Truth Never Fails

Saturday, August 19, 2023

நகரும் படியில் குழந்தை

 2 நாட்கள் முன்பு ஒரு துணி கடையில் நகரும் படியில் 2 வது மாடியில்  இறங்க சென்றேன் ..


அப்பொழுது ஒரு பெண் இரண்டு குழந்தைகள் வைத்து கொண்டு இறங்க முடியாமல் கஷ்டபட்டு கொண்டு இருந்தார்.


என்னை பார்த்ததும் ஒரு 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு இன்னொரு குழந்தையை கூட்டிகொண்டு இறங்கிவிட்டார்.


சரி இதுல என்ன இருக்கு என்று 

வலது கையில் பையுடன் இடது கையில் அந்த குழந்தையின் கையை பிடித்து ..

முதல் படியில் கால்களை வைத்தேன்..


ஆனால் அந்த குழந்தை வர மறுத்து அங்கேயே நின்று விட்டது.


உடனே பின்னே வந்து


அந்த குழந்தையை என்னுடன் கால் வைக்க சொல்லிவிட்டு ..


அந்த குழந்தை கால்வைக்க முன் வரும்போது 

கைகளை பிடித்து இழுத்து

என் கால்களை வைத்தேன்..

ஆனால் அந்த குழந்தை பின்னால் சென்றுவிட்டது..


என்னால் பின்னால் வர முடியவில்லை

மூன்று படிகள் கீழே சென்றுவிட்டது

படியில் தடுமாறிவிட்டேன் ..

கஷ்ட்டபட்டு மீண்டும் பின்னால் வந்து


பயப்படாத என்று சொல்லி கீழே பார்த்தேன்

அந்த குழந்தையை அழைத்து வந்த பெண் கீழே இறங்கி சென்றுவிட்டார்..


அதன் பின் அந்த குழந்தையை தூக்கிகொண்டு இறங்கினேன்.


பிறகு அந்த குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டேன்..


+++++++


அந்த குழந்தையால் அல்லது  என் தடுமாற்றத்தால் இருவரும் கீழே விழுந்து இருப்போம்.


கற்ற பாடம் குழந்தைகளை escalator களில் அழைத்து செல்ல கூடாது..

தூக்கி கொண்டு தான் செல்ல வேண்டும்..


அவர்களே பயம் நீங்கி அவர்களே செல்ல விருப்பப்படும் போது..

அவர்களை முதலில் ஏற்றி விட்டு தான் பின்னால் நாம் எற வேண்டும்.


மாறாக முதலில் நாம் கால் வைத்து பின்னால் அவர்களை ஏற்றலாம் என நினைத்தால் அவ்வளவு தான்.

No comments:

Post a Comment