Truth Never Fails

Wednesday, May 29, 2024

Play at time

 ஒருவேளை Youtube போன்ற நிறுவனங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால் பலர் காணொளி பதிவதை நிறுத்திவிடுவார்கள்.

 Like மற்றும் subscribe button களை hide செய்துவிட்டால் பலர் காணாமல் போவார்கள்.


ஆகவே இருக்கும் வரை ஆடி இருங்கள்..

Tuesday, May 28, 2024

முயற்சி இல்லை தளர்ச்சி

 Chat GPT 4.0 ஆல் இந்தியாவில் பலர் வேலை இழக்க உள்ளார்கள்.

ஆகவே புதிய தொழில்கள் தொடங்கப்பட வேண்டும்.


பலர் அரசு தேர்வு எழுத உள்ளதால் இனி போட்டி கடுமையாக இருக்கும் .


எந்த நாட்டுக்கும் வேலைக்கு செல்ல இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.


சும்மா மட்டும் இருந்துவிடாதீர்கள்

எதிர்காலம் கடுமையாக இருக்கும்.



Monday, May 27, 2024

புதிய இந்தியா உண்மையில் பிறக்க போகிறது

 அரசியல் : 

RSS தான் மோடியை தோற்கடித்து விட்டது இப்படி ஒரு சில காணொளி பேச்சாளர்கள் ஒரு புது agenda வை திணிக்கிறார்கள்.


Note this point : மக்கள் ஒன்று முடிவு செய்துவிட்டால் மாற்றவே முடியாது


இந்த திணிப்பு அரசியல் எடுபடாது..


ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் பாஜகவுக்கு சுன்னாபு தடவி அனுப்பி இருக்கிறார்கள் என்பதே உண்மை.


பாஜகவுக்கு RSS எதிரி என்பது சிவ சேனா MH வாக்கு வாங்க சொன்ன கதை..


++++++


மக்களிடம் பாஜக தான் எதிரி RSS இல்லை என்கிற திணிப்பு வேலை தான் இது.


மத அடிப்படை வாத குழுக்கள் எல்லாமே மக்களுக்கு எதிரி தான்.


அது தான் இந்த தேர்தலில் எதிரொலிக்க போகிறது..


இது தான் நான் போடும் புது பஜ்ஜி போண்டா அஜெண்டா 


இப்படி பேசுங்க ..


மக்கள் பாஜக தோல்வியை DIWALI போல கொண்டாட தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.


சர வெடி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்க போகிறது.

எவுதான்ட இருக்க இவுதான்ட நடு நாட்டில்

 ஒரு கூன் விழுந்த வயதான பாட்டி வழி தெரியாமல் ஏதோ கேட்டார் எனக்கு ஒன்றும் புரியவில்லை என் அம்மாவுக்கும் புரியவில்லை மீண்டும் கேட்டார் எனக்கு புரிந்துவிட்டது.


'எவுத்தான்ட இது'

என்றார்.


இது எந்த இடம் என்பது அதன் அர்த்தம்


நடு நாட்டு மொழி நடை இது.

அழிந்து வரும் மொழி நடையின் கடைசி தலைமுறை அவர்.


அங்க போனால் ஏசுவாங்க என்பார்கள்


என்னது ஏசுவா?


என்று திரும்ப கேட்பேன்

80 களில்..


அந்த தலைமுறை முடிகிறது..

Sunday, May 26, 2024

சேமிப்பு கணிப்பில்

 பணமதிபிழபுக்கு பிறகு மக்கள் பணத்தை சேமிக்க கூடாது என்று ஒரு பொருளாதார வடிவமைப்பை வகுத்து வைத்துள்ளார்கள் (Economic pattern) 


அதையும் மீறி நீங்கள் பணத்தை சேமித்தால் 

வங்கியில் உங்கள் பணம் சும்மா இருந்தால் 

வங்கி உங்களுக்கு Risk notice அனுப்பும் 


நீங்கள் பணத்தை எதிலாவது முதலீடு செய்து இருக்க வேண்டும்

அல்லது பணத்தை செலவு செய்து இருக்க வேண்டும்


பணத்தை நாம் சும்மா சேமிக்க அரசு விரும்பவில்லை


RBI  - மக்கள் சேமிப்பு குறைந்து கடன் பெருகிவிட்டது என்கிறது


(இது முழுக்க முழுக்க என் கணிப்பு )

 


பலருக்கு வாங்கும் சம்பளம் சேமிக்கும் அளவுக்கு இல்லை

விலைவாசி உயர்ந்துள்ளது..


