பன்னுக்கு அசிங்கபட்ட தொழிலதிபர் இனி அடுத்த தனது முதலீடுகளை இந்தியாவில் செய்யமாட்டார் என்பது வருத்ததுக்குறிய விசியம்..
இதுதான் உங்களுக்கு புரியமாட்டிங்குது ஆணவம் முறையான ஆட்சி தராது.
அது சாதி ஆணவமாக இருக்கலாம்
மத ஆணவமாக இருக்கலாம்
அதிகார ஆணவமாக இருக்கலாம்
+++++++
இதை யோசிச்சி எழுதின IRS அதிகாரியை பார்க்க விரும்புகிறேன்..
எந்த பள்ளிக்கூடத்தில் படித்தார் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
பாருங்க 15% குடிமை பணி அதிகாரிகள் ஏற்கனவே தொழில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு கல்லூரி முடித்துவிட்டு 365 நாளும் குடிமை பணி தேர்வுக்கு மட்டுமே படித்தவர்களை தேர்வு செய்யாதீர்கள்..
குறைந்தது ஏதாவது வேலை அனுபவம் உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்வும். .
விவசாய பணியாவது செய்திருக்க வேண்டும்
என்று புது விதியை எழுதுங்கள்.
எந்த வேலை அனுபவமே இல்லாதவர்களிடம் அதிகாரம் கொடுக்கபடுவதால் நிர்வாக திறன் எப்படி வரும் ?
வெறும் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ?
அரிசி விலை உயர்ந்துள்ளது
ஆனால்
கொள்முதல் விலை குறைத்துள்ளது
முலை வரியை விட கொடுமையான வரி இந்த
பன் கிரீம் வரி
உன் வாழ்வில் நீ இனிமையை சேர்த்தால் கூடுதல் வரி கட்ட வேண்டும் என்பது தான் இந்திய வரி அமைப்பின் நெடும் தொடர் நிகழ்வாக உள்ளது..
ஒரு தொழில் அதிபரை மன்னிப்பு கேட்க வைக்க உங்களால் முடியும்.
பொதுஜனம் துப்பிவிடும்
மக்கள் அன்புக்கு தான் அடிமையே தவிர
அதிகாரத்துக்கு அல்ல..
+++++++
ஒரு தொழில் அதிபர் தொழில் ரீதியாக சொல்லும் கருத்தை
தனக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்..
அதை முறையாக சரி செய்து
அவரே பாராட்டும் படியாக ஒரு நிகழ்வு அமைவது தானே சிறப்பாக இருக்கும்.
ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற வக்கில்லை
மக்கள் அதிகாரம் உனக்கு எதற்கு ?
அந்த ஆளு தொழிலை பாதுகாக்க மன்னிப்பு கேட்கலாம்
நாட்டில் வாழ்பவன் அனைவரும் கேட்க மாட்டான்.
IT,ED RAID களில் சிக்கும் நபர்களை VC மூலம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வைத்தும் இந்த பெண் ரசிக்கிறார் என்கிற உண்மையையும் சொல்லி அமைகிறேன்..
EXAMPLE: முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் கேட்டார் என்கிற தகவலும் என்னிடம் உண்டு அப்பொழுது அவர் ஒரு மாநில அமைச்சர்.
இந்த பெண் இதே பழக்கமாக உள்ளார்.
இது போன்ற பெண்களுக்கு வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்று வரலாற்று புத்தக பக்கங்களை புரட்டி பார்க்கவும்.
++++++
GST மற்றும் வரி செலுத்துபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என பெருமையாக சொல்லும் அமைச்சர் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என சொல்வதில்லை
கடன் தொகை கூடி இருக்கலாம் ஆனால் கடன் பெறுபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என சொல்வதில்லை
தொழில்கள் அதிகம் பதிவு செய்யப்படலாம்
ஆனால்
எவ்வளவு சீக்கிரத்தில் அது விற்கப்படுகிறது அல்லது மூடப்படுகிறது என சொல்வதில்லை..
GDP, Inflation, interest, bank fraud, scam பற்றி
Finance ministry வெள்ளை அறிக்கை விட தயாரா ?
+++++
No comments:
Post a Comment