Truth Never Fails

Tuesday, April 30, 2024

தேர்தல் சீர்திருத்தம் தேவை

 

தேர்தல் சீர்திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள தொடங்க வேண்டும்.


Unopposed என்கிற நடைமுறையை நீக்க வேண்டும் NOTA உள்ளபோது எப்படி ஒருவர் போட்டியின்றி வெல்ல முடியும்..

அவர் குறைந்தபட்சம் NOTA வுடன் தேர்தலை சந்திக்க வேண்டும்.


சும்மா சொல்கிறேன்..

UNNOPPSED என்றால் தேர்தலை ரத்து செய்து மீண்டும் 

மனுதாக்கலை தொடங்க வேண்டும்..


MLA,MP தேர்தலில் unopposed என்கிற நடைமுறையே இருக்க கூடாது.

Moving out of social networks

I didn't installed Twitter,Facebook and what's app in my new phone.

I'm moving out in my private personalised devices…

Saturday, April 27, 2024

Learning unknown market

 Share market பொறுத்த வரைக்கும் mind matters ..


You may not win by playing single

You must group or club together. 


A group of mind can derive the right choice..


+++((


I'm learning


Which can't be learnt in a lifetime.


It should be updated daily..


+++++


I'm new but I knew without any clue of the wave of the money flows.



Friday, April 26, 2024

தேர்தல் தவறுகள்

 Investigation:


720 நிமிடங்கள் மட்டுமே தேர்தல் நடக்கிறது

பூத்துக்கு 1000 வாக்காளர்கள் உள்ளார்கள்

ஆளுக்கு

2 நிமிடம் என்று வைத்துக்கொண்டால் 360 நபர்கள் தான் வாக்கு செலுத்த முடியும்.

3 நிமிடம் என்று வைத்துக்கொண்டாலும் 240 நபர்கள் தான் வாக்கு செலுத்த முடியும்.


இந்திய தேர்தல் முறையே தவறு 


Election2024

Wednesday, April 24, 2024

பொருளாதார பயங்கரவாதம் எதிர்கொள்ள மதியாற்றல் தேவை

பொருளாதார பயங்கரவாதம் :

தங்க பத்திர திட்டம் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. 

தங்கம் விலை கடுமையாக உயர்வதால் அரசால் பணத்தை திருப்பி தர இயலாமல் போகலாம்.

உலகம் முழுவதும் போர் நிகழும் பொழுது..

விலைவாசி உயரும்

பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும்..


அப்பொழுது தங்கம் தேவைப்படும்..

நாட்டின் கஜானாவில் தங்கம் இல்லை என்றால்

மக்களிடம் உள்ள தங்கத்தில் கை வைப்பார்கள்.


அதில் தங்க பத்திரம் என்பது வெறும் காகிதம் என்பதால்

எதற்கும் பலன் தராது..

நிஜ தங்கம் தேவைப்படும்

தங்க பத்திரத்துக்கு இணையாக நிஜ தங்கம் ரிசர்வ்வில் இல்லை என்பதால்..


IT சட்டபடி தங்க கையிருப்பு சட்டம் கடுமையாகும்.


உங்களிடம் உள்ள மிகை தங்கம் பறிக்கப்படும்.


++++++++


தேர்தல் பத்திர மோசடி

PM care மோசடி

பணமதிப்பிழப்பு 


அரசு திட்டங்களின் மூலம் மோசடி


பெரு நிறுவன கடன் தள்ளுபடி

போலி நிறுவன திவால் மோசடி

வங்கி திவால் மோசடி


என பல மோசடிகள் மூலம் மக்கள் பணம் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது


இதை தான் நான் பொருளாதார பயங்கரவாதம் என்கிறேன்.


இந்த வார்த்தையை 2016 ல் பயன்படுத்தியுள்ளேன்..


மீண்டும்..


இந்த பயங்கரவாதத்தை ஆயுதம் வைத்து எதிர்கொள்ள முடியாது

மூளையை வைத்து தான் எதிர்கொள்ள முடியும்.



+++++++

25 Aug 2024


தங்க பத்திரம் குறித்து..

ஏப்ரல் மாதமே கணித்தது..


தங்க பாத்திரத்தை அரசு இன்னும் வெளியிடவில்லை.