அதேபோல மக்கள் முதலீடும் செய்யவில்லை

மாறாக வீண் செலவு செய்து 

EMI மூலம் கடன் அதிகம் வாங்கியுள்ளார்கள் .


எதிர்காலத்தில் மக்கள் பணத்தை சேமிக்கும் பழக்கத்தில் இருந்து வெளியே வருவார்கள் என கருதுகிறேன்..


அது செலவாக இல்லாமல் முதலீடாக இருந்தால் நல்லது...


அல்லது வீண் GADGETS ஆடம்பர செலவாக இருந்தால் கெட்டது..


++++++++


என்னுடைய அரசியல் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவதாக இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்..


அதை நோக்கி தான் பல ஆண்டுகளாக பயணிக்கிறேன்.


ஊழல் ,சாதி வேறுபாடு ,மத வெறுப்பு பிரிவினைவாதம் ,போதை பொருட்கள் நடமாட்டம் எல்லாம் மக்கள் வாழ்வாதாரத்துக்கு எதிராக உள்ளது.


இன்னும் பல காரணிகள் இருந்தாலும் இவைகள் இந்தியாவில் பிரதானமாக உள்ளதை நான் பார்க்கிறேன்.


இவைகளை சீர் செய்தால் தான் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமையும்.


நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்

நல்ல எதிர்காலத்தை கட்டமைப்போம்


Wednesday, May 22, 2024

Money matters

 Tax should not stop or interrupt the money flow

Tax should not block or change the structure of the business and trading hence it should co-operate with the structure without any operational loss. 

It should be like a feather touch 

Taxing area should not be sensed by the goer but should be taxed as a bee collects honey from a flower.






++++++++


Like savings account and current account bank needs Market account

Which can be used for stock markets for buy and selling

Also for exports and bid in trading

It won't create interruptions on saving account statements..

Saving account amount will be saved


Example post office has postal savings account and payments Bank account 

Ofcourse post office account won't be considered as Bank account


But here I mention Bank can have another new type of account for markets other than current account..


When a person generates Demat account automatically Market account should be created in Bank account..


Like UPI LITE account 

Respected person should upload cash to market account for trading purposes..

Savings or current account should not be allowed for trading. 

So that brokers can't access the savings or current account status..

They just only go through the status of market account from Banks

(Only one market account is allowed even though there is Multiple bank accounts ***)

Total trade made by the market account should not be calculated for cibil scores ..

It should not be a key for loan access from banks..

But profits can be transferred to savings account for loan purposes.. (CIBIL)

Money can be transferred from savings to market account without any charges same vice versa..

Also money can be transferred to another person account without any charges, 


Not only person companies can use this..

So that they can stop loss in their company administrative accounts..


For exports it will be very useful..


++'&(

Can't see late night..

Type later









Monday, May 20, 2024

பங்கு பந்து

 சனி கிழமை 11 மணிக்கு பங்கு சந்தையில் நுழைந்தேன்..

எல்லா ஆவணங்களும் சரி செய்யபட்டு வரும்போது மணி மதியம் 2 அதன் பின் பணத்தை பதிவேற்றி சில பங்குகளை வாங்கினேன்..


ஆனால் பங்கு சந்தை அதற்குள் மூடிவிட்டார்கள்..


ஒரு பங்கு மார்கெட் விலையில் பதிவாகிவிட்டது..

ஒரு பங்கு என் விலை படி நிற்கிறது..


நேற்று விடுமுறை

இன்றும் விடுமுறை தேர்தல் காரணமாக..


நானும் ஆவலாக இருக்கிறேன்..


முதல் முறை இல்லையா ?


சும்மா Try செய்து பார்க்கிறேன்..


என் நண்பர்களில் சிலர் expert என்பதால் எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லவும்.


கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

I'm not rushing or forcing anyone

 I'm just living my life


Whoever comes can come

Whoever goes can go


Always door is open


My life is so short I want to make it sweet

I don't want stress seekers 


Those who trust me can come

Those who leave me can leave

I don't have time for time passers 


My Love is always free 





Saturday, May 18, 2024

6ம் வகுப்புக்கு நீட் எதற்கு

 EMIS - Education Management Information System எண்ணை பதிவேற்ற பெற்றோரிடம் தொலைபேசி மூலம் OTP கேட்பது முட்டாள் தனம் . ஏற்கனவே OTP பெற்று வங்கி மோசடிகள் நிகழ்கிறது..


இந்த நேரத்தில் இந்த முறை தேவையற்றது..


ஒன்று ஆசிரியர்கள் நேரில் செல்ல வேண்டும்

அல்லது பெற்றோர்கள் நேரில் வர வேண்டும்.


