பணமதிபிழபுக்கு பிறகு மக்கள் பணத்தை சேமிக்க கூடாது என்று ஒரு பொருளாதார வடிவமைப்பை வகுத்து வைத்துள்ளார்கள் (Economic pattern)
அதையும் மீறி நீங்கள் பணத்தை சேமித்தால்
வங்கியில் உங்கள் பணம் சும்மா இருந்தால்
வங்கி உங்களுக்கு Risk notice அனுப்பும்
நீங்கள் பணத்தை எதிலாவது முதலீடு செய்து இருக்க வேண்டும்
அல்லது பணத்தை செலவு செய்து இருக்க வேண்டும்
பணத்தை நாம் சும்மா சேமிக்க அரசு விரும்பவில்லை
RBI - மக்கள் சேமிப்பு குறைந்து கடன் பெருகிவிட்டது என்கிறது
(இது முழுக்க முழுக்க என் கணிப்பு )
பலருக்கு வாங்கும் சம்பளம் சேமிக்கும் அளவுக்கு இல்லை
விலைவாசி உயர்ந்துள்ளது..
அதேபோல மக்கள் முதலீடும் செய்யவில்லை
மாறாக வீண் செலவு செய்து
EMI மூலம் கடன் அதிகம் வாங்கியுள்ளார்கள் .
எதிர்காலத்தில் மக்கள் பணத்தை சேமிக்கும் பழக்கத்தில் இருந்து வெளியே வருவார்கள் என கருதுகிறேன்..
அது செலவாக இல்லாமல் முதலீடாக இருந்தால் நல்லது...
அல்லது வீண் GADGETS ஆடம்பர செலவாக இருந்தால் கெட்டது..
++++++++
என்னுடைய அரசியல் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவதாக இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்..
அதை நோக்கி தான் பல ஆண்டுகளாக பயணிக்கிறேன்.
ஊழல் ,சாதி வேறுபாடு ,மத வெறுப்பு பிரிவினைவாதம் ,போதை பொருட்கள் நடமாட்டம் எல்லாம் மக்கள் வாழ்வாதாரத்துக்கு எதிராக உள்ளது.
இன்னும் பல காரணிகள் இருந்தாலும் இவைகள் இந்தியாவில் பிரதானமாக உள்ளதை நான் பார்க்கிறேன்.
இவைகளை சீர் செய்தால் தான் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமையும்.
நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்
நல்ல எதிர்காலத்தை கட்டமைப்போம்
No comments:
Post a Comment