Truth Never Fails

Tuesday, October 28, 2025

ஆட்சி அதிகாரமே இலக்கு

 அரசியல் : 

ஒரு சின்ன கதை சொல்றேன் 

2012

நான் வீடு கட்டும்போது காட்டுவேலை பார்த்தவர் என் அம்மா ஊர்

எலக்ட்ரிக் வேலை பார்த்தவர் என் அப்பா ஊர்

அவர்கள் இருவருக்கும் தெரியாது நான் அந்த ஊர் என்று


இறுதி நிலையில் நான் சொன்னேன்..


அவர்களுக்கு அதிர்ச்சி 


காரணம் ஒரு காலத்தில் என் முன்னோர்கள் அவர்களிடம் கூலியாக வேலை பார்த்தவர்கள்

ஊருக்கு ஓரமாக வாழ்பவர்கள்


இன்று இவர்கள் என் வீட்டில் கூலிகளாக


இவர்கள் நகரத்தில் ஊரில் யாருக்கும் தெரியாமல் வேலை பார்க்கலாம் என வந்து என்னிடம் மாட்டிக்கொண்டார்கள்..


நான் யார் என தெரிந்த பிறகு அவர்கள் வேலையை காட்டினார்கள்

அது வேற கதை..


நான் சொல்ல வருவது..


பணத்தை வைத்து நம்மை மதிக்கதவனை கூட வேலை வாங்க முடியும்.


அரசு பதவிகளை வைத்து அதிகாரியாக முடியும்.


அரசியல் அதிகாரம் பெற்றால் தான் ஆட்சி செய்ய முடியும்.


இதுவரை அரசியல் அதிகாரம் பெறவில்லை


உழைத்ததால் பணம் கிடைத்தது

படித்ததால் அரசு பதவி கிடைத்தது.


எதை செய்தும் அரசியலில் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை.


அதை அடைந்தால் தான்

ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்


ஆட்சி அதிகாரம் அடைவதே இலக்கு

Friday, October 17, 2025

சாதி ஒழிப்பின் மூன்றாம் நிலை

 இதை யாருக்கும் நான் சொல்லமாட்டேன்

இது ரகசிய திட்டம்

Wednesday, October 15, 2025

How we have to set

 Biggest richest reserve India has is people use it wisely


Teach them discipline to unite them as one


Don't do silly politics


Iron rules needed


Clean from corruption

Friendly nature

High security

Low tax stable economy


Build housing for all

Opportunity for all


#Governance

Thursday, October 9, 2025

தங்கம் மயக்கம் தேக்கம் தாக்கம்

 Finance : 

தங்கத்தின் mean value முடியும் முன் 


இந்தியா 10000 கிலோ தங்கத்தை சேர்க்க வேண்டும்.


ரூபாய் தாள்கள் மதிப்பில்லாமல் போக வாய்ப்புள்ளது.


சீனா அதிக தங்கம் சேர்த்து வருகிறது.

பொருளாதார வல்லராக சீனா உருவெடுத்துள்ளது.


Trump 7 போர்களை நிறுத்தி இருக்கிறார்.


முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் ஒரு ராணுவ வீரரை கூட இழக்காமல் டிரில்லியன் டாலர் கணக்கில் ஆயுதங்களை உக்ரைன் மற்றும் இஸ்ரேலிடம் விற்றுள்ளார் 


அமெரிக்க ராணுவ அதிகாரிகள் CIA ஏஜெண்டுகள் ஆயுத விற்பனையாளராக மாறி இருக்கிறார்கள்


குறிப்பாக பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது.


அணுஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்க உள்ளது.


அந்நாட்டு ராணுவ அதிகாரி இந்தியாவை சீண்டுகிறான்


சீனாவை கண்காணிக்க ஆப்கானில் ராணுவ தளம் அமைக்க உள்ளது அமெரிக்கா.


டாலர் மதிப்பு குறைகிறது..


தங்கத்தின் மதிப்பு உயர்கிறது.


தங்கம் நம் மக்களிடம் உள்ளது

அதை பெற்று இருப்பை அதிகரிக்க வேண்டும்


Token system

Appointment முறையை அமல்படுத்தி 


விருப்பம் உள்ள மக்கள் 

வருமான வரி அலுவலகத்தில் 

ஆதார் அட்டை, PAN அட்டை மற்றும் வங்கி கணக்கை சமர்பித்து 

தங்கத்தை (Physical gold) விற்றுக்கொள்ளும் வசதியை செய்ய வேண்டும்.


அதற்கு பதிலாக தங்க bond வழங்க வேண்டும் .