என் பதிவுக்கு பிறகு

இங்கிலாந்தில் இருந்து ரிசர்வ் தங்கத்தை இந்தியா கப்பலில் கொண்டு வந்தது.


தங்க பத்திரம் மக்களுக்கு வெற்றி அரசுக்கு நஷ்டம்.


ஆகவே நான் சொன்னபடி

அரசு மக்களிடம் உள்ள தங்கத்தில் கை வைக்கும்.

100% 

இது நடக்கும்.


நான் இப்படி நடக்கும் என்பதை அமெரிக்காவின் பொருளாதார முறையை வைத்து கவனித்தேன்.


100 ஆண்டுகளுக்கு முன்பு இதே சிக்கல் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.


மக்களிடம் உள்ள தங்கத்தை பிடுங்கி தான் அவர்கள் கஜானாவை நிறப்பினார்கள்


டாலர் இல்லாமல் தங்கம் வைத்து வணிகம் செய்ய முடியும் என்பதால் அவர்களின் தங்க கையிருப்பு உலகில் முதல் இடத்தில் உள்ளது.


தற்பொழுது உக்ரைன் தங்கத்தை கொடுத்து தான் ஆயுதம் வாங்கி இருக்கும்.


சீனா அதிக அளவில் தங்கத்தை சேர்ப்பதால்

தங்க தட்டுபாடு வர உள்ளது


அப்பொழுது தங்கம் இரு மடங்காக விலை உயரும்


அப்பொழுது தங்க பத்திரம் வெறும் காகிதம் என்பதால்

காகிதத்தை வாங்கிகொண்டு இரு மடங்கு பணத்தை அரசு 2.5% வட்டியுடன் திரும்ப தர நேரிடும்.


இடைப்பட்ட காலகட்டத்தில் அரசு பத்திரம் விற்று வாங்கி பணத்தை இரு மடங்காக பெருக்கி இருக்காது.


கூட்டி கழித்து பார்த்தால் அரசுக்கு 

125% இழப்பு


இதுவே தங்கம் சேமிப்பு கிடங்கில் இருந்தால்

அன்றைய சந்தை மத்திபில் விற்று பணமாக மாற்றலாம் அல்லது மக்களிடம் தங்கமாகவே தந்துவிடலாம்..


ஆனால் அரசிடம் மீந்து இருப்பதோ காகிதம் மட்டும் தான்.


அடுத்த ஆண்டு தங்க பாத்திரத்திற்கு 2.5% வரி கூடுதலாக போட்டால் தான்

அரசால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.



Sunday, April 21, 2024

Expanding needs in need

 Currently India is facing a population explosion, Roads full of traffic congestion, Trains & buses full of rush, Water scarcity, demand for foods, heavy price rise, unemployment rising high, Natural sources decreasing.

Wednesday, April 17, 2024

மனைவி தேவை

 2 மனைவி வைத்து இருப்பவன் ஒருநாளும் உணவகத்தில் சாப்பிட்டு பார்த்ததில்லை..

1 மனைவி வைத்து இருப்பவன் அவ்வப்பொழுது உணவகம் வருகிறான்.


அதேபோல 3 மனைவி வைத்து இருப்பவன் காலை மாலை என தூய்மையான உடைகளை அணிகிறான்..


Single தான் பாவம் 

எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கிறான்


ஆக ஆக

மோசடி தேர்தல்

 தேர்தல் பத்திர மோசடியை விட மிக பெரிய மோசடி 2024 இந்திய தேர்தல்


2024 தேர்தல் 

என் வாக்கு நோடாவுக்கு..

தேர்தல் ஆணையம் (No biometric) தேர்தல் நடத்தும் முறையே தவறு என்பதாலும் வேட்பாளர் யாரையும் நான் நம்பவில்லை என்பதாலும் 

என் வாக்குப் நோட்டாவுக்கு

Tuesday, April 16, 2024

தேவைக்கு ஏற்ப தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள்

 ஈரான் தாக்குதல் நடத்திய தருணத்தில் இருந்து RT செய்திகளை Facebook இருட்டடிப்புச் செய்து தற்பொழுது விடுவித்து இருக்கிறது. 


உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய போதும் இப்படித்தான் செய்தார்கள்.


தொழில்நுட்ப உலகில் செய்தி இருட்டடிப்புச் செய்ய முடியும் என்பதற்கு இது உதாரணம்.


++++++++


இந்திய தேர்தலில் என்னென்ன தொழில்நுட்ப மோசடிகள் நடக்கிறது என்று கவனித்தும் தான் வருகிறேன்..


Facebook போன்ற நிறுவனங்கள் பல போலி செய்திகளை தடுத்தும் வருகிறார்கள் 


இப்படி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவைக்கு ஏற்ப நாடுகளுக்கு ஏற்ப இரு முகங்கள் உள்ளது..



பொய் நிரந்தரமில்லை

 ஒருவேளை பொய் தான் ஜெய்கும் என்றால் இந்த உலகில் எவனும் உண்மையை பேசமாட்டான்

Friday, April 12, 2024

தவறான சித்தரிப்பு

 நான் இருக்கும் தலைமுறையில் ஒரு கொடிய பிரச்சனை ஒன்று உள்ளது..

நல்லவர்களை கெட்டவர்களாக சித்தரிப்பது, 

கெட்டவர்களை நல்லவர்களாக சித்தரிப்பது.

Durgs on gender India

 இந்தியாவில் 

75% ஆண்களும் 

25% பெண்களும் ஏதோ ஒரு போதை பொருளுக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள்.

Monday, April 8, 2024

Nature forces sometime

 Nature takes people away from me

Sometimes it's good too

They may be not needed in my path 

Nature keeps my path clear


Sometimes nature brings people to me

It's good too

I go with them

We create new paths for us and others





Sunday, April 7, 2024

மோசடிகள் பெறுக துறை தடுக்க வருக

 அதிகரிக்கும் மோசடிகள் காரணமாக Directorate of Scams Eradication மோசடிகள் ஒழிப்பு துறை என்று ஒரு துறையே தொடங்க வேண்டும்..


இட்லி மாவு முதல் விமான பயணம் வரை மோசடிகள் பெருகி வருகிறது.

Tip top female tops male

 என் நண்பர்களிடம் பலமுறை சொல்லியுள்ளேன்..

ஆனால் இங்கு பகிர நேரம் இன்று தான் கிடைத்தது..


விளையாட்டு துறை :

 கடலூரில் பெண்கள் சிறப்பாக விளையாடுவார்கள்..


கால்பந்து முதல் அனைத்து விளையாட்டுகளிலும் தேசிய அணியில் ஒருவர் கடலூரில் இருந்து இருப்பார்..


இதன் பின் ஒரு மறைமுக உளவியல் காரணம் ஒன்று உள்ளதை நான் இதை சில ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தேன்..


அதை தான் இங்கு சொல்ல போகிறேன்..


காணொளியில் பெண்கள் ஆண்களுடன் விளையாடுவதை கவணிக்கலாம் .


அது தான் இங்குள்ள பெண்களை மிக சிறப்பாக விளையாட செய்கிறது..

ஆண்களுக்கு நிகராக விளையாடுவார்கள்..


பார்க்க மிக சிறப்பாக இருக்கும்.


ஆனால் இதில் ஒரு பின்னடைவு ஒன்று உள்ளது..


பெண்களுடன் விளையாடும் ஆண்கள் பலவீனமான விளையாட்டு வீரராக உருவாகிறார்கள்..


இதையும் கவணித்துள்ளேன்..


முக்கியமாக கால்பந்தில் பெண்கள் மிக சிறப்பாக விளையாடுகிறார்கள் ..

ஆண்களை தள்ளி விடுவது கட் அடிப்பது என பார்க்க விளையாட்டு சர்வதேச தரத்தில் இருக்கும்..


அதை தான் காணொளி எடுக்க முடியவில்லை மன்னிக்கவும்..

(முயற்சிக்கிறேன்)


ஒரு பெண் மிக சிறப்பாக விளையாட அந்த பெண்ணை ஆண்களுடன் போட்டிபோட வைக்க வேண்டும்

என்கிற பாடத்தை இங்கு நான் கற்றுக்கொண்டேன்..


இதை நான் நெய்வேலியில்,சிதம்பரத்தில் கூட பார்த்ததில்லை..

