இந்தியா அரசியலில் எளிமை மாறிவிட்டது :
அன்று :
இனி எனக்கு ஆடம்பர உடை வேண்டாம் என்று தன் ஆடம்பர உடைகளை துறந்த காந்தி....
இன்று :
கவுன்சிலர் என்றால் கூட 20 லட்சத்துக்கு ஒரு கார் இருக்க வேண்டும்.
அப்பொழுது தான் அரசியல்வாதி என்றே மக்கள் நம்புகிறார்கள்.
எளிமை என்றே சொல்லே இல்லாமல் போய்விட்டது.
அதுவும் மாநில முதல்வர் அமைச்சர் கட்சி தலைவர் என்றால்
கண்டிப்பாக கோடி கணக்கில் கார் வீடு வாசல் என்று இருக்க வேண்டும்.
குறைந்தது 10 கோடி ரூபாய் கை செலவுக்கு இல்லை என்றால் MLA சீட் தர மாட்டார்கள்.
முன்பு யாரோ ஒரு சிலர் வசதியானவர்கள் அரசியலில் இருந்தார்கள்
தற்பொழுது யாரோ ஒரு சில எழைகள் மேல் அடுக்கு அரசியலில் உள்ளார்கள்.
நல்ல பொருளாதார வளர்ச்சி அரசியல் தளங்களில் நிகழ்ந்துள்ளது.
இது மிக பெரிய மாற்றம்
ஆனால் அந்த மாற்றம் ஊரக வளர்ச்சி,தரமான கட்டுமானம் , சுத்தமான சுகாதாரம் தரமான உணவு கட்டுப்பாடு வீட்டு வசதி மக்கள் பாதுகாப்பு போன்ற கட்டமைப்புகளில் நிகழவில்லை
ஒரு quatar சரக்கு வாங்க முடியாமல் மக்கள் வாழ்வாதாரம் உள்ளது.
இதை தான் அளவுகோலாக வைத்து சொல்கிறேன்.
நல்ல அரசியல்வாதியை மதிப்பதில்லை
வசதிக்கும் வாரிசுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது..
ஒரு கவுன்சிலருக்கு ஏற்பட்ட வளர்ச்சி கூட பொது மக்களுக்கு ஏற்படவில்லை...
ஒரு செருப்பு கூட இல்லாமல் சிலர் சுடும் தார் சாலையில் நடந்து செல்வதை பார்த்தால் மனம் பதபதைக்கிறது ..
சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்
ஒரு வழிபாட்டு தள வாசலில் ஒரு செருப்பை திருட முடியும்
இருந்தாலும் மக்கள் தன்மானத்துடன் வெறும் காலில் நடக்கிறார்கள்.
அந்த தன்மானம் ஏன் அரசியல்வாதிகளிடம் அதிகாரிகளிடம் இல்லை ?
எளிமையாக இருங்கள்
காலையில் தன் அலுவலகத்திற்கு வருவதற்கு கூட 3 கார் புடை சூழ மாவட்ட ஆட்சியர் வர தேவையில்லை..
மக்களை பாருங்க
அதற்கு ஏற்றார் போல எளிமையாக இருங்கள்.
லஞ்ச பணம் ஊழல் பணம் தேவையில்லை..
யாருக்கு என்ன குறை உள்ளது என பார்த்து இலவசமாக முடித்து கொடுங்கள்
அது தான் உங்களுக்கு உள்ள கடமை
சுட்டாலும் தவறு செய்யமாட்டேன் என்பது கண்ணியம்
எந்த தருணத்திலும் எல்லையை மீற மாட்டேன் என்பது கட்டுப்பாடு.
No comments:
Post a Comment