Politics :
இப்ப நான் ஒரு வழிபாட்டு தளத்திற்கு போகிறேன்
வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு
2 பேரும் சண்டை போடாதீங்க
நான் உள்ளே போயிட்டு வெளியே வந்ததும் ஆளுக்கு 1000 ரூபாய் தரேன்..
நீ என் செருப்பை பார்த்துக்கோ
நீ உள்ளே யாரும் வராமல் பார்த்துக்கோ
என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றதும்
இவர்கள் நான் வெளியே வரும் வரை காத்து இருப்பார்கள்
அவர்களின் சண்டையை மறந்து
காரணம் 1000 ரூபாய் கிடைக்கும் இல்லையா
ஆனால் நானோ
அங்குள்ள உண்டியலை எடுத்துக்கொண்டு
பின்பக்கமாக சென்று விடுவேன்..
இப்ப அந்த 2 பேரும்
அவர்களுக்கே தெரியாமல்
வழிபாடு தளத்தில் கொள்ளை நடக்க உதவியாகவும் இருந்துள்ளார்கள்.
இப்ப நான் என்பதை அமெரிக்கா என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
ஏமாந்த அந்த 2 பேரும் யார் ?
No comments:
Post a Comment