Truth Never Fails

Saturday, February 9, 2019

நில உரிமை

 நிலமாற்றவன் நாடற்றவனாவான் என்று கணித்த சனாதனவாதிகள், 


ஒரு சமூகத்தை நிலமில்லாமல் 20 நூற்றாண்டுகள் வைத்திருந்தார்கள் பிரிட்டிஷ் பார்வையில் படும்வரை..


அந்த கொடுமையை பார்த்த பிரிட்டிஷ் ஆடிபோய்விட்டான்.. 

விதைப்பதும் அவன் அறுப்பதும் அவன் ஆனால் அதில் விளைந்த மிளகாயை அவன் நீராகாரம் சாப்பிடும்போது கடிக்க உரிமை இல்லையா என்று அதிர்ச்சிக்குள்ளானான்..


1892ம் ஆண்டு முதன் முதலில் மதராஸ் மாகாணத்தில் 12 லட்சம் ஏக்கர் புறம்போக்கு நிலம் பிரிட்டிஷ் அரசால் இவர்களுக்கு வழங்கப்பட்டது...

இதை கொடுக்கும்போதே இதை விற்க்க முடியாது விற்றால் அதே சமூக மக்களிடம் மட்டும் தான் விற்க்க முடியும் என்றும் சட்டம் போட்டான்..


1985ல் இந்திய அரசால் இந்த நிலங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டபோது 90% நிலங்கள் அவர்களிடம் இல்லை..


1947 முதல் அதாவது பிரிட்டிஷ் சென்ற பிறகு முதல் இன்று 2019 வரை..


அந்த DC land எனப்படும் பஞ்சமி நிலங்கள் முழுவதுமாக அபகரிக்கப்பட்டுவிட்டது..


பஞ்சமி நிலம்னா என்ன?


சனாதன வர்ணாசிரம முறையில் 5ம் படி நிலையில் உள்ளவன் நிலம்..

ஐந்தாம் நிலையை தான் பஞ்சமி என்கிறார்கள்..


1999 முதல் 2019 காலாண்டில் தொடங்கப்பட்ட SEZ,SIDCO,SIPCOT,புதிய பேருந்து நிலையம்,மருத்துவமனைகள்,கல்லூரிகள் என அரசின் திட்டங்கள் அனைத்துமே பஞ்சமி நிலத்தில் தான் அமைந்துள்ளது..


அப்படியென்றால் எவ்வளவு திட்டம்போட்டு காய் நகர்த்தியுள்ளார்கள் என்று பாருங்கள்..


To be continued நில உரிமை


#Caste #religion #Politics #land 


Krishna Kumar G



8 October 2019

அசுரன் படம் பார்த்துவிட்டு நான் எழுதிய சிறு விமர்சனத்தில் இப்படி சொல்லி இருந்தேன்..

என் பல பதிவுகளின் எச்சம் தான் அசுரன் என்று..


அதில் சிறு துளி 


(அசுரன் நாவல் சார்பு என்றாலும் நிஜத்திலும் அசுரன்கள் வாழ்கிறார்கள்)


10 september 2018

மேற்கு தொடர்ச்சி மலையின் வேர்வை மழையின் சாரல் வங்க கடலில் கரைந்தது..


இதயத்தை தொட்ட படம் சிகரத்தையும் நம்மை தொட வைக்கும்..


விமர்சனம் எழுத வேண்டாம்..

காரணம் எதை எழுதுவது என்று தெரியவில்லை..


இந்த படத்தின் கதை உருவாக்குதல் எப்படி நடந்து இருக்கும்..(story discussion)


சார் கதை நல்லா இருக்கு..

ஆனா அவங்க படுற கஷ்டத்தை முதல் காட்சியிலே மக்களுக்கு உணர்த்தனும்..


மலை அடிவாரத்தில் இருக்கும்

அந்த பாட்டி கடையில் இருந்து ஒருத்தவன் மலை மேல இருக்கிற ஊருக்கு பத்திரிக்கை கொடுக்க வரான்னு வச்சிப்போம்..


அவனை இவங்க கூட மலை ஏற வைப்போம்..

விசாலமான மலை தொடரில்

அவன் படுற கஷ்டத்தை பார்த்தாலே மக்களுக்கு புரிஞ்சிடும்..


அங்க இருந்து தான் நம்ம பயணம் தொடங்குது..


கதை முடிவில் அவர்கள் சுமந்த சுமையை நம் நெஞ்சில் விதைத்து விட்டு செல்கிறார்கள்..


நில உரிமை

என்கிற மைய கருவை

ஒரு இடத்திலும் சுட்டிக்காட்டாமல் நம்மை உணர வைக்கிறார்கள்..


விவசாய கூலிகளின் வலி....

முதலாளிகளாலும் வியாபாரிகளாலும் உணர முடியாது அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை..

(இது கம்யூனிசம்..)


சாஸ்திரத்தால் நில உரிமையை இழந்த இனத்தில் இருந்து

(இது என்ன இசம்?)


ஒரு வலி பதிவு..


Krishna Kumar G



No comments:

Post a Comment