EMIS - Education Management Information System எண்ணை பதிவேற்ற பெற்றோரிடம் தொலைபேசி மூலம் OTP கேட்பது முட்டாள் தனம் . ஏற்கனவே OTP பெற்று வங்கி மோசடிகள் நிகழ்கிறது..
இந்த நேரத்தில் இந்த முறை தேவையற்றது..
ஒன்று ஆசிரியர்கள் நேரில் செல்ல வேண்டும்
அல்லது பெற்றோர்கள் நேரில் வர வேண்டும்.
தொலைபேசியில் OTP பெறுவது ஆபத்து.
TEACHERS MANAGEMENT SYSTEM மே சரியில்லை பள்ளி கல்வி துறை..
++++++
தனியார் பள்ளிகள்
அதன் ஆசிரியர்களை ஆள் பிடிக்கும் பணிகளை செய்ய வைக்கிறார்கள்.
கொடை விடுமுறை என்றால்
மாணவர்களை சேர்க்க வீதி வீதியாக வீடு வீடாக நோட்டீஸ் போட வைக்கிறார்கள்
போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்..
ஒரு MARKETING PERSON போல COMMISION னுக்கு வேலை செய்ய வைக்கிறார்கள்..
(கிடைக்கிற கமிஷனை கெடுத்துடாத என்று எண்ண கூடும்)
ஆனால் இந்த பணி தேவையற்றது.
இதை மார்கெட்டிங் ஏஜென்சி மூலம் செய்தால் பள்ளிகளுக்கு செலவு அதிகம் என்பதால் அதன் ஆசிரியர்கள் மூலம் இதை குறைந்த செலவில் செய்கிறார்கள்.
இந்த மின் கம்பத்தில் உள்ள போஸ்டரை கட்டியது ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் ..
ஷாக் அடித்தால் என்ன ஆவது..
என் வீட்டு gate ல் no parking board மாட்டியது ஒரு தனியார் பள்ளி ஆசிரியை..
நாய் கடித்தால் என்ன ஆவது..
இந்த வேலை எதற்கு..
Profession என்னவோ அதை மட்டும் தான் செய்வேன்..
என்று கறாராக இருங்கள் நிர்வாகத்திடம்..
அவர்கள் சில்லரைகளை சிதரவிட்டு சிந்தனைகளை மாற்றிவிடுவார்கள்..
உங்களால் இதை பொது தளத்திற்கு எடுத்து செல்ல இயலாது..
இதை சமூக நிகழ்வுகளாக நான் எடுத்து செல்கிறேன்..
தனியார் பள்ளி நிர்வாகங்கள் திருந்த வேண்டும்
ஆசிரியர் பணி dignified job
விளம்பர போஸ்டர் ஒட்ட வைக்காதீர்கள்..
+++(((
6 ம் வகுப்பு முதல் NEET சொல்லி தர தேவையில்லை..
1 ம் வகுப்பு மாணவனுக்கு TRIGONOMETRY எதற்கு..?
அதுபோல ..
JEE NEET எல்லாம் அந்தந்த வயதில் கற்றுக்கொண்டால் போதும்..
இங்கும் கமிஷன் விளையாடுகிறது..
நான் பள்ளி கல்வித்துறையை தான் குற்றம்சாட்டுவேன்.
ஆற்றில் மணல் ஆள்ளிவிட்டு அவனே
தண்ணி கேன் தொழில் நடத்துவதற்கு சமம்.
No comments:
Post a Comment