ஶ்ரீரங்கம் கோவில் உள்ளே சென்று ராமானுஜர் சிலை உட்பட அனைத்து சிலைகளையும் தொட்டு பார்த்துள்ளேன்
திருப்பாபுளியூர் கோவில் சிவ லிங்கத்தை தொட்டு கழுவி உள்ளேன்.
இவை எல்லாம் எதேச்சையாக நடந்தது..
ராமானுஜர் சிலையை தொடும்போது அது ஜீவசமாதி சிலை என்பது கூட எனக்கு தெரியாது..
பின்பு சமூகவலை தளங்களில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.
திருப்பாபுளியுர் சிவ லிங்கம் சேதமாக உள்ளது..
ஆங்காங்கே உடைந்து உள்ளது
அதை நகைகள் கொண்டு மறைக்கிறார்கள்
அதை நேரடியாக பார்த்தவன் என்பதால் சொல்கிறேன்..
அது ஒரு gimmick வேலை தான்
கருவறை உள்ளே அரசர்கள் நின்று வழிபட இடமுள்ளது
சிவ லிங்கம் உள்ள இடத்தில் இருந்து பார்த்தால்..
கொடி மரம் வாசல் என அனைத்து கட்டிட கலையும் மிக நேர்த்தியாக இருப்பதை பார்த்து பிரமித்துவிட்டேன்
Symmetrical என்பார்களே அதுபோல உள்ளது..
அங்கிருந்து தான் மொத்த கட்டிடத்தையும் அளந்து இருப்பார்கள் .
என் அனுபவத்தில் சொல்கிறேன்
கருவறைக்குள் அனைவரும் போகலாம்
தவறே கிடையாது..
அதற்காக ஆயிரம் நபர்கள் ஒரே நேரத்தில் சென்றால் அந்த இடம் வீணாகிவிடும் நகைகள் திருட்டு போக வாய்ப்பும் உள்ளது..
காரணம் உள்ளே அரசர்கள் நிற்க இடம் உள்ளது.
வெளியில் இருந்து பார்த்தால் அது தெரியாது..
அவ்வளவு நேர்த்தியாக கட்டிட கலை உள்ளது.
இன்று இளையராஜாவை ஆண்டாள் கோவில் உள்ளே விடவில்லை என கேள்விப்பட்டேன்..
அது தேவையில்லை
தினமும் 10 நபர்களை முன்பதிவின் மூலம் உள்ளே விடலாம்.
அதில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்
இதனால் எந்த புனிதமும் கெட்டுபோகாது..
மக்களுக்கும் இயலாமை உணர்வு இருக்காது.
உண்மையான ஆன்மீகம் என்பது விக்கிரகங்களை கடந்தது..
ஒருகாலத்தில் கோவில் உள்ளே செல்ல முடியாது
ஆனால் இன்று அப்படியல்ல
நாளை கருவறை உள்ளே அனைவரும் செல்ல முடியும்.
அதற்கு நான் நானே முன்னெடுப்பு
No comments:
Post a Comment