்த்துக்கிறேன் என்று..


லஷ்மி ஸ்டார்ட் ஆகிடு என்பதை போல ஒரு உதை உத்தைத்தேன்..

வண்டி கிளம்பியது ..


அவன் தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டான்..


நல்லவேளை அவனின் YouTube காணொளியில் நான் content ஆகாமல் தப்பித்தேன்..


++++++


ஒரு மாதம் முன்பு

இதே வண்டியை தான் பீச் அருகே உள்ள கல்லூரியில் இருந்து தினத்தந்தி அலுவலகம் வரை தள்ளி வந்தேன்


நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை.



எடைக்கு போட்டால் ஆயிரம் ரூபாய் தான் கிடைக்கும்..


இருந்தாலும்

சென்ற 

மாதம் 4000 ரூபாய் செலவு செய்து வைத்துள்ளேன்..

மாமிச வாசை

 அம்மாவாசை வந்தால் எனக்கு இயற்கையாகவே மாமிசம் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது...


சில சமயம் என்ன கறி சாப்பிடணும் போல இருக்கு ஒருவேளை அம்மாவாசையாக இருக்குமோ என தேதியை பார்த்தால் அது அம்மாவாசையாக இருக்கும் .


இப்படி இருக்க 

ஏன் அம்மாவாசை அன்று கறி சாப்பிட கூடாது என்று சொல்கிறார்கள்

இதை யார் சொன்னது..


உடல் ஒரு விசியதை இயற்கையாகவே தேடுகிறது

ஆனால் அதற்கு எதிராக ஏன் பயிற்றுவிக்க படுகிறார்கள்

மதம் என்கிற பெயரில்


ஏதாவது அறிவியல் காரணம் இருந்தால் சொல்லவும்.


எனக்கு தெரிந்து 

நண்டு அம்மாவசை அன்று சதை சுருங்கிவிடும்

பாம்பு தோல் உரிக்குமா 

தேனீ தேன் குடித்து விடுமா ?


இதுபோல அல்லது இதனால் உண்டாகும் விளைவுகள் குறித்து அறிவியல் காரணம் தேவை.


நாளைக்கு ஆடி அம்மாவாசை எவனும் பிரியாணி கடை வைக்க மாட்டான்..

என் அனுபவத்தில் சொல்கிறேன்..

Friday, August 2, 2024

ஆஃபீஸ் வாழ்வு

 Office Mindset : பலர் அலுவலகத்தில் வேலை செய்கிற எண்ணத்திலேயே வீட்டிலேயும் வாழ்கிறார்கள். நிஜ வாழ்வை வாழ தெரியாமல் இருக்கிறார்கள்.

Thursday, August 1, 2024

Tea Boy

 97021 


'Tea Boy' எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து டீ வாங்கிட்டு வருவது தான் என் வேலை..


நான் இருந்த குடிசை பகுதியில் நான் சும்மா சாலையில் நடந்து போனால் கூட என் கையில் காசும் ஒரு சொம்பும் கொடுத்து டீ வாங்கி வர சொல்வார்கள்.


ஒரு கிமீ தூரம் இருக்கும் டீ கடைக்கு சென்று டீ வாங்கிவிட்டு இரண்டு செய்தித்தாளை மடித்து சொம்பின் விளிம்பில் பிடித்து சொம்பின் சூடு தாங்க முடியாமல் கொஞ்ச தூரம் நடப்பேன் பிறகு சாலையில் வைத்துவிடுவேன் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வந்து கொடுத்துவிடுவேன்..

சிலர் மிட்டாய் வாங்க காசு கொடுப்பார்கள் அது பெரிய விசியம் என நினைத்து இதை தொடர்ந்து செய்ய.

ஷாம்பூ சீயக்காய் எண்ணெய் என எல்லாருக்கும் எல்லா பொருளும் வாங்கி வந்து கொடுப்பேன்..


இன்றைய காலத்து delivery boy போல அன்று இருந்தேன்.


