10 ஆண்டுக்கு முன்பே இதே மாதம் அப்போலோ மருத்துவமனையில் கழிந்தது..
ஈழத்தில் நடக்கும் போர் பற்றி சரியான செய்தியோ தகவலோ தெரியாமல் இருந்தேன்.
2G GPRS மொபைல் வழியாக lankasri இணையதளத்தில் வரும் செய்திகளை படிப்பேன்..
ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு திரும்பினேன்..
முன் கதவு அடைக்கப்பட்டு இருந்தது.
(ஜெயா இருந்த போது எப்படி இருந்ததோ அப்படி)
எப்போதும் திறந்தே இருக்கும்..
ஆனால் அன்று மூடி இருந்தது..
அடையாள அட்டையை காட்டி வாசல் கதவு வழியாக நுழைந்தேன்..
ஆனால் மெயின் ப்ளாக் கதவு பூட்டப்பட்டு இருந்தது..
ஆள் நடமாட்டமே இல்லை..
வாசலில் ஒரு vip கார் கூட இல்லை..
சரி emergency வழியாக உள்ளே செல்லலாம் என்று சென்றேன்..
வழக்கமாக 4-5 ஆம்புலன்ஸ்கள் நிற்கும் ஆனால் அன்று ஒரு சுமோ கார்
ஒரு கட்சி கொடியுடன் நின்றது..
அங்கும் ஆள் நடமாட்டமில்லை..
கதவை திறந்தேன்.. நேராக 4 லிப்ட் இருக்கும் ஆனால் இன்னும் அதற்கு 2 கண்ணாடி கதவுகளை திறக்க வேண்டும்.
அதுவும் பூட்டப்பட்டு இருந்தது..
சரி என்று இடதுபுறம் இலவச STD போன் ஒன்று இருக்கும் ..
அதன் அருகே சிறு கதவு இருக்கும்.. அதை திறந்தால் ஒரு சிறு அறை வரும் அதை தாண்டினால் மெயின் ப்ளாக் லாபி செல்லலாம்..
அதை திறந்தேன்..
அதிர்ச்சி ..இருட்டில்
50க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள்..
(உடை காட்டிக்கொடுத்தது)
பெட்டி படுக்கையுடன்.. சிலர் துணி முட்டையுடன் தரையில் அமர்ந்திருந்தனர்..
சிலர் சேறு காய்ந்த உடையுடன் இருந்தார்கள்..
என்னை எல்லாரும் பயத்துடன் பார்க்க எனக்கு பயம் வந்துவிட்டது..
சில இலங்கை இராணுவ வீரர்களும் இருந்தார்கள்..
கடகடவென கடந்து மெயின் லாபி வந்தேன்..
மெயின் லாபியில் யாருமே இல்லை..
இரவிலும் பரபரப்பாக இருக்குமிடம்.. ஒரு காபி ஷாப் இருக்கும்.. அதுவும் மூடி இருந்தது..
பார்மஸியும் மூடி இருந்தது..
லிப்ட் வேலை செய்யவில்லை..
அதை சுற்றி இருக்கும்
Slope வழியாக மேலே ஏறினேன்..
......
என் மண்டையில் ஓடியதெல்லாம்..
இலங்கையில் என்ன செய்தி என்பது தான்..
பலரை தொலைபேசியில் அழைத்து..
செய்தி பார்த்தீங்களா இலங்கை பற்றி ஏதாவது செய்தி இருக்கா என்று தொடர்ந்து கேட்டேன்..
எல்லாருமே ஒன்றுமில்லை என்றார்கள்..
மொபைல் செய்திகளில் தேடினேன்..அதிலும் ஒன்றுமில்லை..
நடந்ததை என் அப்பாவிடம் சொல்லிவிட்டு..
தூங்கிவிட்டேன்..
காலை எழுந்து வந்து ..கீழே பார்த்தேன்..
வழக்கம் போல் மருத்துவமனை இயங்கிக்கொண்டு இருந்தது..
எந்த தடயமும் இல்லை..
=======
வெளியே நின்ற அந்த ஒரு சுமோ வண்டி..
அதில் இருந்த அரசியல் கொடி..
யார் என்று சொல்லனுமா ?..
யார் யார் போரில் காயமடைந்து உயர் சிகிச்சை பெற சென்னை கொண்டு வரப்பட்டார்கள் ?
இவையெல்லாம் இரவில் நடந்தது..
எந்தெந்த கட்சிகள் இதற்கு உதவி செய்தது.?
÷÷÷÷÷
(ஏற்கனவே இந்த பதிவை சில ஆண்டுகள் முன்பு பதிவு செய்தேன்.. பிறகு அழித்துவிட்டேன்..
தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்டது.. )
(ஈழ போர் உச்சத்தில் இருந்த நேரம்)
#blog #Tamil #Srilanka 2009 to 2019
Krishna Kumar G
No comments:
Post a Comment