Truth Never Fails

Saturday, December 21, 2024

எல்லாரும் தான் பொய் சொல்றாங்க நாங்க பொய் சொல்லுவது தப்பா என கேட்கும்.மக்கள்

 இன்று ஒரு ஊருக்கு சென்றேன் வெள்ளம் பாதித்ததாக சொன்னார்கள்..


எந்தளவுக்கு தண்ணீர் வந்தது என்று கேட்டேன்..

நெஞ்சு அளவு வந்தது என்றார்கள்..


வீட்டுக்குள்ள தண்ணி வந்ததா என்றேன் நல்லவேளை இல்லை வாசல் படி அளவு தான் வந்தது உள்ளே வரவில்லை என்கிறார்கள்.


அய்யோ நம்ம மக்களுக்கு பொய் கூட ஒழுங்காக சொல்ல தெரியவில்லை.


இருந்தாலும் அந்த ஊருக்கு எந்த அளவு தண்ணீர் வந்தது என்கிற தகவல் எனக்கு முன்பே தெரியும்..

வீடியோவும் பார்த்து இருந்தேன்..

SP நேரடியாக சென்று மீட்பு பணி செய்தார்..


வீட்டின் சுவர்களை பார்த்தேன்..

வெள்ளத்தின் சுவடு கால் அடி உயரம் தான் இருந்தது.


ஏதோ ஒருசில தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் தான் மார்பு அளவு தண்ணீரில் சிக்கி இருந்துள்ளது.


ஆனால் ஊரே மார்பளவு தண்ணிரில் சிக்கி இருந்ததாக சொல்கிறார்கள்.


தென்பெண்ணை ஆற்றை ஓட்டி உள்ள நிலங்களில் வாழை கரும்பு நெற்பயிர்கள் பூ செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது.


தேக்கு தென்னை எல்லாம் நன்றாக தான் உள்ளது 

இதுபோல மரங்களை ஆற்றை ஒட்டி நடவு செய்யலாம். கரைகளும் பலமாக இருக்கும்..

ஒருகாலத்தில் பனைமரங்கள் இருந்தது தற்பொழுது ஒரு மரம் கூட இல்லை.


ஒரு வாரம் சோறு போட்டதாக சொல்லும்

மக்கள் நிவாரணம் வாங்கி நடந்ததை மறந்துவிட்டார்கள்.

No comments:

Post a Comment