இது எது வரை தொடர்ந்தது தெரியுமா ?


நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்தது.


அல்லது ஒரு சம்பவம் செய்தேன் அதோடு என்னிடம் யாரும் இந்த வேலையை தரவில்லை.


எங்கள் தெருவில் 10ஆம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன் இருந்தான்..


அவனை கண்டால் எல்லா பசங்களும் பயப்படுவார்கள்..


அவன் பார்க்க மிக கெட்டவனாக இருந்தான்.


பிடி பிடிப்பான் , A படத்துக்கு சென்று வந்து வீட்டில் அடி வாங்குவான். பெண்களை கிண்டல் செய்வான்.


சின்ன பசங்க என்றால் அவர்களை பிடித்து வைத்து மிரட்டுவான்.


துணியை அவுத்து விட்டு ஓடவிடுவான்..


இப்படி எல்லா பசங்களும் அவனை கண்டாலே பயப்படுவார்கள்.


அவன் ஒரு காண்ட்ராக்ட் எடுக்கும் நபரின் மகன் என்பதால் யாரும் அவனை கேள்வி கேட்கமாட்டார்கள்.


சொந்த கிணறு 2 சக்கர வாகனம் VCR கலர் டிவி என வசதியான குடும்பம்.


இப்படி இருக்க ஒரு நாள் வழக்கம் போல கடைக்கு யாரோ  என்னை அனுப்ப நான் அவன் சாலையில் நிற்பதை பார்த்துவிட்டு பயப்பட தொடங்கிவிட்டேன்..


என் பயத்தை அவன் அறிந்துகொண்ட பின் சாலையை மறித்து நின்றுவிட்டான்..


காசு கொடுத்தால் தான் விடுவேன் என என் கையில் உள்ள காசை பிடுங்க தொடங்கினான்..

அவனிடம் இருந்து தப்பித்து ஓடினேன்..

அவன் என் பின்னே விடாமல் என்னை துரத்தி வந்தான்..


என் வீடு வரை ஓடி வந்த நான் என் வீட்டில் நுழையாமல் எதிர் வீட்டில் நுழைத்து  தோட்டத்தில் அவர்கள் அடுக்கி வைத்து இருந்த பெரிய சவுக்கு கட்டையை தூக்க முடியாமல் தூக்கி விளாசினேன் அவன் மேல் அடி பட்டதும் அடிக்காத வலிக்குது என பின் வாங்குவது போல பின் வாங்கி மீண்டும் என்னை பிடிக்க வந்தான் ..


மேலும் அடித்தேன்..

அவன் முகத்தில் பயத்தை பார்த்தேன்

கெஞ்ச தொடங்கினான்..


நான் விடவே இல்லை..

அருகில் இருந்தவர்கள் வந்து என்னை தடுக்கும் வரை அடித்தேன்..


அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் அதன்பின் யாரும் என்னை எதற்கும் கடைக்கு போக சொல்லவில்லை ..


அவனும் என்னை கண்டால் ஒதுங்க தொடங்கிவிட்டான். நான் வருவதை பார்த்தால் வீட்டுக்குள் சென்று விடுவான்.


 ஒரு கெட்ட பையனை அதுவும் என் வயதை விட பெரிய பையனை அடித்ததால் நான் எங்கு சென்றாலும் அதை பற்றி தான் கேட்பார்கள் ..

தப்பு பண்ணா அப்படி தான் அடிக்கணும் என பெருமையாக சொல்வேன்.


அவனை அடித்ததற்காக

பல பெண்கள் பாராட்டினார்கள்


அப்பொழுது என் அம்மா இந்த விசியாத்தை சொல்லி என்னை அடிக்கடி பாராட்டுவார்..


+++++++


சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் அவனை பார்த்தேன்..

வக்கீலாக இருக்கிறான்.


நான் இன்னமும் Tea boy யாக இருக்கிறேன்.


A short story of a unofficial tea boy