இப்பொழுதே தொடங்கினால் தான்


தங்கம் mean value அடையும் முன் 

10000 கிலோ தங்கத்தை (Gold reserve) அதிகரிக்க முடியும்


நாளை போர் நிகழ்ந்தால் நாம் சமாளிக்க முடியும்.

நடிப்பு குண்டு வெடிப்பு

 ஒரு நடன நடிகைக்கு வெடிகுண்டு மிரட்டல், 

நகைச்சுவை நடிகருக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாட்டை ஆள துடிக்கும் நடிகருக்கு வெடிகுண்டு மிரட்டல்


சிலருக்கு Y பிரிவு பாதுகாப்பு வேண்டும்

சிலருக்கு Y பிரிவை மேம்படுத்தி Z பிரிவை பெற வேண்டும் 


உண்மையில் இவர்களுக்கு எந்த பெரிய அச்சுறுத்தலும் இல்லை.


அரசியல் ஆதாயம் பெற இப்படி செய்கிறார்கள்.


கூண்டு வண்டிக்குள் வலம் வரும் நபர்கள் திறந்தவெளி மிருகசாலையில்

மிருகங்களை பார்த்து பயப்படுவது போல மனிதர்களை பார்த்து பயப்படுகிறார்கள்.


அவர்கள் பயத்திற்கு அவர்கள் மனநல மருத்துவரை தான் பார்க்க வேண்டும் .


மக்கள் பணத்தில் பாதுகாப்பு என்கிற பெயரில் அவர்களது இன்ப சுற்றுலா செலவை அரசு செய்கிறது .



Sunday, October 5, 2025

பாட்டிலுக்கு 10 ரூபாய்

 பாட்டிலுக்கு 10 ரூபாய் :

   எனக்கு தெரிந்த தகவல்களை சொல்கிறேன்..



2001 ஆம் ஆண்டு பண்ருட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தார்கள்


15 ரூபாய் மினி குவார்டர் அறிமுகப்படுத்தப்பட்டது

(இப்படி சொன்னால் பலருக்கு நாபகம் வரலாம்)


பள்ளி மாணவர்கள் அதை வாங்கி குடிக்க ஆரம்பிக்க அதை தடை செய்தார்கள்.


அந்த காலகட்டத்தில் பார் நடத்துவது தனியார் தான் 

அவர்கள் வைப்பது தான் விலை


பார் ஏலத்தில் அடிதடி கொலை வரை சென்றது..


கள்ளச்சாராய பிரச்சனை

பார் ஏலம் 


இந்த இரு பிரச்சனைகளை சமாளிக்க தான் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டு டாஸ்மாக் மட்டுமே மதுவை விற்கும் என்கிற நிலை வந்தது.


ஆரம்பத்தில் மதுவுக்கு கூடுதல் விலை கிடையாது.


டாஸ்மாக்கில் குளிர்ந்த பீர் கிடைக்கவில்லை என மது பிரியர்கள் புகார் சொல்ல


அதன் பின் குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டது 


அப்பொழுது தான் பீர் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வாங்க தொடங்கினார்கள்..


கேட்டால் குளிர்சாதன செலவு என்றார்கள் 


அது காலப்போக்கில் 10 ரூபாயாக மாறியது..


ஒருமுறை 2012 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்


மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு மனு கொடுக்க சென்றேன்


ஒரு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று..


அவர் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒரு COPY தர சொன்னார்..


ஆகவே டாஸ்மாக் அலுவலகத்தை சிப்காட் பகுதியில் கண்டுபிடித்து மனுவை கொடுத்தேன்..


அப்பொழுது அவரிடம் என் சந்தேகங்களை கேட்டறிந்தேன்..


அவர் தான் சொன்னார் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது  

ஒரு கணக்கு அதில் இருந்து தான் கடையில் உள்ள LOADING, UNLOADING, HELPER PAY ,BROKEN BOTTLE LOSS, SALESMAN COMMISION, MANAGER COMMISION,MINISTER COMMISION வரை உள்ளது என்றார்.


சரி பாட்டில் RETURN செய்தால் பணம் உண்டே என்றேன்


MRP விலையில் தான் விற்கப்படுகிறது கொள்முதல் செலவு குறைவு தானே என பல கேள்விகளை கேட்டேன்..


அவர் அனைத்திற்கும் பதில் தந்தார்.


+++++++


2020 கொரோனா வந்தபோது டாஸ்மாக் கடையில் கூட்டமாக நிற்கும் நபர்கள் சொன்னது எங்களுக்கு BILL வேண்டும் 

பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதாக புகார் சொன்னார்கள்.