அங்கு ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக விளையாடுவார்கள்.


அதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம்..

ஆனால் அது இங்கு கடலூரில் ஆள் பற்றாக்குறையால் மறைமுகமாக தகர்க்கபட்டுள்ளது..


ஆனால் பெண்களுடன் விளையாடினால் ஆண்கள் சரியாக விளையாட மாட்டார்கள் என்கிற செய்தியையும் சொல்லிவிடுகிறேன்..


(நம்ம நண்பர்கள் வட்டத்தில் ஒரு சில பயிற்சியாளர்கள் உள்ளார்கள்..  உங்களுக்கு இது தெரிந்தால் சொல்லுங்கள்)


ஒருவர் தன்னைவிட பலம்வாய்ந்தவருடன் மோதும் போது தான் அவர் பலத்தை மெருகேற்றிகொள்ள முடியும்..


என்கிற சூத்திரத்தை இங்கு நேரடியாக பார்க்கிறேன்..





அக்னி தீர்த்த குளம் உருவாகும் கதை

 நம்ம backpacker Kumar jamica நாட்டில் methane கிணறு ஒன்றை காணொளியில் காட்சி படுத்தினார்..

இதை பார்த்ததும் எனக்கு இந்தியா தான் நினைவில் வருகிறது..


இங்கு கோவிலை கட்டி

அக்னி தீர்த்த குளம் என்று சொல்லி இருப்பார்கள்..

இல்லையா ?


பல இயற்கை நிகழ்வுகளை பிரம்மாண்டமாக கட்டமைத்து அங்கு ஒரு வழிபாட்டு தளம் எழுப்புவது நம் வழக்கம்..


ஹிந்து மதம் மட்டுமல்ல புத்த,கிறிஸ்துவ,இஸ்லாமிய மதத்திலும் இந்த பழக்கம் உள்ளது..


மத ரீதியாக சொல்வதைவிட

உளவியல் மன ரீதியாக சொல்லலாம்


மக்கள் அறிவியல் அறியாமையில் இப்படி செய்கிறார்கள் .




Saturday, April 6, 2024

துதி பாடும் சாமானியன்

 ஒரு சாமானியன் தன் கருத்தை வெளிபடையாக சொல்லும் வரை அவனை ஆட்சி செய்பவனின் துதிகளும் வீரதீர பெருமை கதைகள் மட்டுமே தொடரும் .


Friday, April 5, 2024

சாதி மடமை

 சாதி என்பது தொழில் பிரிவுக்காக தொடங்கபட்டது மட்டுமே அதை பிறப்போடு தொடர்புபடுத்தி அதன் மூலம் உறவும் பந்தமும் கொள்வதும் வெறிபிடித்து அலைவதும் மடமை

போலி வாக்குறுதி எதற்கு

 அரசியல் : 

எவன் சொல்கிற வாக்குறுதிகளை நான் காதில் வாங்கவில்லை அதேபோல நீங்களும் இருந்துவிடுங்கள் 👍

ஆடை விற்க ஆட்டம்

 கத்திரிக்காய் விற்பதற்கு கூட 4 reels போட்டு ஆட வேண்டியுள்ளது இந்த யுகத்தில், 

கத்திரிக்காய் சொத்தையாக இருந்தாலும் பிரபலம் விற்றால் அதற்கு மவுசு அதிகமாகிறது ..


கத்திரிக்காய் என்கிற இடத்தில் எதை வேண்டுமென்றாலும் நிறப்பிகொள்ளுங்கள்.


இப்படி எழுதிவிட்டு சும்மாவிட்டல் எவனும் கண்டுகொள்வதில்லை

இதனுடன் ஒரு பிரபலத்தின் புகைப்படத்தை சேர்த்தால் அதன் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது..


மாறாக நான் பிரபலத்தின் புகைப்படத்தை பதிவெற்றவில்லை..


சும்மா கையில் கிடைத்த படத்தை ஏற்றுகிறேன்..






Post block effects

 தேவை முடிந்ததும் Block செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது..

ஆனால் என்னதான் block செய்தாலும் விதி என்று ஒன்று இருப்பதை மறந்துவிடுகிறார்கள்..


