என் நண்பர்களிடம் பலமுறை சொல்லியுள்ளேன்..
ஆனால் இங்கு பகிர நேரம் இன்று தான் கிடைத்தது..
விளையாட்டு துறை :
கடலூரில் பெண்கள் சிறப்பாக விளையாடுவார்கள்..
கால்பந்து முதல் அனைத்து விளையாட்டுகளிலும் தேசிய அணியில் ஒருவர் கடலூரில் இருந்து இருப்பார்..
இதன் பின் ஒரு மறைமுக உளவியல் காரணம் ஒன்று உள்ளதை நான் இதை சில ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தேன்..
அதை தான் இங்கு சொல்ல போகிறேன்..
காணொளியில் பெண்கள் ஆண்களுடன் விளையாடுவதை கவணிக்கலாம் .
அது தான் இங்குள்ள பெண்களை மிக சிறப்பாக விளையாட செய்கிறது..
ஆண்களுக்கு நிகராக விளையாடுவார்கள்..
பார்க்க மிக சிறப்பாக இருக்கும்.
ஆனால் இதில் ஒரு பின்னடைவு ஒன்று உள்ளது..
பெண்களுடன் விளையாடும் ஆண்கள் பலவீனமான விளையாட்டு வீரராக உருவாகிறார்கள்..
இதையும் கவணித்துள்ளேன்..
முக்கியமாக கால்பந்தில் பெண்கள் மிக சிறப்பாக விளையாடுகிறார்கள் ..
ஆண்களை தள்ளி விடுவது கட் அடிப்பது என பார்க்க விளையாட்டு சர்வதேச தரத்தில் இருக்கும்..
அதை தான் காணொளி எடுக்க முடியவில்லை மன்னிக்கவும்..
(முயற்சிக்கிறேன்)
ஒரு பெண் மிக சிறப்பாக விளையாட அந்த பெண்ணை ஆண்களுடன் போட்டிபோட வைக்க வேண்டும்
என்கிற பாடத்தை இங்கு நான் கற்றுக்கொண்டேன்..
இதை நான் நெய்வேலியில்,சிதம்பரத்தில் கூட பார்த்ததில்லை..
அங்கு ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக விளையாடுவார்கள்.
அதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம்..
ஆனால் அது இங்கு கடலூரில் ஆள் பற்றாக்குறையால் மறைமுகமாக தகர்க்கபட்டுள்ளது..
ஆனால் பெண்களுடன் விளையாடினால் ஆண்கள் சரியாக விளையாட மாட்டார்கள் என்கிற செய்தியையும் சொல்லிவிடுகிறேன்..
(நம்ம நண்பர்கள் வட்டத்தில் ஒரு சில பயிற்சியாளர்கள் உள்ளார்கள்.. உங்களுக்கு இது தெரிந்தால் சொல்லுங்கள்)
ஒருவர் தன்னைவிட பலம்வாய்ந்தவருடன் மோதும் போது தான் அவர் பலத்தை மெருகேற்றிகொள்ள முடியும்..
என்கிற சூத்திரத்தை இங்கு நேரடியாக பார்க்கிறேன்..
No comments:
Post a Comment