தொலைபேசியில் OTP பெறுவது ஆபத்து.


TEACHERS MANAGEMENT SYSTEM மே சரியில்லை பள்ளி கல்வி துறை..


++++++


தனியார் பள்ளிகள்

அதன் ஆசிரியர்களை ஆள் பிடிக்கும் பணிகளை செய்ய வைக்கிறார்கள்.


கொடை விடுமுறை என்றால் 

மாணவர்களை சேர்க்க வீதி வீதியாக வீடு வீடாக நோட்டீஸ் போட வைக்கிறார்கள்

போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்..


ஒரு MARKETING PERSON போல COMMISION னுக்கு வேலை செய்ய வைக்கிறார்கள்..


(கிடைக்கிற கமிஷனை கெடுத்துடாத என்று எண்ண கூடும்)


ஆனால் இந்த பணி தேவையற்றது.


இதை மார்கெட்டிங் ஏஜென்சி மூலம் செய்தால் பள்ளிகளுக்கு செலவு அதிகம் என்பதால் அதன் ஆசிரியர்கள் மூலம் இதை குறைந்த செலவில் செய்கிறார்கள்.


இந்த மின் கம்பத்தில் உள்ள போஸ்டரை கட்டியது ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் ..


ஷாக் அடித்தால் என்ன ஆவது..


என் வீட்டு gate ல் no parking board மாட்டியது ஒரு தனியார் பள்ளி ஆசிரியை..

நாய் கடித்தால் என்ன ஆவது..


இந்த வேலை எதற்கு..


Profession என்னவோ அதை மட்டும் தான் செய்வேன்..

என்று கறாராக இருங்கள் நிர்வாகத்திடம்..


அவர்கள் சில்லரைகளை சிதரவிட்டு சிந்தனைகளை மாற்றிவிடுவார்கள்..


உங்களால் இதை பொது தளத்திற்கு எடுத்து செல்ல இயலாது..


இதை சமூக நிகழ்வுகளாக நான் எடுத்து செல்கிறேன்..


தனியார் பள்ளி நிர்வாகங்கள் திருந்த வேண்டும்


ஆசிரியர் பணி dignified job

விளம்பர போஸ்டர் ஒட்ட வைக்காதீர்கள்..


+++(((


6 ம் வகுப்பு முதல் NEET சொல்லி தர தேவையில்லை..


1 ம் வகுப்பு மாணவனுக்கு TRIGONOMETRY எதற்கு..?


அதுபோல ..


JEE NEET எல்லாம் அந்தந்த வயதில் கற்றுக்கொண்டால் போதும்..


இங்கும் கமிஷன் விளையாடுகிறது..


நான் பள்ளி கல்வித்துறையை தான் குற்றம்சாட்டுவேன்.


ஆற்றில் மணல் ஆள்ளிவிட்டு அவனே 

தண்ணி கேன் தொழில் நடத்துவதற்கு சமம்.

பின்வாங்கா ஒப்பந்தம் போடுங்கள்

 US India Iran : 

இந்தியா ஈரான் நாட்டில் உள்ள துறைமுகத்தை பயன்படுத்த ஒப்பந்தம் போட்டது.

அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்ததும் பின் வாங்கிவிட்டது.


இந்தியாவுக்கு நல்ல லாபம் தரும் ஒப்பந்தம் அது.


என்ன அமெரிக்கா sanctions போட்டால் 10 டாலர் உயருமா ?

உயந்துவிட்டு போகட்டும்..


2013 லில் 51 ரூபாய் இருந்தது 1 டாலர்

தற்பொழுது 83 ரூபாயாக உள்ளது..


கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக தான் இருக்கும்..


போடுங்கள் ஒப்பந்தத்தை..


ஈரான் மூலம் நமக்கு குறைத்த விலையில் எண்ணெய் கிடைக்கும்.


துருக்கி ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் செல்ல வழி கிடைக்கும்..


+++++++


இஸ்ரேல் நாட்டுக்கு பணமும் ஆயுதமும் தரமாட்டோம் என்று பைடன் இரண்டு முறை சொன்னார் ..

அவர் சொல்லி 3 நாட்களில் பணமும் ஆயுதமும் இரண்டு முறையும் கொடுக்கபட்டதையும் அறிகிறோம்..


ஆக பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக அவர்கள் இருக்கிறார்கள்..


ஆக 

3 நாட்கள் கழித்து நீங்களும் மீண்டும் ஒப்பந்தம் போடுங்கள்..


ஒருவேளை நம் ஒப்பந்தம் 

புதிய 

World order ரை எழுதும்.


