Truth Never Fails

Sunday, October 5, 2025

பாட்டிலுக்கு 10 ரூபாய்

 பாட்டிலுக்கு 10 ரூபாய் :

   எனக்கு தெரிந்த தகவல்களை சொல்கிறேன்..



2001 ஆம் ஆண்டு பண்ருட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தார்கள்


15 ரூபாய் மினி குவார்டர் அறிமுகப்படுத்தப்பட்டது

(இப்படி சொன்னால் பலருக்கு நாபகம் வரலாம்)


பள்ளி மாணவர்கள் அதை வாங்கி குடிக்க ஆரம்பிக்க அதை தடை செய்தார்கள்.


அந்த காலகட்டத்தில் பார் நடத்துவது தனியார் தான் 

அவர்கள் வைப்பது தான் விலை


பார் ஏலத்தில் அடிதடி கொலை வரை சென்றது..


கள்ளச்சாராய பிரச்சனை

பார் ஏலம் 


இந்த இரு பிரச்சனைகளை சமாளிக்க தான் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டு டாஸ்மாக் மட்டுமே மதுவை விற்கும் என்கிற நிலை வந்தது.


ஆரம்பத்தில் மதுவுக்கு கூடுதல் விலை கிடையாது.


டாஸ்மாக்கில் குளிர்ந்த பீர் கிடைக்கவில்லை என மது பிரியர்கள் புகார் சொல்ல


அதன் பின் குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டது 


அப்பொழுது தான் பீர் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வாங்க தொடங்கினார்கள்..


கேட்டால் குளிர்சாதன செலவு என்றார்கள் 


அது காலப்போக்கில் 10 ரூபாயாக மாறியது..


ஒருமுறை 2012 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்


மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு மனு கொடுக்க சென்றேன்


ஒரு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று..


அவர் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒரு COPY தர சொன்னார்..


ஆகவே டாஸ்மாக் அலுவலகத்தை சிப்காட் பகுதியில் கண்டுபிடித்து மனுவை கொடுத்தேன்..


அப்பொழுது அவரிடம் என் சந்தேகங்களை கேட்டறிந்தேன்..


அவர் தான் சொன்னார் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது  

ஒரு கணக்கு அதில் இருந்து தான் கடையில் உள்ள LOADING, UNLOADING, HELPER PAY ,BROKEN BOTTLE LOSS, SALESMAN COMMISION, MANAGER COMMISION,MINISTER COMMISION வரை உள்ளது என்றார்.


சரி பாட்டில் RETURN செய்தால் பணம் உண்டே என்றேன்


MRP விலையில் தான் விற்கப்படுகிறது கொள்முதல் செலவு குறைவு தானே என பல கேள்விகளை கேட்டேன்..


அவர் அனைத்திற்கும் பதில் தந்தார்.


+++++++


2020 கொரோனா வந்தபோது டாஸ்மாக் கடையில் கூட்டமாக நிற்கும் நபர்கள் சொன்னது எங்களுக்கு BILL வேண்டும் 

பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதாக புகார் சொன்னார்கள்.


++++++


2024 ED சோதனை பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதாக அப்பொழுது தான் கண்டு பிடித்ததை போல வழக்கு போட்டார்கள்.


அப்பொழுதே நான் சொன்னேன் உங்களால் நிரூபிக்க முடியாது என்று


அதேபோல நீதிமன்றத்தில் ED செம திட்டு வாங்கியது


BILL இல்லாத பொருள் 

சாட்சி இல்லாத வழக்கு

பாட்டில் வாங்கியவர் 

பாட்டில் விற்ற விரபனையாளர் 

இந்த 2 நபர் தான் பொறுப்பில் வருவார்கள் 


நீங்கள் எப்படி டாஸ்மாக் இயக்குநரை குறை சொல்ல முடியும் என்றேன்.


அவரா பணத்தை வாங்குகிறார் ?

உங்களுக்கு வழக்கை விசாரிக்க தெரியவில்லை என்றேன்.


++++(++


2025 தற்பொழுது நடிகர் விஜய்


அரசியலுக்கு வந்தவர் 

கரூர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில்


பட்டலுக்கு 10 ரூபாய்


பாட்டை பாடினார்


இந்த பாட்டு பிரபலமானது


ஆனால் இந்த கூடத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் பலியானார்கள்.


+++++++++


பாட்டிலுக்கு 10 ரூபாய் 

வைத்து தான் 2026 அரசியல் உள்ளது


இதை வைத்து தான் பாஜக காய் நகர்த்துகிறது 


" பாட்டிலுக்கு 10 ரூபாய் "


இதுதான் ஒரு சில வார இதழ் தலைப்பாக அமையும்

என கருதுகிறேன்


++++++++


பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பதும் உண்மை


ஆனால் இதில் இல்லை புதுமை


இது பழைய கதை


25 வருட கதை


(குடிக்காத நான் எனக்கு தெரிந்த தகவல்களை தந்துள்ளேன்.. உங்களுக்கு கூடுதலாக ஏதாவது தெரிந்து இருந்தால் சொல்லவும்)


+++++


டாஸ்மாக் நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்


டாஸ்மாக் நேரடி விற்பனையில் ஈடுபட கூடாது


இதுகுறித்து ஒரு முழு திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி வைத்துள்ளேன்..


அரசு ஊழியர்கள் நேரடி மது விற்பனையில் ஈடுபடுவது தவறு.


இதுகுறித்து பிறகு பார்க்கலாம்.


பாட்டிலுக்கு 10 ரூபாய்

சாம்ராஜ்யம்

No comments:

Post a Comment