Manipur:
ஒரு ஆவண படம் ' இந்தியாவின் திட்டமிடப்பட்ட கலவரங்கள் ' எடுத்தால் அதில் மணிப்பூர் கலவரமும் அடங்கும்.
ஒரு சாதி கலவரம் மாநிலம் முழுவதும் பரவுகிறது.
உள்துறை வேடிக்கை பார்க்கிறது..
"அதை பற்ற வைத்தவன் அதை எப்படி கட்டுப்படுத்துவான் "
Social engineering எங்கிற பெயரில்
பிரிந்து கிடக்கும் சாதி மதத்தை வைத்து
பிரிவினை/கலவரங்களை தூண்டி வாக்குகளாக மாற்றுகிறார்கள்.
இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்
+++++++
உள்துறை என்பது முக்கியமான பொறுப்பு.
நாட்டில் உள்ள மோதல்களை தடுக்கும் பொறுப்பு உள்ள பதவி
அதையே கலவரங்கள் செய்ய ஒருவர் பயன்படுத்தினால் என்னவாகும் ?
பாவம் Manipur மக்கள்
சூழ்ச்சி புரியாமல் கலவரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போதே..
இது நாளை நம்ம ஊரிலும் நடக்கலாம் என்கிற பயம் வருகிறது.
++++++++
ஒரு சாதியை பிரித்து அதை கலவரம் செய்ய தூண்டி..
தற்பொழுது ஒரு மாநிலமே எரிகிறது..
கலவரத்துக்கு முன்பு பல கூட்டங்கள் நடந்துள்ளது
பல வன்முறை பேச்சுகள் பேசப்பட்டுள்ளது
அப்பொழுதே தடுத்து இருக்க முடியும்.
ஆனால் தடுக்க கூடாது என்பது தானே அஜெண்டா !
வரலாற்றை புரட்டுங்கள்.
குஜராத் கலவரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்பது தானே மோடி மீதான குற்றசாட்டு..
ஏன் தடுக்க வேண்டும் ?
அவர்கள் எதிர்பார்த்தது நடக்கையில்..
+++++++
இதே formula தான் இவர்களின் ஒரே சூத்திரம்.
என்னை பொறுத்தவரை
இராணுவ உதவி தேவை
எனக்கு ஜனநாயக வாக்கு அரசியல் உதவி தேவை இல்லை.
+++++++
நன்றாக பற்ற வைத்துள்ளார்கள்
அடுத்த கால் நூற்றாண்டுக்கு மணிப்பூர் மக்கள் கஷ்டப்பட போகிறார்கள்.
சாதி ஒரு நல்ல சமூகத்தை சீரழிக்கும் கொடிய விஷம்