Each step forward is important..


வெளியுறவு துறை அமைச்சர் ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கியது எனக்கு வருத்தமளிக்கிறது.


துறைமுகம் முக்கியம் விட்டுடாதீங்க.









Friday, May 17, 2024

Pollution marketing

 Anti Pollution cosmetics


காற்று மாசுக்கு எதிரான 

அழகு சாதன பொருட்கள்


எனக்கு இதை பார்த்ததும் ஆச்சரியம்..


இந்தியாவில் மட்டும்தான் ..


குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வீட்டில் வைத்துள்ளோம்..


மற்ற நாடுகளில் அரசே செய்து சுத்தமான நீரை வீடுகளுக்கு தருவார்கள்..


அதுபோல

இங்குள்ள காற்று மாசுவை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்..


காற்று சுத்திகரிப்பு கருவி கூட இதில் அடங்கும்..


எப்பப்பா எவ்வளவு பொருட்கள் தான் வாங்குவது..?


++++++++


அடுப்பு கரி பேஸ்ட் 

அடுப்பு கரி சோப்,ஜெல்,

அடுப்பு கரி வாசனை பொருள்

அடுப்பு கரி கிளீனர்

அடுப்பு கரி உரம்

அடுப்பு கரி ஃபில்டர்

அடுப்பு கரி

சும்மா தான் கிடந்தது  அதை மதிப்பு கூட்டி நமக்கே வியாபாரம் செய்கிறார்கள்.




Thursday, May 16, 2024

நம்பி வாங்க இலவசமாக கிடைக்கும்

சொத்த்காரன் ஒருத்தவன் எனக்கு போன் போட்டான்...

என்னிடம் எவன் போன் பண்ணாலும் எடுக்கமாற்றான் எடுத்தாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாற்றான் என்றான்..


என்ன வேணும் என்றேன்..


என் பையனை காலேஜ் சேர்க்கணும் 

என்ன சேர்ப்பது என தெரியவில்லை அதை கேட்க தான் எல்லாருக்கும் போன் போட்டேன் என்றான்..


அவனுங்க எல்லாரையும் நான் தான் காலேஜ் சேர்துவிட்டேன் 

நீ என்கிட்ட கேட்கவில்லை என்றேன்.


அப்படியா என்றான்..


அவன் என்ன நினைசிட்டான்னா ..

பெரிய பெரிய வேலையில் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைத்து அவர்கள் எல்லாருக்கும் போன் செய்துள்ளான்..


ஆனால் அவர்களுக்கு basement போட்டது யார் என்று அவனுக்கு தெரியவில்லை..


இது சமூக பிரச்சனை..


கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்


இந்த XL SUPER வச்சி இருப்பவனிடம் இருந்து கிடைத்த வழிகாட்டுதலில் தான் AUDI கார் தொழிற்சாலை வரை சென்று இருக்கிறார்கள் என்பது அவனுக்கு தெரியவில்லை..


பிறகு


உன் பையன் ஒழுங்கா படிக்க மாட்டான்..

Eletrical,IT சேர்த்து விட்டுடாத 

CIVIL சேர்த்து விடு என்றேன்...


ஆனால் பாருங்க IT தான் சேர்த்து விடுவான்..

காரணம் அவனுக்கு என்மேல் நம்பிக்கை இல்லை.



Tuesday, May 14, 2024

சிறு சேமிப்புக்கு வரி எதிரி

 10 லட்சத்துக்கு கீழ் முதலீடு செய்யப்படுகிற பணத்தை குடும்ப சிறு சேமிப்பாக கருதி வரி விளக்கு செய்ய வேண்டும். இதன்மூலம் பல நடுத்தர குடும்பங்களுக்கு பலன் கிடைக்கும்

 #Governance 


இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் PAN card மூலம் தனி கணக்காக வைக்க வேண்டும்.


அது எந்த வகை முதலீடாக இருந்தாலும் முழு வரி விளக்கு வழங்க வேண்டும்.


இதனால் மக்கள் சேமிக்கும் பழக்கமும் அதிகரிக்கும்.


2024 மக்கள் சேமிப்பு பல மடங்கு குறைந்து விட்டதாகவும் கடன் அதிகமாகி விட்டதாகவும் RBI அறிக்கை சொல்கிறது.


சேமிப்பு மற்றும் முதலீடுகளில்

வரி குறைப்பின் மூலம் இதை சரி செய்ய முடியும் என கருதுகிறேன்.


