Truth Never Fails

Wednesday, April 24, 2024

பொருளாதார பயங்கரவாதம் எதிர்கொள்ள மதியாற்றல் தேவை

பொருளாதார பயங்கரவாதம் :

தங்க பத்திர திட்டம் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. 

தங்கம் விலை கடுமையாக உயர்வதால் அரசால் பணத்தை திருப்பி தர இயலாமல் போகலாம்.

உலகம் முழுவதும் போர் நிகழும் பொழுது..

விலைவாசி உயரும்

பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும்..


அப்பொழுது தங்கம் தேவைப்படும்..

நாட்டின் கஜானாவில் தங்கம் இல்லை என்றால்

மக்களிடம் உள்ள தங்கத்தில் கை வைப்பார்கள்.


அதில் தங்க பத்திரம் என்பது வெறும் காகிதம் என்பதால்

எதற்கும் பலன் தராது..

நிஜ தங்கம் தேவைப்படும்

தங்க பத்திரத்துக்கு இணையாக நிஜ தங்கம் ரிசர்வ்வில் இல்லை என்பதால்..


IT சட்டபடி தங்க கையிருப்பு சட்டம் கடுமையாகும்.


உங்களிடம் உள்ள மிகை தங்கம் பறிக்கப்படும்.


++++++++


தேர்தல் பத்திர மோசடி

PM care மோசடி

பணமதிப்பிழப்பு 


அரசு திட்டங்களின் மூலம் மோசடி


பெரு நிறுவன கடன் தள்ளுபடி

போலி நிறுவன திவால் மோசடி

வங்கி திவால் மோசடி


என பல மோசடிகள் மூலம் மக்கள் பணம் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது


இதை தான் நான் பொருளாதார பயங்கரவாதம் என்கிறேன்.


இந்த வார்த்தையை 2016 ல் பயன்படுத்தியுள்ளேன்..


மீண்டும்..


இந்த பயங்கரவாதத்தை ஆயுதம் வைத்து எதிர்கொள்ள முடியாது

மூளையை வைத்து தான் எதிர்கொள்ள முடியும்.



+++++++

25 Aug 2024


தங்க பத்திரம் குறித்து..

ஏப்ரல் மாதமே கணித்தது..


தங்க பாத்திரத்தை அரசு இன்னும் வெளியிடவில்லை.


என் பதிவுக்கு பிறகு

இங்கிலாந்தில் இருந்து ரிசர்வ் தங்கத்தை இந்தியா கப்பலில் கொண்டு வந்தது.


தங்க பத்திரம் மக்களுக்கு வெற்றி அரசுக்கு நஷ்டம்.


ஆகவே நான் சொன்னபடி

அரசு மக்களிடம் உள்ள தங்கத்தில் கை வைக்கும்.

100% 

இது நடக்கும்.


நான் இப்படி நடக்கும் என்பதை அமெரிக்காவின் பொருளாதார முறையை வைத்து கவனித்தேன்.


100 ஆண்டுகளுக்கு முன்பு இதே சிக்கல் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.


மக்களிடம் உள்ள தங்கத்தை பிடுங்கி தான் அவர்கள் கஜானாவை நிறப்பினார்கள்


டாலர் இல்லாமல் தங்கம் வைத்து வணிகம் செய்ய முடியும் என்பதால் அவர்களின் தங்க கையிருப்பு உலகில் முதல் இடத்தில் உள்ளது.


தற்பொழுது உக்ரைன் தங்கத்தை கொடுத்து தான் ஆயுதம் வாங்கி இருக்கும்.


சீனா அதிக அளவில் தங்கத்தை சேர்ப்பதால்

தங்க தட்டுபாடு வர உள்ளது


அப்பொழுது தங்கம் இரு மடங்காக விலை உயரும்


அப்பொழுது தங்க பத்திரம் வெறும் காகிதம் என்பதால்

காகிதத்தை வாங்கிகொண்டு இரு மடங்கு பணத்தை அரசு 2.5% வட்டியுடன் திரும்ப தர நேரிடும்.


இடைப்பட்ட காலகட்டத்தில் அரசு பத்திரம் விற்று வாங்கி பணத்தை இரு மடங்காக பெருக்கி இருக்காது.


கூட்டி கழித்து பார்த்தால் அரசுக்கு 

125% இழப்பு


இதுவே தங்கம் சேமிப்பு கிடங்கில் இருந்தால்

அன்றைய சந்தை மத்திபில் விற்று பணமாக மாற்றலாம் அல்லது மக்களிடம் தங்கமாகவே தந்துவிடலாம்..


ஆனால் அரசிடம் மீந்து இருப்பதோ காகிதம் மட்டும் தான்.


அடுத்த ஆண்டு தங்க பாத்திரத்திற்கு 2.5% வரி கூடுதலாக போட்டால் தான்

அரசால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.



No comments:

Post a Comment