கடன் வாங்கியவர் 

கடன் கொடுத்தவரை பிளாக் செய்வதும் நடக்கிறது.


இப்படி அவர்களுக்கு அவர்களே வினை விதைத்துகொள்கிறார்கள் 


இது பெரிய topic 


பிறகு வீடியோவாக பதிகிறேன்..


நீதி வெல்லும் அதிகார நிழலை அழிக்கும்

 நீதி :

சென்ற தேர்தலில் முக்கிய பொருளாக இருந்த பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை சம்பம் ; 

ஆட்சிக்கு வந்ததும் ஆட்டிவிடுவோம் என்றார்கள் 

அடுத்த தேர்தல் வந்தது

எதை ஆட்டினார்கள் என்று தெரியவில்லை..


அதிமுகவும் கண்டுக்கல திமுகவும் கண்டுக்கல பாஜகவும்  கண்டுக்கல


அதிகாரப் பலம் நீதியை மறைக்க முடியாது நீதி வெல்லும்..

(It can shadow over it but shadows are not permanent and stable)


நீதியை நிறைவேற்றாமல் 

தாமதபடுத்துவது மறைப்பது  தவறு 

பாதிக்கப்பட்டவர்கள் அரசின் மீது நம்பிக்கை இழப்பார்கள் .

தேர்தல் தோற்றம் போலியாக உருவாக்கம்

 அரசியல் : முதல் முறையாக தேர்தல் மீது நம்பிக்கை இழக்கிறேன்.

நானே கேப்டன் தான் என்றாலும் என் கிரிக்கெட் அணியில் தேர்தல் வைப்பேன் ஆனால் எனக்கே இந்த நம்பிக்கை இழப்பு ஏற்படுகிறது..


ஜனநாயகம் என்கிற பிம்பத்தை இருப்பதாக காட்ட

டம்மி நிகழ்வாக இந்த தேர்தல் நடக்கிறது.


++++++

Wednesday, April 3, 2024

சிறப்பை சீர்படுத்து

 உங்க ஊரில் என்ன விசியம் சிறப்பாக உள்ளதோ அல்லது மக்கள் எதை நோக்கி வருகிறார்களோ அதை சிறந்த முறையில் பராமரிப்பு செய்யுங்கள் 👍.


உதாரணத்துக்கு


கடலூருக்கு மக்கள் மீன் வாங்க வருகிறார்கள் என்றால்

மீன் மார்க்கெட்டை சிறந்த முறையில் உலக தரத்தில் வையுங்கள்..


உண்மையில் அப்படி இல்லை என்பது வருத்தம்.


Non institutional apps on inland earnings

 தனியார் தங்களது சொந்த நிலத்தில் சுடுகாடு அமைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்..


எரிக்க 25000 ரூபாய்

புதைக்க 30000 ரூபாய் மாத வாடகை 3000 ரூபாய்..


வருடாவருடம் சடங்குகள் s iya 10000 ரூபாய் கட்டணம்

Live telecast வழியாக பார்க்க 2000 ரூபாய் subscription 

கல்லறைக்கு insurance வசதியும் உண்டு..


என் நண்பர்களில் பலர் வேலை இல்லாமல் உள்ளார்கள்..

இப்படி நான் அரசு மற்றும் கார்பரேட் களுக்கு புது ஐடியா தருவதால் அவர்கள் மூலம் அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறேன்..


It seems to be a joke but it has a valid point.


சுடுகாட்டு வியாபாரம்

 தனியார் தங்களது சொந்த நிலத்தில் சுடுகாடு அமைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்..


எரிக்க 25000 ரூபாய்

புதைக்க 30000 ரூபாய் மாத வாடகை 3000 ரூபாய்..


வருடாவருடம் சடங்குகள் s iya 10000 ரூபாய் கட்டணம்

Live telecast வழியாக பார்க்க 2000 ரூபாய் subscription 

கல்லறைக்கு insurance வசதியும் உண்டு..


என் நண்பர்களில் பலர் வேலை இல்லாமல் உள்ளார்கள்..

இப்படி நான் அரசு மற்றும் கார்பரேட் களுக்கு புது ஐடியா தருவதால் அவர்கள் மூலம் அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறேன்..


It seems to be a joke but it has a valid point.