Truth Never Fails

Monday, January 28, 2019

புது பென்சன் திட்டம்

 CPS திட்டம் வரும்போதே பலர் எதிர்த்தார்கள்,அதில் உள்ள ஒரே தவறு,அதில் உள்ள பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வார்கள் என்பதே.. 

வந்தா லாபம் போனா மயிரு


என்கிற அடிப்படையை தாரக மந்திரமாக கொண்டு,கொண்டுவரப்பட்டதே CPS எனப்பாடும் 

Contributory pension scheme.


பங்கு சந்தை என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூதாட்டம்..


உதாரணத்துக்கு மங்காதாவில் அரசு ஊழியர்களின் பென்சன் பணத்தை வைத்து சூதாடுவதைப்போல..


இது இந்தியா முழுவதும் உள்ள எல்லா அரசு துறைகளிலும் உள்ளது..

××××××


என் கருத்து என்னன்னா இனி பணியில் சேர்பவர்களுக்கு முழு சம்பளத்தையும் கையில் கொடுத்துடுங்க..

அவங்களுக்கு எந்த பென்ஷன் திட்டத்தில் விருப்பமோ..

அங்க அதில் நேரடியாக பணத்தை செலுத்தி பயனடையட்டும் ...


(குறிப்பு இனி அரசு பேஷன் திட்டத்தை செயல்படுத்த கூடாது)


LIC,HDFC ,ICICI பென்ஷன் திட்டங்களில் சேர்ந்துகொள்ளட்டும்..


(இப்படி தான் ஒரு அரசு நிறுவனத்தில் அதன் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கையில் கொடுக்க வழியில்லாமல் வங்கிகளில் ஆயுட்கால fixed டெபாசிட் செய்துவிட்டார்கள்.. அதிலிருந்து மாதம் மாதம் வட்டி மட்டுமே அவர்கள் கைகளில் கிடைக்கும்.. முழுபணமும் கிடைக்காது.. அந்த உரிய நபர் இறந்த பிறகே அவரது வாரிசுகளுக்கு முழு பணமும் கிடைக்கும், இதுபோல் வங்கிகளிடம் பேசி ஒரு வழிக்கு வரலாம் )


Idea 2:

(இதுவரை cps வழியாக உங்களிடம் பிடித்த பணம் என்று ஒரு demat கணக்கிற்கான பாத்திரத்தை அரசு ஊழியர்களின் கையில் கொடுத்துவிடுங்கள்.. ஆனால் நீங்கள் இதை பணி ஓய்வு பெறும் வரை எடுக்க முடியாது... என்று ஒரு வரையறை வையுங்கள்.. பின்பு நமக்கு நம்ம பணம் கிடைச்சிடும் என்கிற உத்தரவரம் அவர்களுக்கு கிடைத்துவிடும்..

இனி அவங்களாச்சி வங்கியச்சி.. ஆக அரசுக்கு தொடர்பே இல்லாமல் போய்விடும்)


#Tamilnadu #Governance 


Krishna Kumar G

No comments:

Post a Comment