எங்கு முதலீடு செய்தாலும் அதிக வரி காரணமாக மக்களுக்கு லாபம் கிடைப்பதில்லை ஆகவே மக்கள் முதலீடு செய்வதேயில்லை .


ஆகவே சேமிப்பு குறைகிறது

சேமிப்பு இல்லாததால் மக்கள் அவசர தேவைக்கு சுலபமாக கடன் அட்டை மூலம் கடன் பெறுகிறார்கள்.


பிறகு வட்டிக்கு மேல் வட்டி கட்டி 

பணத்தை இழக்கிறார்கள்.


நாட்டில் வரி குறைப்பு மற்றும் புதிய சேமிப்பு திட்டங்களின் மூலம் இதை சரி செய்ய முடியும்.


பிரித்து பார்த்தால் பயன் ஏது

 தமிழ்நாடு :-


தேர்ச்சி 


இருபாலர் பள்ளி= 97% 

பெண்கள் பள்ளி= 91%

ஆண்கள் பள்ளி = 87% 


இதன்மூலம் என்ன விளங்குகிறது

இதுவும் அறிவியல் தான்..


உயிரியல்,உளவியல்,வேதியல்,புவியியல்,இயற்பியல்,சமூகவியல்,கணிதம் இப்படி எல்லாமே இருக்கு..


கேரளாவில் அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்றிவிட்டார்கள்.


இருபாலர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது .


இருபாலர் பள்ளிகளில் படித்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பது அந்தகால நினைப்பு

இனியும் வேண்டாம்.


அது சிறிய எண்ணம்

அது மாற வேண்டும்

Monday, May 13, 2024

வெட்டி கதை பேசி கூடு கட்டி வாழ்வோம்

 குட்டி சுவர் 

ஏறி வெட்டி கதை பேசி


காலம் கழித்த நாட்கள் நினைவில் வந்துபோகிறது 


உலக விஷயங்கள் முதல் உள்ளூர் சங்கதிகள் வரை பேசி தீர்த்துவிட்டு


பசியாற சென்றுவிடுவோம்..


குட்டி சுவர்கள் இருக்கிறது 

வெட்டி கதைகள் இருக்கிறது

ஆனால் அதை பேசி

காலம் கழிக்க ஆட்கள் தான் இல்லை..


(இந்த புகைப்படத்தை பார்த்ததும்)


(Their body language  says they are at relaxed state)









Sunday, May 12, 2024

முன்பின் மகிழ்ச்சி

 முன் வாழ்வில் மகிழ்ச்சி தேடாமல் கிடைக்கிறது

பின் வாழ்வில் மகிழ்ச்சி தேடினாலும் கிடைக்காது.


மகிழ்ச்சியை உருவாக்கி மகிழ முயற்சிகள் மட்டுமே நடக்கிறது அதிலும் இயலாமையால் ஏமாற்றம் மட்டுமே நிகழ்கிறது

இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்மை நாமே ஏமாற்ற தொடங்குகிறோம்.


மகிழ்ச்சியாக



Saturday, May 11, 2024

ஓர் ஆசிரியர் வீடு

 வீட்டை பார்த்தால் ரம்போ சின்ன வீடா இருக்கு ஆனால் எப்பவும் 4 விலையுயர்ந்த கார்கள் நிக்குதேன்னு நானும் சந்தேகபட்டேன்....

விசாரித்து பார்த்து பிறகு தான் தெரிந்தது அந்த வீட்டில் ஒரு ஆசிரியர் இருக்கிறார் அவரை பார்க்க அவரிடம் படித்த மாணவர்கள் வருகிறார்கள் என்று.


👍

Tuesday, May 7, 2024

Brand மோகம் விடாது கருப்பு

 இந்த தலைமுறை நன்றாக சம்பாதிக்கிறார்கள்..

ஆனால் ஆடம்பர செலவு அதிகம் செய்கிறார்கள்.


இவர்கள் brand மோகத்தில் அதிகம் இருக்கிறார்கள்.


100 டாலர் மதிப்புடைய பொருளை பிராண்ட் பெயரை வைத்து 10000 டாலர் என்றாலும் வாங்க தயாராக இருக்கிறார்கள்.


மருத்துவ செலவுக்கு கூட பணத்தை சேர்த்து வைப்பதில்லை..


இந்த குடிநீர் அந்த celebrity குடிப்பது 40000 ரூ என்றாலும் வாங்கி குடிக்கிறார்கள்.


சின்ன சின்ன ஊர்களில் கூட brand கடைகள் வர தொடங்கிவிட்டது..


காரணம் கிராமங்களில் கூட brand மோகம் பரவ தொ

டங்கிவிட்டது.