Truth Never Fails

Friday, January 4, 2019

சாதியும் மதமும் மொழியும் வினையும்

 சனாதன தர்மம் :-  இந்து மதம் என்கிற பெயர் எந்த வேத நூலிலாவது உள்ளதா? அல்லது இது இந்த மதத்தின் வேத நூல் என்று சொல்லப்பட்டுள்ளதா?


ரிக் வேதத்தை பல முறை மாற்றி மாற்றி எழுதியுள்ளார்கள்..


அல்லது பகவத் கீதை,ராமாயணம் இந்து மதத்தின் வேத நூல் என்று சொல்லப்பட்டுள்ளதா ?..


இல்லவே இல்லை


சமஸ்கிருதத்தில் இப்படி இப்படி வாழ்ந்தால் செய்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது அது தான் சனாதன தர்மம்..


அப்படி ஒரு கூட்டம் சிந்து நதிக்கு அருகே இருந்தது அதை பார்த்த ஐரோப்பிய, அரேபிய,துருக்கிய வணிகர்கள்.. 

அவர்களை ஹிந்து என்றார்கள்..


அந்த ஒரு கூட்டத்தின் அடையாளம் தான் இன்று அதாவது குறிப்பாக முதல் மதங்களின் மாநாட்டுக்கு பிறகு இந்தியா முழுவது பார்க்கப்படுகிறது..


 இங்கு பல மத கூட்டங்கள் இந்து என்கிற அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது..


வர்ணாசிரம முறை : சாதி பிரிவை கொண்ட முறை ..

இது அவரவர் செய்யும் தொழில் சார்ந்து அமைக்கப்பட்டது..


பிறப்பால் அமைக்கப்பட்டதில்லை..


ஆனால் இன்றைய ஹிந்து என்பவன் 

(அதாவது சமஸ்கிருத சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாதவன்)


இதை பிறப்போடு ஒப்பிட்டு பார்க்கிறான்..


(இதற்க்கே இந்த காலத்தில் யாரும் குலத் தொழில் கூட செய்வதில்லை..) 


முன்பு தொழில் சார்ந்து கொடுக்கப்பட்ட ஒரு பெயர் தற்போது..

பிறப்பு சார்ந்து மாறியுள்ளது..


=======


சமஸ்கிருதத்தில் சனாதன தர்ம முறையை யார் வேண்டுமென்றாலும் வாழ்நாளில் பரிசோதித்து பார்க்கலாம்..


அதாவது எந்த மதத்தை சேர்ந்தவரும் இதுபோல் வாழ்ந்துகொண்டு அவர்கள் மதத்தை வழிபட முடியும்..


காரணம் சமஸ்கிருதத்தில் சனாதன தர்ம முறையை மதம் என்று குறிப்பிடவில்லை..

அது ஒரு life style .. அவ்வளவு தான்..


==++++++====


ஆனால் இன்றைய ஹிந்து மதம் நான் என்கிறவன் அந்த சனாதன தர்ம life style வாழாதவன்..


மூட நம்பிக்கைகள் நிறைந்தவன்..


வர்ணாசிரம முறையை தவறாக கடை. பிடிப்பவன்..


===++===


ஹிந்து என்பவன் யார் என்றே தெரியவில்லை..


அவன் கொள்கை என்ன என்பதும் புரியவில்லை


ஆனால் இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழ்பவன் ஹிந்து என்கிறான்..


  உலக மதங்களின் மாநாட்டிலும் 1893 இவர்கள் இப்படி  சொல்ல..


சீக்கியர்கள்,ஜெயின், புத்த மதத்தை சார்ந்தவர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள்..

அதன் காரணமாக அவர்களை ஹிந்து என்கிற சொல்லின் கீழ் வராமல் பிரித்தார்கள்..


அப்போது உலக மதங்களின் பாராளுமன்றம் என்கிற ஒரு அமைப்பு இருப்பது..


அய்யனார் கோவில் பூசாரிகளுக்கு தெரியாது..

ஏன் இன்று கூட தெரியாது..


தென் இந்தியாவை சேர்ந்த பல்வேறு மதங்களை ஹிந்து மதத்துடன் இணைத்துவிட்டார்கள்..


இன்றும் இது புரியாமலே பலர் உள்ளனர்..


ஒரு சிலர் விழித்துக்கொள்ள தொடங்கியுள்ளனர்..


உதாரணத்துக்கு : லிங்கியாத், சன்மார்க்கம், 


தமிழ் மதங்கள் என்று ஒரு புத்தகம் எழுதலாம் அவ்வளவு மதங்கள் உள்ளது.. இதில் வர்ணாசிரமே கிடையாது.. யார் வேண்டுமென்றாலும் பூசாரியாகலாம்..


சில தென் இந்திய அரசர்கள் வட இந்திய பூசாரிகளால் சில சூழல்களில் தவறாக வழிநடத்தப்பட்டும் உள்ளார்கள்..


அவர்களால் சில இன குழுக்கள் அழிக்கப்பட்டும் உள்ளது..

சில கோவில்கள் இடிக்கப்பட்டும் உள்ளது..


இதைப்பற்றி முழுசா பெருசா பேசானும்..


(Info graphics coming soon,1 week thinking about it)


 #blog  #religion #caste


Krishna Kumar G

No comments:

Post a Comment