ஒரு மளிகை கடையில் 941.25 ரூபாய் பில் ஆனால் கேஷ் கவுண்டர் பெண் 9041.25 என கார்டு போடும் இயந்திரத்தில் பதிவு செய்து என்னிடம் தந்துவிட்டு என் முகத்தை பார்க்க
(எனக்கு கண்ணு தான் சரியா தெரியலையே)
ஆனால் நான் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து அந்த பெண் ஏதோ தவறு செய்கிறது என யோசிப்பதற்குள்..
அவசரத்தில் இயந்திரத்தில் கடவுச்சொல் இரண்டு எண்கள் அழுத்திவிட்டேன்..
சற்று நிறுத்தி கொஞ்சம் முழுமையாக நன்றாக படித்து பார்த்தேன்
அந்த பெண் என்னை பார்த்தபடியே இருந்தார்.
இயந்திரத்தை அவரிடம் திருப்பி தப்பா போட்டு இருக்கீங்க என்று மட்டுமே சொன்னேன்..
பயத்துடன் வாங்கி மீண்டும் சரியாக அழுத்தி என்னிடம் கொடுத்தார்..
பணத்தை செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.
ஒன்றும் சொல்லவில்லை.
அந்த பொண்ணு என்ன fraud வேலை செய்யுது என தெரியவில்லை.
அந்த பெண்ணிடம் இதுவரை 4-5 முறை பொருட்கள் வாங்கியுள்ளேன் இன்று தான் பார்த்தேன்..
இனி கடைகளில் வங்கி பரிவர்த்தனைகளை நான் சரியாக பார்க்க வேண்டும்..
No comments:
Post a Comment