Truth Never Fails

Wednesday, January 2, 2019

மீதி இருப்பது தட்டும் மணியும்

 தாழ்த்தப்பட்டவங்க அவங்களை தாங்களே  தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்வதாலே தான் தாழ்த்தப்பட்டவங்க, 


என்று இப்படி சிலர் சொல்வதை கேட்டுள்ளேன்.. 


இல்லைனா மட்டும்.


நீ மதித்து கோவில் அர்ச்சகர் வேலையா கொடுக்கப்போற?


இல்லை எந்த பிரச்சனையும் இல்லாமல் உறவுகொள்ள போறியா?


ஒரு அடிமையாக்கப்பட்டவன் தன்னை அடிமை என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைவதில்லை..


அது கொடுக்கப்பட்ட(திணிக்கப்பட்ட) அடையாளம், 

பெற்றுக்கொண்ட அடையாளம் அல்ல..


(இதை இப்போது சொல்ல ஒரு காரணம் உள்ளது)

++==++

தாழ்த்தப்பட்டவன் என்கிற அடையாளத்தை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள்..


அந்த அடையாளத்தை நாங்க வைத்துக்கொள்ளவே விரும்பவில்லை..


சாதியால் அந்த அடையாளம் எங்கள் மீது திணிக்கப்படுவதால் தான் இந்த சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் ஏற்றத்தாழ்வே நிகழ்கிறது..


அதை ஒழிக்க அதிகம் போராடுவதே இந்த மக்கள் தான்..


அப்படி இருக்க நாங்கள் ஏன் ஊரை ஏமாற்ற வேண்டும்..


எங்களை கீழே வைத்து தான் மேலே உள்ளவனால் ஊரையே கொள்ளை அடிக்க முடிகிறது..

நில உரிமை

அதிகார உரிமை

என்கிற பெயரால்


கோவிலுக்கு வெளியே எங்களை வைத்து தான் அவர்களால் கோவிலையும் கொள்ளை அடிக்க முடிகிறது..

நிர்வாக உரிமை

என்கிற பெயரால்


நாங்கள் கோவிலுக்கு வரும் முன்னே கோவில் சிலைகள் திருடு போய்விட்டது..


மீதி இருப்பது

தட்டும் மணியும் தான்..


×××++××


(இந்த இரண்டு கேள்விகளும் அடிக்கடி சமூக வலைத்தளம் , Youtube வாயிலாக பேசப்படுபவை.. ஆகவே அதற்கு மேலே பதில் தந்துள்ளேன்.)


இதற்கு பின் இவர்களின் இட ஒதுக்கீடு மேல் உள்ள பொறாமை மற்றும் சாதி ஆதிக்கம் ஒளிந்து இருந்தது..


தற்போது 10% உயர் சாதியினரக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது..


இதில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்கிற வார்த்தையை சேர்த்து.. ஊரை ஏமாற்றுகிறார்கள்..


இப்போது யார் தாழ்த்தப்பட்டவன் ?

யார் யாரை ஏமாற்றுபவன்..?


பட்டியல் இன மற்றும் பிற இன மக்கள் தங்கள் இட ஒதுக்கீடையும் தாண்டி பொது பிரிவில்

அதிக மதிப்பெண்களால் சிவில் சர்விஸ் தேர்வுகளில் உள்ளே வருகிறார்கள்


ஆக பொது பிரிவில் இனி அவர்களுக்கு இடமில்லை என்கிற நிலை எதிர்காலத்தில் உருவாகும்..


என்பதை கணித்துவிட்டார்கள்..


ஆகவே தான்..


இப்படி ஏமாற்றுகிறார்கள்..


இப்போது எப்படி பார்த்தாலும் 10 நபர்கள் எல்லா வேலையிலும் இருப்பார்கள்..


இந்த quota provision எந்த போராட்டமும் இல்லாமல்.. சர்வ சாதரணாமக அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு தாங்களே ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்..


இதே அந்த 15% பெற அம்பேத்கார் முதல் இன்று வரை திறக்கப்படாத கதவுகளை திறக்க எட்டி உதைத்துக்கொண்டே இருக்க நேரிடுகிறது..


இதில் அம்பேத்கார் என்கிற பெயர் கூட அவரின் பார்ப்பன ஆசிரியரின் பெயர் என்கிற பெருமை வேறு..


அப்படினா என்ன அர்த்தம் நீ முன்னேறினாலும் அது நான் போட்ட பிச்சை தான்டா என்று சொல்லாமல் சொல்வதைப்போல் பேசுகிறார்கள்..


இந்த இழி பேச்சுகளுக்கு தடை போட்ட இட ஒதுக்கீடு முறை.. 

தற்போது அதை அழிக்க துடித்த சக்திகளிடமே சென்றுள்ளது..

+++××+++


இந்த குழப்ப நிலையை மேலும் குழப்பி நமக்கு சாதகமான ஆயுதமாக மாற்ற வேண்டும்..


இவ்வளவு தான் இப்பொழுது சொல்ல முடியும்..


2020ல் செய்து காட்டப்படும்....


#NoCaste 


#caste #India #Equalism #equality


Krishna Kumar G

No comments:

Post a Comment