Truth Never Fails

Wednesday, January 23, 2019

சிறுதெய்வ வழிபாடு வரலாற்று நாயகன் வழிபாடு

 மதுரை வீரன்


தமிழ் தெய்வ வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லிவிட்டார்கள்..


அப்போ பெரு தெய்வ வழிபாடு என்னான்னு கேட்டா 

சமஸ்கிருத தெய்வ வழிபாடு என்கிறார்கள்..


இது என் பாட்டி (அம்மா வழி) வீட்டில் எடுத்த புகைப்படம்..


அங்கு மதுரை வீரன் தான் முக்கிய தெய்வம்..


(தாய் வழியில் குல தெய்வ வழிபாடு பொருந்தாது என்பதால் நான் இவ்வளவு நாட்கள் இதை கவனிக்கவில்லை)


{தந்தை வழியில் புத்துப்பட்டு அய்யனார் (புதுவை அருகே உள்ள ஊர்) (ECR)}


இவையெல்லாமே தமிழ் தெய்வ வழிபாடுகளின் கீழ் வரும்..


 சமஸ்கிருத தெய்வங்களை வழிபாடுபவர்கள் இவைகளை சிறு தெய்வம் , அதாவது இவைகள் எங்கள் தெய்வங்களுக்கு கீழ் சிறு தெய்வங்களாக உள்ளது என்று ஒரு மாயை வரையறையை உருவாக்கி வைத்துள்ளார்கள்..


×××××


மதுரை வீரன் கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும்..

அதுவும் வரலாற்றில் பதியப்பட்ட ஒரு சாதிய கொலை தான்...


×××÷÷


இங்கு தமிழ் தெய்வம் என்று சொல்லப்படுவது அவதாரங்கள் அல்ல.. அது முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு வரலாற்று நாயகனை நினைவு கூறும் ஒரு நிகழ்வே வழிபாடாக கருதப்படுகிறது..


÷÷÷÷

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


#Religion #Tamil 


புகைப்படத்தின் கீழ் ஒரு சாட்டை உள்ளது பாருங்கள்..

அது நான் சிறு பிள்ளையாக இருந்த போதில் இருந்து பார்க்கிறேன்..


Krishna Kumar G


No comments:

Post a Comment