Truth Never Fails

Saturday, June 29, 2019

சமூக நீதி காத்தவன்

 சமூக நீதி என்பது உலகம் எல்லாம் வேறு கோணத்திலும் இந்தியாவில் மட்டும் அவரவர் விருப்பப்படி வேறு கோணத்திலும் பயணிக்கிறது.


சமூக நீதி என்பது வெறும் வர்ணாசிரம அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவது என்பதில் இவர்கள் நிறுத்திக்கொண்டதைபோல் தெரிகிறது..


இதில் சாதி ஒழிப்புக்கு இடமே இல்லாதபடி செய்துவிட்டதைபோலும் தெரிகிறது..


மேலும் மேலும் இடஒதுக்கீடு விஸ்தீரம் அடைகிறதே தவிர சாதி பிரிவுகளை ஒழிப்பதற்கு ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை ..


தற்போதைய நிலைமையில்


சமூகநீதி காப்பவன் என்று சொல்லப்படும் நபர்கள் எல்லாம் சாதி சங்கம் நடத்தும் நபர்களாக இருக்கீறார்கள்..


சமுகநீதியின் சாரம்சமே சாதிகளை ஒழிப்பது என்கிற நிலையில் இருந்து தடம் மாறி..

தெருவுக்கு தெரு சாதிகளை ஒலிக்க செய்து வளர்ப்பது என்று மாறிவிட்டது..


#socialjustice #nocaste 


சமூக நீதி காத்தவன் என்கிற அடைமொழி கடைசியாக சாதிகளை ஒழித்த நபருக்கே பொருந்தும்..


அல்லது அதற்காக முனைந்த நபர்களுக்கே பொருந்தும்


இட ஒதுக்கீடு என்பது உரிமைக்கான தற்கால தீர்வு மட்டுமே..

அதையே பிடித்துக்கொண்டு இருக்க கூடாது..


அது மேலும் அடிமையாக்கும்..


(தற்போதைய சூழலில் உயர் சாதிகளும் இடஒதுக்கீடுக்குள் வந்துவிட்டது..

இட ஒதுக்கீடுக்கான அடிப்படை நோக்கமே முறிந்துவிட்டது)


Continue .....


#caste


Krishna Kumar G

No comments:

Post a Comment