அரசியல் :
ஒரு சின்ன கதை சொல்றேன்
2012
நான் வீடு கட்டும்போது காட்டுவேலை பார்த்தவர் என் அம்மா ஊர்
எலக்ட்ரிக் வேலை பார்த்தவர் என் அப்பா ஊர்
அவர்கள் இருவருக்கும் தெரியாது நான் அந்த ஊர் என்று
இறுதி நிலையில் நான் சொன்னேன்..
அவர்களுக்கு அதிர்ச்சி
காரணம் ஒரு காலத்தில் என் முன்னோர்கள் அவர்களிடம் கூலியாக வேலை பார்த்தவர்கள்
ஊருக்கு ஓரமாக வாழ்பவர்கள்
இன்று இவர்கள் என் வீட்டில் கூலிகளாக
இவர்கள் நகரத்தில் ஊரில் யாருக்கும் தெரியாமல் வேலை பார்க்கலாம் என வந்து என்னிடம் மாட்டிக்கொண்டார்கள்..
நான் யார் என தெரிந்த பிறகு அவர்கள் வேலையை காட்டினார்கள்
அது வேற கதை..
நான் சொல்ல வருவது..
பணத்தை வைத்து நம்மை மதிக்கதவனை கூட வேலை வாங்க முடியும்.
அரசு பதவிகளை வைத்து அதிகாரியாக முடியும்.
அரசியல் அதிகாரம் பெற்றால் தான் ஆட்சி செய்ய முடியும்.
இதுவரை அரசியல் அதிகாரம் பெறவில்லை
உழைத்ததால் பணம் கிடைத்தது
படித்ததால் அரசு பதவி கிடைத்தது.
எதை செய்தும் அரசியலில் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை.
அதை அடைந்தால் தான்
ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்
ஆட்சி அதிகாரம் அடைவதே இலக்கு
No comments:
Post a Comment