Truth Never Fails

Tuesday, February 5, 2019

மக்கள் வழிகாட்டி கையேடு

'தமிழக அரசின் மக்கள் வழிகாட்டி' Guide ஒன்று தயாரிக்க வேண்டும்.
எந்தெந்த பிரச்சனைகளுக்கு எந்தெந்த அலுவலகத்தை நாட வேண்டும்,
எந்த அதிகாரியை சந்திக்க வேண்டும்,
எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்..

உதாரணத்துக்கு

பத்திர பதிவு செய்வது எப்படி
பட்டா வாங்குவது எப்படி

தெரு விளக்கு எரியவில்லை என்றால் எங்கு புகார் செய்ய வேண்டும்..
(மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி,கிராமம். )

வீட்டில் குழந்தை பிறந்தால்
எங்கு பதிய வேண்டும்.
மருத்துவமனையில் குழந்தை பிறந்தால்..
எங்கு பதிய வேண்டும்..

வீட்டு வரி,தண்ணீர் வரி எங்கு கட்டுவது..?

அந்தந்த அலுவலரின் பணிகள் என்ன?

ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த அலுவலர் பணி செய்யாமல் தட்டி கழித்தால்.. அவரை எப்படி பைபாஸ் செய்து .. வேலையை முடிப்பது..

அரசின் திட்டங்களின் செயல்பாடுகளை எப்படி எல்லாம் cross check செய்வது..

துறைகளின் இணையதள முகவரிகள்

இப்படி மக்களிடம் அன்றாடம் தோன்றுகிற கேள்விகளுக்கு பதில் தரும்படியாக..

ஒரு புத்தகத்தை அச்சிட வேண்டும்..
இணையதளத்திலும் பதிய வேண்டும்..

ஒட்டுமொத்த அரசின் சிஸ்டத்தையும் ஒரு கையெடுக்குள் கொண்டு வர தவறி இருக்கிறோம்..

(இதுவே ஊழல் நடப்பதற்கான பெரிய வழியாகவும்  இருந்து வருகிறது)

(இதை வைத்து அரசியல் செய்வதற்கான வழியாகவும் உள்ளது)

(ஏற்கனவே அரசின் இணையதளங்களில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை)

(ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை புதிய கையேடு விட தொடங்க வேண்டும்)

#Politics #Governance #Tamilnadu

Krishna Kumar G

No comments:

Post a Comment