++++++


2024 ED சோதனை பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதாக அப்பொழுது தான் கண்டு பிடித்ததை போல வழக்கு போட்டார்கள்.


அப்பொழுதே நான் சொன்னேன் உங்களால் நிரூபிக்க முடியாது என்று


அதேபோல நீதிமன்றத்தில் ED செம திட்டு வாங்கியது


BILL இல்லாத பொருள் 

சாட்சி இல்லாத வழக்கு

பாட்டில் வாங்கியவர் 

பாட்டில் விற்ற விரபனையாளர் 

இந்த 2 நபர் தான் பொறுப்பில் வருவார்கள் 


நீங்கள் எப்படி டாஸ்மாக் இயக்குநரை குறை சொல்ல முடியும் என்றேன்.


அவரா பணத்தை வாங்குகிறார் ?

உங்களுக்கு வழக்கை விசாரிக்க தெரியவில்லை என்றேன்.


++++(++


2025 தற்பொழுது நடிகர் விஜய்


அரசியலுக்கு வந்தவர் 

கரூர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில்


பட்டலுக்கு 10 ரூபாய்


பாட்டை பாடினார்


இந்த பாட்டு பிரபலமானது


ஆனால் இந்த கூடத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் பலியானார்கள்.


+++++++++


பாட்டிலுக்கு 10 ரூபாய் 

வைத்து தான் 2026 அரசியல் உள்ளது


இதை வைத்து தான் பாஜக காய் நகர்த்துகிறது 


" பாட்டிலுக்கு 10 ரூபாய் "


இதுதான் ஒரு சில வார இதழ் தலைப்பாக அமையும்

என கருதுகிறேன்


++++++++


பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பதும் உண்மை


ஆனால் இதில் இல்லை புதுமை


இது பழைய கதை


25 வருட கதை


(குடிக்காத நான் எனக்கு தெரிந்த தகவல்களை தந்துள்ளேன்.. உங்களுக்கு கூடுதலாக ஏதாவது தெரிந்து இருந்தால் சொல்லவும்)


+++++


டாஸ்மாக் நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்


டாஸ்மாக் நேரடி விற்பனையில் ஈடுபட கூடாது


இதுகுறித்து ஒரு முழு திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி வைத்துள்ளேன்..


அரசு ஊழியர்கள் நேரடி மது விற்பனையில் ஈடுபடுவது தவறு.


இதுகுறித்து பிறகு பார்க்கலாம்.


பாட்டிலுக்கு 10 ரூபாய்

சாம்ராஜ்யம்

Saturday, October 4, 2025

நோட்டம் விட்டால் கூட்டம் கூடும் ஆட்டம் காணும்

 #governance 


கூட்டம் எப்படி கோவிலுள் வர வேண்டும் என்று அர்ச்சகர் தீர்மானிக்க கூடாது 

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை தான் தீர்மானிக்க வேண்டும்.


அர்ச்சகர் அவர் வருமானத்தை கணக்கில் வைத்து கூட்டம் அடுத்தடுத்து நகர வேண்டிய வழிகளை தீர்மானிக்கிறார்.


இன்று நான் திருவந்திபுரத்தில் பார்த்ததை பகிர்கிறேன்

அர்ச்சகர்கள் தான் ஆங்காங்கே கம்பி கதவுகளை திறந்து மூடுகிறார்கள்


அவர்களுக்கு இப்படி செய்ய உரிமையே கிடையாது

Gate controller வேலை செய்கிறார்கள்

Crowd directions மாற்றுகிறார்கள்

அதன்மூலம் உள்ளே நுழையும் ஒருவன்

Free flow வில் செல்ல முடியாது

மாறாக அர்ச்சகர் தட்டை நோக்கி தான் செல்ல முடியும்.


திட்டம் போட்டு செய்கிறார்கள்


அரசு தான் புத்திசாலியாக செயல்பட வேண்டும்

VIP தரிசனத்தில் செல்பவர்களுக்கு இது தெரியாது


என்னை போன்ற ஆட்களுக்கு தான் இது புரியும்


+++++++


Note பண்ணுங்க 

நான் சொன்னது

அனைத்து மதத்துக்கும் பொருந்தும்.


அரசு தான் கூட்டம் கட்டுப்படுத்துவதை தீர்மானிக்க வேண்டும்.


கரகாட்டம் நடத்துபவர் கையில் கூட்டம் கட்டுப்பாட்டை தர கூடாது.