சித்தர்கள் சமண ஆசிரியர்கள் :- பல துறைகளில் பல போதனை முதல் அதன் செயல்பாடுகள் வரை கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருந்தார்கள்..
இந்த சித்தர்களை அழித்தால் நாம் நம் ஆரிய கருத்தை உள்ளே திணிக்கலாம்..
என்கிற அடிப்படையில் சித்தர்களை கழுமரம் ஏற்றினார்கள்.. (சித்தரவதை)
சித்த நூல்களிலும் தங்கள் கருத்தியலை திணித்து..ஆரிய நூலாக மாற்றினார்கள்..
சித்தர்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார்கள்..
குலக்கல்வி முறை என்பது அவர்களிடம் இல்லை..
ஆரிய வருகைக்கு பின்பு..
குலக்கல்வி முறை வந்து.. ஒரு சாதிக்கே கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது..
அந்த காலகட்டத்தில் சித்தர் போதனைகள் அழிய தொடங்கியது..
முகலாய வருகைக்கு பின்பு தான்..
மக்கள் குழப்ப நிலைக்கு வந்தார்கள்..
ஆங்கிலேயே வருகைக்கு பின்பு
முற்றிலும் குழம்பினார்கள்..
இந்த குழப்பத்தால் குலக்கல்வி அழிக்கப்பட்டது அதன் நீட்சியாக ஆரியர்களும் தற்போது சித்தர்களை வழிபடுகிறார்கள்..
தற்போதுள்ள சித்த போதனைகள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் எஞ்சி இருப்பவை.. (சித்த வைத்தியம் ..)
சித்தர்கள் கற்றுக்கொடுத்த இசை வடிவம் முற்றிலும் அழிந்துவிட்டது.. காரணம் அதன் தொடர்ச்சி இல்லாமை..
(உங்கள் சித்தம் தெளிந்தால் சரிதான்)
வரலாறும் அதை தான் சொல்கிறது..
இன்று போய் திருவண்ணாமலையில் சித்தர்களை தேடுகிறான்..
இருந்தால் தானே கிடைப்பான்..
அவனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கழுமரம் ஏற்றிவிட்டார்கள்..
தற்போது ஆரியமும் சித்தர் முறையும் கலந்துவிட்டது.. ஹிந்து என்கிற பெயரால்..
எந்த சித்தராவது
சமஸ்கிருதத்தில் பேசியுள்ளார்களா?
சித்தர்கள் தமிழ் மொழி பேசியவர்கள்..
சமஸ்கிருத வழிபாட்டுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை..
அவர்களை அழித்ததே சமஸ்கிருத வழிபாட்டு முறைகள் தான்..
இன்று இரண்டும் கலந்துவிட்டது...
சித்தா மருத்துவ கல்லூரி உள்ளது
National Institute of Siddha
அதை மேலும் விரிவுபடுத்தி பல துறைகளை உருவாக்க வேண்டும்..
சமஸ்கிருத கலப்பில்லாமல் pure சித்தர் முறைகளை (போதனைகளை) தேடி எடுக்க வேண்டும் அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும்..
சித்த வைத்தியம் = தமிழர்(தமிழ்) வைத்தியம்
சித்தர் பாடல் = தமிழ் பாடல்
சித்த மதம் = தமிழ் மதம்
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு ?
நவபாசானம் என்பதை எவன் உருவாக்கினான்..
அதில் உருவான சிலைகளுக்கு சமஸ்கிருத அர்ச்சனை செய்ய அவன் யார்?
சித்தர் உருவாக்கிய மூலிகை சிலைகளுக்கு..
தமிழில் தான் பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும்..
நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்..
இன்று சித்தர் என்றால் ஹிந்து என்கிறார்கள்..
சித்தர் காலத்தில் ஏது ஹிந்து என்கிற வார்த்தை..
#tamil #religion
Krishna Kumar G
No comments:
Post a Comment