தமிழகத்தில் தற்போது தேர்தல் கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்களுக்கு ஒரு கேள்வி :
எந்த எந்த துறைகளில் எவ்வளவு லஞ்சம் கொடுத்தால் காரியம் நடக்கும் என்ற லஞ்ச பட்டியலை வெளியிட தயாரா ?
VAO அலுவலகம் முதல் தலைமை செயலகம் வரை.
வக்கீல் குமாஸ்த முதல் நிதிபதி வரை.
எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்று அந்த பட்டியலை தயார் செய்து வெளியட முடியுமா ?.
இதன் முலம் மக்கள் மிகுந்த பையன் பெறுவார்கள்..
அதாவது அவர்கள் இந்த பட்டியலை வைத்து கொண்டு சரியான லஞ்ச தொகையை அந்த அந்த காரியங்களுக்கு அந்த அந்த துறை சார்ந்தவர்களிடம் சரியாக செலுத்த நேரிடும்.
இது மிகுந்த உதவியாக இருக்கும்.
நீங்க நாட்டல்லாம் திருத்த வேண்டாம்,நாட்டுல என்ன நடக்குதுன்னு சரியாக சொன்னாலே போதும்.
Panama Papers , Wikileaks போல நீங்கள் செயல் பட முடியுமா ?
#Reporters #News #Media #NewsPaper #India #Tamilnadu
+++++
25 August 2019
அரசுத்துறையில் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் ?(Survey)
OA 7 lakhs to Engineer 25 lakhs.
இவ்வளவு பணம் கட்டி வேலைக்கு சேர்ந்தால் அதை மீண்டும் சம்பாதிக்க லஞ்சம் வாங்கிட தான் செய்வான்..
ஏரியை பட்டா போட்டு விற்க தான் செய்வான்..
பான் பராக் குட்காவை விற்க தான் செய்வான்..
முதல் புள்ளியே தப்பா இருந்தால்
எல்லாமே தப்பா தான் இருக்கும்..
÷÷÷÷÷
முதலில் வேலைக்கு ஆட்களை நேர்மையாக தேர்ந்தெடுங்கள்..
இதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மறைமுக தொடர்பு உண்டு..
#governance #Economy
+++++
28 June 2020
காவல்துறையினர் லஞ்சம் வாங்கி பார்த்திருப்பீர்கள் ஆனால் காவல்துறைக்குள்ளேயே லஞ்சம் உள்ளது,
இது பதவி உயர்வுக்காக கொடுக்கப்படுகிற லஞ்சம்.
(மெரிட் தவிர்த்து, அல்லது தகுதி உள்ள நபர்களை தவிர்த்து அல்லது பணி மூப்பு தவிர்த்து)
தற்போதைய லஞ்ச விலை பட்டியல்.
இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு 10 முதல் 15 லட்சம் லஞ்சம் தேவை , கூடுதலாக மந்திரி சிபாரிசு தேவை.
DSP பதவிக்கு 25 லட்சம் தேவை + சிபாரிசு
குறிப்பு அரசியல்வாதி துணை இல்லாமல் DGP கூட ஆக முடியாது..
காவல்துறையில் அரசியலும் லஞ்சமும் முக்கிய இடம் வகிக்கிறது..
இவைகளை மாற்ற வேண்டும்..
பதவி உயர்வுக்கு லஞ்சமும் சிபாரிசும் வாங்கி வரும் நபர் அதை சம்பாதிக்கவே பார்ப்பார்..
இடையே பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்க வேண்டிய நபருக்கு கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது..
இது காவல்துறை மட்டுமல்ல அரசின் சகல துறைகளிலும் உள்ளது..
இதற்கு காவல்துறையும் விதிவிலக்கல்ல என்பதை சொல்லவே இந்த பதிவு.
÷÷÷÷÷
தனியார் துறைகளில் கூட தற்பொழுது பதவி உயர்வுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளது என்பதும் கசப்பான உண்மை.
No comments:
Post a Comment